வாங்க விண்வெளியில் மோதுவோம்: போருக்கு மத்தியில் ரஷ்யாவின் முக்கிய முடிவு, காரணம் என்ன?

|

2024 ஆம் ஆண்டுக்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான கூட்டுறவை ரஷ்யா முடிவுக்கு கொண்டு வர இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான முக்கிய முடிவு

சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான முக்கிய முடிவு

ரஷ்ய விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் தலைவர் யூரி போரிசோவை அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புதின், மாஸ்கோவில் உள்ள கிரெம்ளினில் இன்று (ஜூலை 26) நேரில் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பில் சர்வதேச விண்வெளி நிலையம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டுறவுக்கு முடிவு

சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டுறவுக்கு முடிவு

இதுகுறித்து AFP செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, "தங்கள் கூட்டாளர்களுக்கான அனைத்து கடமைகளையும் நாங்கள் நிறைவேற்றுவோம், ஆனால் 2024 க்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தின் கூட்டுறவில் இருந்து வெளியேற முடிவு செய்யப்பட்டுள்ளது" என ரஷ்ய விண்வெளி அமைப்பின் தலைவர் யூரி போரிசோ ஜனாதிபதி புதினிடம் கூறியதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

இதையடுத்து 2024 க்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்தில் அமெரிக்கா உடனான கூட்டுறவில் இருந்து ரஷ்யா வெளியேறலாம் என தகவல் வெளியாகி இருக்கிறது.

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான விண்வெளி உறவு

அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான விண்வெளி உறவு

உக்ரைன் போர் தொடர்பாக வாஷிங்டனுக்கும் மாஸ்கோவிற்கும் இடையே மோதல் அதிகரிக்கத் தொடங்கியது. உக்ரைன் மீது ரஷ்யா கடந்த சில மாதங்களாக தொடர்ந்து போர் தொடுத்து வருகிறது.

ரஷ்யாவின் இந்த போர் தொடுப்பு நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளின் ஆதரவுடன் உக்ரைன் ராணுவம் ரஷ்ய படைகளை எதிர் தாக்குதகல் நடத்தி வருகிறது.

இதையடுத்து இரு அணுசக்தி நாடுகளான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான உறவு எப்போதும் இல்லாத அளவிற்கு குறைந்துள்ளது.

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) கூட்டுறவுகள்

சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) கூட்டுறவுகள்

இந்த மோதல் ஆனது விண்வெளி வரை எதிரொலித்து இருக்கிறது. சர்வதேச விண்வெளி நிலையம் (ISS) என்பது நாசா (அமெரிக்கா), ரோஸ்கோஸ்மோஸ் (ரஷ்யா), ஜாக்சா (ஜப்பான்), இஎஸ்ஓ (ஐரோப்பா) மற்றும் சிஎஸ்ஏ (கனடா) ஆகிய ஐந்து விண்வெளி நிறுவனங்களை உள்ளடக்கிய ஒரு பன்னாட்டு கூட்டுத் திட்டமாகும். இந்த நிலையில் அமெரிக்காவின் நாசா மற்றும் ரஷ்யாவின் ரோஸ்கோஸ்மோஸ் இடையேயான விண்வெளி கூட்டுறவு முடிவுக்கு வர இருக்கிறது.

International Space Station என்றால் என்ன?

International Space Station என்றால் என்ன?

விண்வெளியில், பூமிக்கு மேலே பூமியைச் சுற்றிக்கொண்டே இருக்கும் ஒரு ஆய்வு நிலையம் சர்வதேச விண்வெளி நிலையம் (International Space Station) ஆகும். இதனை நாம் நமது வெறும் கண்ணில்கூட பார்க்கலாம்.

இந்த நிலையத்தை 1998ஆம் ஆண்டு விண்வெளியில் கட்டத் தொடங்கினர். இந்த நிலையத்தின் நீளம் 239 அடி, அகலம் 356 அடி, உயரம் 66 அடி ஆகும்.

இது பூமியை நீள் வட்டப்பாதையில் மணிக்குச் சராசரியாக 27600 கிலோ மீட்டர் வேகத்தில் சுற்றிக்கொண்டிருக்கிறது. பூமியிலிருந்து 278 முதல் 460 கிலோமீட்டர் உயரத்தில் சுற்றி வருகிறது.

விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு

விண்வெளி ஆய்வு நிலையத்தில் தங்கி இருந்து ஆய்வு

இந்த விண்வெளி ஆய்வு நிலையத்தில் 2000 ஆம் ஆண்டு முதல் விண்வெளி வீரர்கள் தங்கி இருந்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். பல நாடுகளை சேர்ந்த விண்வெளி வீரர்கள் விண்வெளி ஆய்வு நிலையத்துக்கு சென்று அங்கு தங்கி இருந்து ஆய்வுகளை நடத்தி பூமிக்கு திரும்பி இருக்கின்றனர்.

விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்திறன்

விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்திறன்

இந்த விண்வெளி நிலையம் பூமியின் ஈர்ப்பு ஆற்றலின் காரணமாக மாதம் 2 கிலோ மீட்டர் பூமியை நோக்கி இறங்குகிறது. அதனை மீண்டும் பழைய நிலைக்கு உயர்த்தி விடுகின்றனர்.

இது தொடர் நடவடிக்கையாக உள்ளது. விண்வெளியில் இயங்கும் மிகப் பெரிய ஆய்வுக்கூடமாக ஆய்வு நிலையம் விளங்கி வருகிறது.

தற்போதுள்ள விண்வெளி ஆய்வு நிலையத்தின் செயல்திறன் இரண்டு ஆண்டுகளில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. அதன்பின் 2030-2050 களுக்கு இடையே பூமியில் ஏதாவது ஒரு இடத்தில் இது விழும் என கூறப்படுகிறது.

சொந்த விண்வெளி நிலையம் உருவாக்கத் திட்டம்

சொந்த விண்வெளி நிலையம் உருவாக்கத் திட்டம்

இந்த சர்வதேச விண்வெளி நிலையம் 1998-ல் ரஷ்யா மற்றும் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்களால் கூட்டாக அமைக்கப்பட்டது.

இந்த நிலையில் கடந்த பல ஆண்டுகளாக ரஷ்யா அமெரிக்கா இடையே பல்வேறு பிரச்சனை மூண்டு வருகிறது. இதையடுத்து புதிய சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டாம் என ரஷ்யா முடிவு செய்திருப்பதாக முன்னதாகவே தகவல் வெளியானது.

மேலும் ரஷ்யா விண்வெளி நிறுவனமான ரோஸ்கோஸ்மோஸ் சொந்த சுற்றுப்பாதை நிலையத்தை 2025 ஆம் ஆண்டு தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

புதிய சுற்றுப்பாதை நிலையத்தை அமைப்பதற்கான முக்கிய தொகுதியின் உருவாக்க பணி செயல்பாட்டில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியானது.

முக்கியத் தொகுதி உருவாக்கப் பணி தொடக்கம்

முக்கியத் தொகுதி உருவாக்கப் பணி தொடக்கம்

2025 ஆம் ஆண்டு ரஷ்யா சொந்த விண்வெளி நிலையம் அமைக்கும் என நம்பப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோரோலியோவை தளமாகக் கொண்ட எனர்ஜியா விண்வெளி கார்ப்பரேஷன் இந்த மையத்திற்கான முக்கிய தொகுதியை உருவாக்கி வருகிறது எனவும் 2025 ஆம் ஆண்டு விண்வெளி நிலையம் பூமியின் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்த வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியானது.

முன்னதாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

முன்னதாக இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்த ரஷ்யா

ரஷ்யா - உக்ரைன் போரில் அமெரிக்காவின் செயல்பாடுகளை கருத்தில் கொண்டு ரஷ்யா இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

ரஷ்யாவின் இது போன்ற நடவடிக்கை என்பது முதன்முறையல்ல, சர்வதேச விண்வெளி நிலையம் (ஐஎஸ்எஸ்) இந்தியா அல்லது சீனா நிலப்பரப்பு மீது விழுந்தால் என்ன செய்வீர்கள் என கேள்வி எழுப்பும் விதமாக ரஷ்யா எச்சரிக்கை விடுத்தது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Russia decide to Quit International Space Station Partnership With America, Report says

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X