எதிரிகளை துவம்சம் செய்ய ஏவுகணைக்காக ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்.!

  இந்தியாவுக்கும் ரஷ்யாவுக்கும் இடையே எஸ் 400 ஏவுகணை ஏவ உடன்படிக்கை செய்யப்படுகின்றது. இதற்காக விரைவில் கையெழுத்து ஆகும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

  யாரும் பார்க்க கூடாது, கூகுள் மறைக்கும் உலகின் ரகசிய இடங்கள்.!!

  ஏற்கனவே இந்தியா விண்வெளி மற்றும் ஏவுகணைகள் தயாரிப்பதில் சிறந்து விளங்கினாலும். ரஷ்யாவுடன் பரஸ்பரம் செய்து கொள்ளுவதினால் எதிரிகளை கட்டாயம் இந்தியா துவம்வம் செய்யும் என்று தெரிகின்றது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  அத்துமீறும் தீவிரவாதம்:

  எல்லைகளை தாண்டிய இந்தியாவுக்கு நுழைந்து தாக்கும் ஏவுகணைகளையும் தீவிரவாத தடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளவும் இந்தியா முற்றிலும் தயாராகி வருகின்றது.

  இதற்காக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளையும் இந்தியா தீவிரமாக முன்னெடுத்து வருகின்றது. இதற்காக ஏவுகணைகள் மற்றும் பாதுகாப்பு கருவிகள் வாங்கவும் இந்தியா நடவடிக்கை எடுத்து வருகின்றது.

  ரஷ்ய அதிபர் இந்தியா வருகை:

  இந்நிலையில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் 2 நாள் பயணமாக இந்தியாவுக்கு நாளை வருகிறார். அக்டோபர் 5இல் இந்தியா பிரதமர் நரேந்திர மோடியை புடின் சந்தித்து பேசுகிறார்.

  எஸ் 400 ஏவுகணை:

  சந்திப்பின் போது, இந்தியாவுக்கு எஸ் 400 வகை ஏவுகணைகளை விற்கும் உடன்படிக்கையில் விளாடிமிர் புடின் கையொப்பமிடுவார் என அதிபரின் வெளியுறவு ஆலோசகர் யூரி உசாகோவ் தெரிவித்துள்ளார்.

  இலக்கை துல்லியமாக தாக்கும்:

  நகரும் வாகனங்களில் இருந்து புறப்படும் வான் இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன் கொண்ட எஸ் 400 வகை ஏவுகணை ரூ.36 ஆயிரம் கோடி மதிப்பு ஆகும். இந்த ஏவுகணையை இந்திய வாங்க இருக்கின்றது.

  பாகிஸ்தான், சீனா எல்லை:

  எஸ்400 ஏவுகணைகள் இந்தியா- பாகிஸ்தான் மற்றும் இந்தியா- சீனா எல்லை பகுதிகளில் பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் என்று தெரியவருகின்றது. மேலும் அத்து மீறும் எல்லை மீறல்களையும் இதன் மூலம் தக்கபதிலடி கொடுக்க முடியும் என்று நம்படுகின்றது.

  புதின் ஒன்றும் முட்டாள் இல்லை, 'கைவசம்' நிறையா இருக்கு..!!

  ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நாம் நினைக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தவர் இல்லை என்றும், ரஷ்யாவிற்குள் வெளியாகும் புதின் புகைப்படங்கள் அவரை அன்பான மென்மையான ஒருவராகவும், பிற நாடுகளுக்காக வெளியிடப்படும் புதின் புகைப்படங்கள் அவரை உலகின் சக்தி வாய்ந்த மனிதராகவும் காட்சிப்படுத்துகிறதே தவிர நாம் நினைக்கும் அளவிற்கு சக்திவாய்ந்தவர் இல்லை என்றும் ரஷ்ய எதிர்ப்பு நாடுகள் கூறிக்கொண்டு திரிந்தாலும், தன் நிலைபாட்டையும் தனது பிடிவாத கொள்கைகளையும் எப்போதும் நழுவ விடாது நிற்கும் விளாதிமிர் புதினுக்கு பின்புலமாய் அவரது நாட்டின் அதிநவீன ஆயுதங்கள் துணை நிற்கின்றன என்பது தான் நிதர்சனம்.

  அப்படியாக ரஷ்யாவின் வசம், அதாவது புதினின் கைவசம் இருக்கும் உலகை மிரள வைக்கும் வல்லமை கொண்ட அதிநவீன 6 ஆயுதங்கள் மற்றும் அதன் திறன்கள் பற்றிய தொகுப்பே இது..!

  லாஸ் (LAWs) எனப்படும் அதிநவீன லேசர் ஆயுத அமைப்பில் (Laser Weapon System) அமெரிக்காவிற்கு இணையாக ஒரு வகைப்படுத்தப்பட்ட நிலையில் ரஷ்யா இருக்கிறது.

