Home
News

புது RBI ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. பேங்க் அக்கவுண்ட் பணம் அனுப்ப இது கட்டாயம்.. ஒரே நேரத்தில் 2 மாற்றங்கள்!

பேங்க் அக்கவுண்ட் வைத்திருக்கும் கஸ்டமர்கள் ஒட்டுமொத்த பேருக்கும் அமலாகும்படி ஆர்பிஐ (RBI) என்று அழைக்கப்படும் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா (Reserve Bank of India) ஆனது புதிய விதிகளை கொண்டுவந்து இருக்கிறது. இந்த விதிகள் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலாக இருக்கின்றன. ஆகவே, இந்த தேதிக்கு மேல் பணத்தை அனுப்பும்போது புதிய விதிகள் இருக்கும். இந்த ஆர்பிஐ விதிகள் என்ன சொல்கிறது? பணம் அனுப்பும்போது என்ன செய்ய வேண்டும்? முழு விவரங்களை இப்போது பார்க்கலாம்.

இந்த விதிகள் ஓடிபி ஆதன்டிகேஷன் செய்யப்பட்டு முடிக்கப்படும் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அமலாக இருக்கிறது. அதாவது, யுபிஐ பரிவர்த்தனைகள் பின் நம்பர் போடப்பட்டு முடிக்கப்படுகிறது. ஆனால், பேங்க் அக்கவுண்ட் வழியாக ஆர்டிஜிஎஸ், நெப்ட் பரிவர்த்தனைகளை (RTGS NEFT Transactions) செய்யும்போது, ஓடிபி ஆதன்டிகேஷன் இருக்கும்.

புது RBI ரூல்ஸ்.. ஏப்.1 முதல் அமல்.. பேங்க் பணம் அனுப்ப இது?

உங்களது பேங்க் அக்கவுண்ட் நம்பருடன் இணைக்கப்பட்ட மொபைல் நம்பருக்கு ஓடிபி அனுப்பி வைக்கப்படும், இந்த ஓடிபி கொடுத்தால் மட்டுமே அந்த பரிவர்த்தனையை செய்து முடிக்க முடியும். இதுபோன்ற ஓடிபி வழியாக செய்து முடிக்கப்படும் பரிவர்த்தனைகளுக்கே ஏப்ரல் 1ஆம் தேதி முதல் புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. கூடுதலாக ஆதன்டிகேஷன் இருக்கிறது.

2 பேக்டர் ஆதன்டிகேஷன் விதிகள் (2 Factor Authentication Rules) அமலுக்கு கொண்டுவரப்பட இருக்கிறது. இது ஓடிபி வெரிபிகேஷனுடன் கூடுதலாக ஒரு வெரிபிகேஷன் போல வருகிறது. அதாவது, ஓடிபி கொடுப்பதற்கு முன்பாகவோ அல்லது ஓடிபி கொடுத்த பின்பாகவோ கூடுதலாக ஒரு ஆதன்டிகேஷன் இருக்கும். இதை செய்தால் மட்டுமே ஆர்டிஜிஎஸ், நெப்ட் பரிவர்த்தனைகள் முடிக்கப்படும்.

இந்த கூடுதல் ஆதன்டிகேஷன் பேங்குகள் மற்றும் ஓடிபி வழியாக செய்து முடிக்கப்படும் நிதி சேவைகளை வழங்கும் நிறுவனங்களுக்கும் பொருந்தும். இதில் கூடுதல் ஆதன்டிகேஷனாக இதுதான் இருக்கும் என்ற கட்டயாம் கிடையாது. பாஸ்வேர்ட் (Password), பாஸ்பேர்ஸ் (Passphrase), பின் நம்பர் (PIN Number), ஃபிங்கர்பிரிண்ட் (Fingerprints), பேசியல் ரிககனைசேஷன் (Facial Recognition) இருக்கலாம்.

இதுபோன்ற ஏற்கனவே பேங்க் கஸ்டமர்களுக்கு பழக்கமாக இருக்கும் ஆதன்டிகேஷன்களை பேங்குகள் சேர்க்க இருக்கின்றன. ஆகவே, ஆர்டிஜிஎஸ், நெப்ட் பரிவர்த்தனைகளின்போது கூடுதலாக வெரிபிகேஷன் இருக்கும். இந்த பரிவர்த்தனைகளில் அதிகளவிலான பணம் பரிமாற்றம் செய்யப்பட இருப்பதால், இந்த விதிகளை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா கொண்டுவருகிறது.

இந்த ஏப்ரல் 1ஆம் தேதி முதல் மற்றொரு புதிய விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன, அடிப்படை சேமிப்பு வங்கி வைப்புத்தொகை (Basic Savings Bank Deposit - BSBD) கணக்கு வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு இந்த விதிகள் அமல் செய்யப்பட இருக்கின்றன. இந்த கணக்குகளுக்கு மினிமம் பேலன்ஸ் கிடையாது. இதில் முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வர இருக்கின்றன.

1. டிஜிட்டல் பரிவர்த்தனைகள் மற்றும் செக் கலெக்சன் மூலமாக டெபாசிட் பணத்துக்கு லிமிட் கிடையாது.
2. இந்த கணக்கை வைத்திருக்கும் கஸ்டமர்களுக்கு வருடாந்திர ஏடிஎம் கட்டணம் வசூலிக்கப்படாது. அதேபோல டெபிட் கார்டு வழியாக செய்யப்படும் இதர பரிவர்த்தனைகளுக்கும் கட்டணம் கிடையாது.
3. ஒரு வருடத்துக்கு 25 செக் லீப்கள் கொடுக்கப்படும். ஆகவே, பாஸ்புக் கொடுக்கப்படும். இதில் பரிவர்த்தனை ஸ்டேட்மெண்ட்களை பார்க்கலாம்.
4. சேமிப்பு கணக்கை போலவே இதிலும் இன்டர்நெட் பேங்கிங் மற்றும் மொபைல் பேங்கிங் கிடைக்கும்.
5.நெப்ட், ஆர்டிஜிஎஸ், யுபிஐ உள்ளிட்ட பரிவர்த்தனைகளை இந்த கணக்கில் செய்து கொள்ளலாம்.

More from GizBot

Best Mobiles in India

English summary
RTGS NEFT Transactions Rules From April 1 2026 Bank To Mandate 2 Factor Authentication For Payments
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X