இரு டஜன் தலைவலி, சைபர் தாக்குதலில் சிக்கிய ரஷ்யா புலம்பல்!

By Meganathan
|

உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் ஹேக்கிங் மற்றும் சைபர் திருட்டு, பல்வேறு நாடுகள் மற்றும் பெரிய நிறுவனங்கள் போன்றவற்றிற்கு பெருமளவில் நட்டத்தை விளைவிக்கின்றன. பல்வேறு உலக நாடுகளும் சைபர் பாதுகாப்பு குறித்த விடயங்களில் அதிக கவனம் செலுத்தி வரும் நிலையில் புதுவித சைபர் அச்சுறுத்தலில் ரஷ்யா சிக்கியுள்ளது.

ரஷ்யாவின் இரு டஜன் அறிவியல், அரசு மற்றும் ராணுவ நிறுவனங்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த விரிவான தகவல்கள் ஸ்லைடர்களில்..

சைபர் தாக்குதல்

சைபர் தாக்குதல்

ரஷ்யாவின் அரசாங்க இணையதளம் மற்றும் அரசு நிறுவனங்களின் இணையதளங்களின் மீது சைபர் தாக்குதல் நடத்தப்பட்டதாக ரஷ்யாவின் ரகசிய சேவை அறிவித்துள்ளது.

நிறுவனம்

நிறுவனம்

ரஷ்யாவைச் சேர்ந்த சுமார் 20க்கும் அதிகமான நிறுவனங்களின் தகவல்கள் மீது உளவு பார்க்கும் முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக மத்திய பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரஷ்யா அரசு, அறிவியல் மற்றும் ராணுவ நிறுவனங்கள் அடங்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திட்டம்

திட்டம்

மேற்கொள்ளப்பட்ட சைபர் அச்சுறுத்தல் திட்டமிட்டு நடத்தப்பட்டதோடு, இதில் திறமை மிக்கவர்கள் ஈடுபட்டிருப்பதாகவும் இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதோடு இந்தத் தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்த தகவல் மர்மமாகவே இருக்கின்றது.

வைரஸ்

வைரஸ்

மத்திய பாதுகாப்பு சேவை நிறுவனத்தின் படி குறிப்பிட்ட வைரஸ் மின்னஞ்சல் மூலம் அனுப்பப்பட்டது என்றும் இந்த வைரஸ் டேட்டா தகவல்களை ஊடுருவி அழைப்புகளைக் கேட்பது, ஸ்கிரீன்ஷாட்களை எடுத்தல் மற்றும் கேமரா, மைக்ரோபோன் போன்றவற்றை இயக்க வழி செய்தது.

அமெரிக்கா

அமெரிக்கா

அமெரிக்கா மீது சைபர் அச்சுறுத்தல் மேற்கொள்ளப்பட்டதாக அறிக்கை வெளியானதும், ரஷ்யா சார்பில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

திருட்டு

திருட்டு

சமீபத்தில் ஜனநாயக தேசி குழுவின் சர்வர்கள் ஹேக் செய்யப்பட்டு பல்வேறு மின்னஞ்சல் தகவல்கள் திருடப்பட்டன. இத்தகவல்கள் கிளின்டன் கட்சித் தலைவர்களின் தேர்தல் ரகசியங்களை அம்பலப்படுத்தின.

தலையீடு

தலையீடு

ஹிலாரி கிளின்டன் மின்னஞ்சல்களை ஹேக் செய்ய மாஸ்கோவிற்கு டொனால்டு டிரம்ப் சவால் விடுத்த போதும் அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் தலையிட ரஷ்யா மறுத்து விட்டது குறிப்பிடத்தக்கது.

அச்சுறுத்தல்

அச்சுறுத்தல்

சைபர் குற்றங்கள் உலகெங்கும் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து எவ்வித சைபர் அச்சுறுத்தல்களையும் எதிர்கொள்ளத் தயார் நிலையில் இருக்கின்றதாக அமெரிக்க தெரிவித்திருந்தது.

Best Mobiles in India

English summary
Russia Claims Planned Cyber-Attack on Military Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X