  ட்ரோன்கள் தொடங்கி கப்பல்கள் வரை :

  இவ்வகையான அதிநவீன லேசர் ஆயுத அமைப்புகள் மூலம் மிகவும் துல்லியமான முறையில் எதிரிகளின் பறக்கும் ட்ரோன்கள் தொடங்கி கப்பல்கள் வரை தாக்கி அழிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது

  05. ஏர் டிபென்ஸ் ஏவுகணைகள்

  உலகின் அதிநவீன ஆயுதங்களின் பட்டியலில் பேல்லிஸ்டிக் மிசைல்ஸ் (ballistic missiles) எனப்படும் கண்டம் விட்டு கண்டம் தாண்டி தாக்கி அழிக்கும் ஆயுதங்களுக்கு எப்போதுமே ஒரு இடம் உண்டு. அப்படியாக ரஷ்யாவிடம் இருக்கும் பேல்லிஸ்டிக் ஆயுதம் தான் எஸ்500..!

  செயற்கைகோள்களை கூட தாக்கும் :

  எஸ்-500 ஆனது ஒரே நேரத்தில் 5 முதல் 10 கண்டம் விட்டு கண்டம் தாண்டி அழிக்கும் ஏவுகணைகளை செலுத்தும் வல்லமை கொண்டது, மேலும் விண்வெளியில் குறைவான சுற்றுவட்டப்பாதையில் இருக்கும் செயற்கைகோள்களை கூட தாக்கும் என்பதும் குறிபிடத்தக்கது.

  04. ஹெவி-லிப்ட் ஸ்ட்ராடெஜிக் விமானங்கள் :

  அதாவது, 30 டன் எடை வரையிலாக ஆயுதங்களை சுமக்கும் போர்த்திறஞ்சார்ந்த விமானங்கள். இந்த வரிசையில் மிகவும் அதிநவீன மயமாக்கப்பட்ட ரஷ்யாவின் ஐந்தாம் தலைமுறை போர் விமானம் தான் - சுக்கோய் டி-50. அடுத்த தலைமுறை : பாக்-டா (PAK -DA)

  'ஸ்டீல்த்' தன்மை :

  பாக்-டா, ரஷ்யா எதிர்நோக்கும் அளவிற்கு ஒரு ஹைப்பர்சோனிக் பாம்மர் விமானமாக இது இல்லாவிட்டாலும் கூட எதிரிகளின் க்ரூஸ் ஏவுகணைகளை கண்டறிந்து தாக்கி அழிக்கும் வகையிலான 'ஸ்டீல்த்' தன்மை (Stealth) கொண்டதாக இருக்கும் என்று நம்பப்படுகிறது

  03. ஹைப்பர் சோனிக் ஏவுகணைகள் :

  ரஷ்யாவின் பல ஹைப்பர் சோனிக் ஏவுகணை திட்டங்கள் தோல்விகளில் முடிந்தாலும்கூட, அது தனது முயற்சியை கைவிடுவதாய் இல்லை. ரஷ்யாவின் யூ-71 வெற்றி அடையும் பட்சத்தில் அது மணிக்கு சுமார் 7000 மைல்கள் வேகத்தில் சென்று இலக்குகளை துவம்சம் செய்யும் என்பது குறிப்பிடத்தக்கது.

  பிரம்மோஸ் 2

  உடன் ரஷ்யா, இந்தியாவுடன் இணைந்து பிரம்மோஸ் 2 ஹைப்பர்சோனிக் க்ரூஸ் ஏவுகணையை உருவாக்குகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

  02. அணு ஆயுத நீர் மூழ்கிகள் :

  ரஷ்யாவின் அதிநவீன நான்காம் தலைமுறை நீர்மூழ்கிகள் உருவாக்கம் பெற்றுக்கொண்டிருக்கும் அதே சமயம் அதன் ஐந்தாம் தலைமுறை நீர்மூழ்கிகளும் திட்டமிடப்பட்டுக் கொண்டிருகின்றன.

  ட்ரோன்கள், ரோபோட்கள் :

  அவைகள் ஒன்றை ஒன்று தொடர்பு கொள்ளும் வசதிகளோடு சேர்த்து நீரடிக்குள் செயல்படும் ட்ரோன்கள், சில குறிப்பிட்ட பணிகளை முடிக்கும் வண்ணம் உதவும் உட்கட்டமைப்பு ரோபோட்கள், முக்கியமான அணு ஆயுதம் சுமக்கும் நீர்மூழ்கிகளாய் இருக்கும் என்பது குறிபிடத்தக்கது.

  01. ஆப் ஸ்விட்ச் :

  ஆப் ஸ்விட்ச் - அதாவது எதிரிகளின் தகவல் தொடர்பு மற்றும் ஆயுதங்களுக்கு வழிகாட்டும் அமைப்புகளை தடை செய்யும் ஒரு அதிநவீன மற்றும் தந்திரமான திட்டம்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  russia india to sign deal s400 air defence systems : Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more