Home
News

உள்ளே வராதே வெளியே போ! ரஷ்யாவை அசிங்கப்படுத்திய அமெரிக்கா! சொன்ன காரணம் தான் அல்டிமேட்!

உலகளாவிய நிகழ்வொன்றில் ரஷ்ய நிறுவனங்களை "உள்ளே வர வேண்டாம்" என்று கூறி அமெரிக்கா அவமானப்படுத்தி உள்ளது.

அதென்ன நிகழ்வு? ரஷ்யாவை (Russia) பார்த்து அமெரிக்கா (America) இப்படி கூறியதற்கு என்ன காரணம்? இதோ விவரங்கள்:

ரஷ்யா வர தேவையில்லை!

ரஷ்யா வர தேவையில்லை!

அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸில் (Las vegas), உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வான சிஇஎஸ் 2023 (Consumer Electronics Show - CES 2023) நடந்து வருகிறது. கடந்த ஜனவரி 5 ஆம் தேதியன்று தொடங்கிய இந்நிகழ்வு ஜனவரி 8 ஆம் தேதி வரை நடக்க உள்ளது.

ஆண்டுதோறும் நடக்கும் இந்த நுகர்வோர் மின்னணு கண்காட்சிக்கு ரஷ்ய நிறுவனங்கள் வர தேவை இல்லை என்றும், அவர்களின் தொழில்நுட்ப தயாரிப்புகளானது காட்சிப்படுத்த அனுமதிக்கப்படாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

சிஇஎஸ் 2023 நிகழ்ச்சியை நடத்தும் நுகர்வோர் தொழில்நுட்ப சங்கத்தின் தலைவரும் மற்றும் அமெரிக்கருமான கேரி ஷாபிரோ, இந்த நிகழ்வுக்கு ரஷ்யா "வரவேற்கப்படவில்லை" என்று கூறியதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

நினைவூட்டும் வண்ணம், கடந்த பிப்ரவரி 24, 2022 அன்று ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தது; ரஷ்யாவின் இந்த செயல், உலக நாடுகளின் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பின்னர், அமெரிக்கா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பல நாடுகளானது ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன.

நிலவும் அரசியல் சூழ்நிலையை கருத்தில் கொண்டு, 2023 ஆம் ஆண்டு சிஇஎஸ் (CES 2023) நிகழ்விற்கு ரஷ்யாவை நாங்கள் வரவேற்கவில்லை; அவர்களை அனுமதிப்பது பொருத்தமானதாக இருக்கும் நாங்கள் உணரவில்லை என்றும் ஷாபிரோ கூறியதாக பிபிசி தெரிவித்துள்ளது.

அவ்ளோ ஆர்வமா இருந்தா.. வேற நாட்டுக்கு போங்க!

அவ்ளோ ஆர்வமா இருந்தா.. வேற நாட்டுக்கு போங்க!

இதுபற்றி மேலும் கூறுகையில், இது அமெரிக்காவின் சட்டம் மற்றும் கொள்கைகள் தொடர்பான விஷயம் அல்ல, இது ஒரு கூட்டமைப்பின் கொள்கை ஆகும் என்றும் ஷாபிரோ குறிப்பிட்டுள்ளார்.

ஒரு சில ரஷ்ய நிறுவனங்களானது தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்துமாறு கேட்டு கொண்டதாகவும், "அவ்வளவு ஆர்வமாக இருந்தால், வேறு நாட்டிற்கு இடம்பெயரலாம்" என்று கூறப்பட்டதாகவும் கூட தகவல் வெளியாகி உள்ளது.

உக்ரைன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதா?

உக்ரைன் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டதா?

சிஇஎஸ் 2023 நிகழ்வில் சுமார் ஒரு டஜன் உக்ரேனிய தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்குகொண்டுள்ளன. அந்நிறுவனங்கள் பல வகையான கான்செப்ட்களை (Concept) வெளிப்படுத்திய வண்ணம் உள்ளனர்.

இந்த சிஇஎஸ் 2023 (CES 2023) நிகழ்வில் சுமார் 1,00,000 பேர் பங்கேற்பார்கள் என்றும், உலகம் முழுவதிலுமிருந்தும் 3,000 க்கும் மேற்பட்ட "கண்காட்சியாளர்கள்" தங்கள் புதிய தயாரிப்புகளை காட்சிப்படுத்துவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எந்தெந்த நிறுவனங்கள் புதிய அறிமுகங்களை செய்துள்ளனர்?

எந்தெந்த நிறுவனங்கள் புதிய அறிமுகங்களை செய்துள்ளனர்?

சிஇஎஸ் 2023 நிகழ்வில் ஆசஸ் (Asus), லெனோவா (Lenovo), ஏசர் (Acer), டெல் (Dell) போன்ற நிறுவனங்கள் தங்களுடைய லேட்டஸ் லேப்டாப்களை அறிமுகம் செய்துள்ளன.

மேலும் குவால்காம் (Qualcomm) நிறுவனமானது ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களுக்கு சாட்டிலைட் கனெக்டிவிட்டியை வழங்கும் ஸ்னாப்டிராகன் சாட்டிலைட்-ஐ (Snapdragon Sattelite) அறிமுகம் செய்துள்ளது. நினைவூட்டும் வண்ணம் தற்போது வரையிலாக ஆப்பிளின் ஐபோன் 14 சீரிஸில் மட்டுமே சாட்டிலைட் கனெக்டிவிட்டி வழியிலான எஸ்ஓஎஸ் அம்சம் அணுக கிடைக்கிறது.

சாம்சங் நிறுவனம் புதிய ஸ்மார்ட் டிவிகளை அறிமுகம் செய்துள்ளது. சென்ஹைசர் நிறுவனமானது டூயல் டியூனிங் அம்சத்துடன் IE 200 இயர்போன்ஸை அறிமுகப்படுத்துகிறது. இப்படியாக பல நாடுகளின் மற்றும் பல நிறுவனங்களின் புதிய தயாரிப்புகள் சிஇஎஸ் 2023 கூடாரத்தின் கீழ் உலகை சந்தித்த வண்ணம் உள்ளன.

More from GizBot

Best Mobiles in India

English summary
Russia is Banned from CES 2023 and Not Allowed To Displaying Their Technology Products Here is Why
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X