கூகுளின் மேல் பத்திரி டிரிங்க் - ரஷ்யாவால் கதிகலங்கிய சுந்தர்பிச்சை.!

இந்நிலையில் பல்வேறு நாடுகளும் கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில், தற்போது, ரஷ்யாவும் குற்றம்சாட்டி அபராதம் விதித்துள்ளது. இதனால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்ப

|

கூகுள் நிறுவனம் ஏராளமான குற்றச்சாட்டுகளில் அவ்வப்போது, சிக்கி வருகின்றது. மேலும், அடுத்தவர்களின் தகவல்களை திருடுதல், வேவு பார்த்தல் என்றும் பல்வேறு பிரச்னைகளிலும் சிக்கி வருகின்றது.

கூகுளின் மேல் பத்திரி டிரிங்க் - ரஷ்யாவால் கதிகலங்கிய சுந்தர்பிச்சை.!

இதற்கு ஒரு சில நாடுகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஒவ்வொரு நாட்டிலும் சட்டம் என்ன சொல்கின்றதோ அதன்படி நடக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த நிறுவனத்திற்கு ஆப்புத்தான்.

இந்நிலையில் பல்வேறு நாடுகளும் கூகுள் நிறுவனத்தின் மீது குற்றம் சாட்டியுள்ள நிலையில், தற்போது, ரஷ்யாவும் குற்றம்சாட்டி அபராதம் விதித்துள்ளது.
இதனால் கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர்பிச்சை கதிகலங்கி போய் உள்ளார்.

 ஐரோப்பாவில் அபராதம்:

ஐரோப்பாவில் அபராதம்:

ஐரோப்பா சமீபத்தில் விதித்த கடுமையான டேட்டா தனியுரிமை விதிகளை மீறியதாக கூகுள் நிறுவனத்தின் மீது பிரான்ஸ் அரசு ரூ.4,62,49,03,172 கோடி அபராதம் விதித்துள்ளது.

குற்றச்சாட்டு சிக்கல்:

குற்றச்சாட்டு சிக்கல்:

பயனரின் தகவல்கள் எவ்வாறு சேகரிக்கப்படுகிறது என்றும் அவை எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்ற விவரங்களை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை என கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டது. மேலும் தனிப்பட்ட முறையில் பிரத்யேக விளம்பரங்களை வழங்க வாடிக்கையாளர்களிடம் முறையான அனுமதி பெறவில்லை என்றும் கூகுள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

விதியை மீறி கூகுள் நிறுவனம்:

விதியை மீறி கூகுள் நிறுவனம்:

கூகுள் நிறுவனம் ஐரோப்பாவின் பொது தகவல் பாதுகாப்பு கட்டுப்பாடு (GDPR) விதிகளை மீறியதைத் தொடர்ந்து பிரான்ஸ் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. கூகுள், ஃபேஸ்புக், அமேசான் போன்ற தொழில்நுட்ப நிறுவனங்களை நெறிப்படுத்தும் வகையில் உலகில் மேற்கொள்ளப்பட்ட முதல் அமைத்தாக GDPR இருக்கிறது.

அரசு கண்காணிப்பு:

அரசு கண்காணிப்பு:

இந்த அமைப்பு தொழில்நுட்ப நிறுவனங்கள் பயனர் விவரங்களை சேகரிப்பது பற்றிய விதிமுறைகளை சரியாக பின்பற்றுகின்றதா என்பதை கவனிக்கிறது. ஐரோப்பியா விதித்துள்ள கட்டுப்பாடுகளுக்கு ஏற்ப கூகுள் தனது தளத்தில் மாற்றம் செய்திருந்தாலும், பிரான்ஸ் மேற்கொண்ட நடவடிக்கை போதுமானதாக இல்லை என GDPR தெரிவித்துள்ளது. கூகுள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு மற்றும் அபராதம் பற்றி கூகுள் இதுவரை எவ்வித பதிலும் அளிக்கவில்லை.

அமெரிக்காவும் குற்றச்சாட்டு :

அமெரிக்காவும் குற்றச்சாட்டு :

தனிநபர், அரசாங்கம் உள்ளிட்ட தகவல்களை கூகுள் நிறுவனம் திருடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், இது குறித்து அமெரிக்கா அரசும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. மேலும், கூகுள் நிறுவனம் மீது பல்வேறு நாடுகளும் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

ரஷ்யாவும் குற்றச்சாட்டு :

ரஷ்யாவும் குற்றச்சாட்டு :

ரஷ்யாவில் ‘கூகுள்' உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு புதிய சட்டம் இயற்றப்பட்டது.

சட்டத்தை மீறியது:

சட்டத்தை மீறியது:

ஆனால் ‘கூகுள்' நிறுவனம் இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தன.

 ரூ.54 லட்சம் அபராதம்:

ரூ.54 லட்சம் அபராதம்:

இதையடுத்து சட்ட விதிகளை மீறிய குற்றத்துக்காக ‘கூகுள்' நிறுவனத்துக்கு இந்திய மதிப்பில் 54 லட்சத்து 21 ஆயிரத்து 80 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த அபராத தொகையை ‘கூகுள்' நிறுவனம் செலுத்தி விட்டதாக ரஷிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுந்தர் பிச்சை கலக்கம்:

சுந்தர் பிச்சை கலக்கம்:

பல்வேறு நாடுகளிலும் கூகுள் நிறுவனம் மீது கடும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இதற்கு அபராதமும் செலுத்தி வருகின்றது. இதனால் கூகுள் நிறுவன தலைமை நிர்வாகி சுந்தர் பிச்சைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்து அதிகாரிகளுடன் ஆலோசனையிலும் ஈடுபட்டுள்ளார்.

Best Mobiles in India

English summary
Russia fines Google nearly $7MM for ‘anticompetitive’ app pre-install rules : Read more at this tamil.gizbot.com

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X