தப்பு பண்ணிடீங்க தம்பி.. அதை ஏன் DELETE பண்ணல? இறங்கி அடிச்ச ரஷ்யா.. Google தலையில் இடி!
இதையெல்லாம் டெலிட் செய்ய தவறி விட்டீர்கள் என்று கூறி, ரஷ்ய நீதிமன்றமானது கூகுள் (Google) நிறுவனத்தின் தலையில் ஒரு பெரிய இடியை இறக்கியுள்ளது. கூகுள் அப்படி எதை டெலிட் செய்ய தவறிவிட்டது? அதற்காக ரஷ்யா கூகுளுக்கு எதிராக என்ன செய்துள்ளது? டெக் நிறுவனங்கள் ரஷ்யாவில் திணறுவது ஏன்? இதோ விவரங்கள்:
கூகுள் எதை டெலிட் செய்ய தவறிவிட்டது? கூகுள் நிறுவனமானது போலியான மற்றும் தடைசெய்யப்பட்ட தகவல்களை (Fake and prohibited information) டெலிட் செய்ய தவறிவிட்டதாக ரஷ்ய நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. குறிப்பாக உக்ரைனில் நடந்த யுத்தம் தொடர்பான போலியான மற்றும் தடைசெய்யப்பட்ட தகவல்களை கூகுள் நீக்க தவறிவிட்டதாம்.

இந்த விஷயத்தில் கூகுளுக்கு எதிராக ரஷ்யா என்ன செய்துள்ளது? கூகுள் நிறுவனத்திற்கு 4.6 பில்லியன் ரூபிள், அதாவது சுமார் 50.84 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. ராய்ட்டர்ஸின் கூற்றுப்படி, கூகுள் நிறுவனமானது தீவிரவாத கன்டென்ட்டை (Extremist content) அகற்றத் தவறியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த அபராதம் ரஷ்யாவில், கூகுளின் வருடாந்திர வருவாயில் (Google Annual Income in Russia) ஒரு பங்காக கணக்கிடப்பட்டுள்ளது. நினைவூட்டும் வண்ணம் இந்த ஆண்டு நவம்பரில், மாஸ்கோ நீதிமன்றமானது தனது ரஷ்ய பயனர்களின் தனிப்பட்ட தரவை சேமிக்க தவறியதற்காகவும் கூகுள் நிறுவனத்திற்கு அபராதம் விதித்தது.

ரஷ்ய நாட்டிற்குள் உள்ள ரஷ்ய குடிமக்கள் குறித்த தனிப்பட்ட தகவல்களை சேமிக்க (store personal data on its Russian users) நிறுவனம் மறுத்ததால், கூகுள் நிறுவனத்திற்கு 15 மில்லியன் ரூபிள், அதாவது சுமார் 164,200 அமெரிக்க டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கு முன்பு ஆகஸ்ட் 2021 மற்றும் ஜூன் 2022-இல் கூட இதே குற்றச்சாட்டின் கீழ் கூகுள் நிறுவனத்திற்க்கு அபராதம் விதிக்கப்பட்டது. உக்ரைனில் நடந்த மோதல்கள் பற்றிய தவறான தகவலை நீக்க தவறியதற்காக ஆகஸ்ட் மாதத்தில் கூகுளுக்கு 3 மில்லியன் ரூபிள் (சுமார் $32,800) அபராதம் விதிக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் 7.2 பில்லியன் ரூபிளும், ஆகஸ்ட் 2022-இல் 21.1 பில்லியன் ரூபிளும் அபராதம் விதிக்கப்பட்டது.

டெக் நிறுவனங்கள் ஏன் ரஷ்யாவில் போராடுகின்றன? ரஷ்யா-உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து கன்டென்ட் (Content), தணிக்கை (Censorship), தரவு (Data) மற்றும் உள்ளூர் பிரதிநிதித்துவம் (Local representation) தொடர்பாக ஃபேஸ்புக் (Facebook), இன்ஸ்டாகிராம் (Instagram) மற்றும் யூட்யூப் (YouTube) உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களுடன் ரஷ்யா முரண்பட்டுள்ளது.
உக்ரைனில் நடந்த யுத்தத்தை / மோதலை "சிறப்பு இராணுவ நடவடிக்கை" (Special military operation) என்று ரஷ்யா அழைக்கிறது. ஆனால் கூகுளுக்கு சொந்தமான யூட்யூப் தளத்தில் இதற்கு எதிரான கூற்றுகள் நிலவுகிறது. இதனால் யூட்யூப் தளமானது ரஷ்ய அரசின் கோபத்திற்கு இலக்காகி உள்ளது.
இருந்தாலும் கூட யூட்யூப் தளமானது இன்னமும் ரஷ்யாவில் தடை செய்யப்படவில்லை. ஏதோவொரு காரணத்திற்காக இதை தடை செய்ய வேண்டாம் என்று ரஷ்ய அரசாங்கம் முடிவு செய்துள்ளது போல் தெரிகிறது. ஆனால் ட்விட்டர் மற்றும் மெட்டாவுக்கு சொந்தமான பிற தளங்களால் ரஷ்யாவின் தடையில் இருந்து தப்பிக்க முடியவில்லை.
கூகுள் தொடர்பான மற்ற செய்திகளை பொறுத்தவரை, சில வாரங்களுக்கு முன்னர் கூகுள் நிறுவனம் ஜெமினி (Gemini) என்று அழைக்கப்படும் அதன் சூப்பர் ஸ்மார்ட் ஏஐ மாடலை (Super Smart AI Model) அறிமுகம் செய்தது. கூகுள் ஜெமினியானது அல்ட்ரா (Ultra), ப்ரோ (Pro) மற்றும் நானோ (Nano) என்கிற மூன்று வெர்ஷன்களில் அணுக கிடைக்கிறது.
இந்த மூன்று வெர்ஷன்களுமே குறிப்பிட்ட விஷயங்களை திறமையாக செய்யும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது அதாவது ஜெமினி அல்ட்ராவானது சிக்கலான பணிகளை கையாளும் திறன் கொண்டது; ஜெமினி ப்ரோவானது பல்வேறு வகையான வித்தியாசமான பணிகளை செய்யும் திறன் கொண்டது; கடைசியாக உள்ள ஜெமினி நானோவானது டிவைஸ்க்கான பணிகளை செய்ய வல்லது.


Click it and Unblock the Notifications








