மதுக்கடைகளில் மது வாங்க கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் கட்டாயம்.. கதிகலங்கிய குடிமகன்கள்..
கொரோனா தொற்று பரவலின் மூன்றாம் அழை மெல்ல-மெல்லத் தலைதூக்கத் துவங்கியுள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மாநிலங்களும் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான ஒரு அறிவிப்பில், மதுக்கடையில் மது வாங்க வரும் குடிமகன்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திடீரென அதிகரித்த கொரோனா தொற்று எண்ணிக்கை
சென்ற வார நிலவரத்தின் படி, இந்தியாவின் பல மாநிலங்களில் கொரோனா தொற்று மெல்ல மெல்லக் குறைந்து வருவதாக அறிவிப்புகள் வெளியானது. குறிப்பாக, தமிழ்நாடு போன்ற பல்வேறு மாநிலங்களில் நடைமுறையில் இருந்த விதிமுறைகளில் சில தளர்வுகளை அரசாங்கம் அறிவித்து வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இந்நிலையில், கேரளாவில் கொரோனா தொற்று வேகமாக அதிகரித்து வருகிறது.

மது வாங்க இனி கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் சான்றிதழ் காட்டாயம்
இதனால், கேரளா அரசாங்கம் பல்வேறு நடவடிக்கைகள் மற்றும் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்தியுள்ளது. இந்த புதிய கட்டுப்பாட்டில் தான், இனி மதுக்கடைகளில் மது வாங்க வரும் மது பிரியர்கள் கட்டாயம் கொரோனா நெகட்டிவ் ரிப்போர்ட் சான்றிதழ் கொண்டுவர வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியைக் கேட்டு குடிமகன்கள் கதிகலங்கியுள்ளனர். இந்த கடுமையான விதிமுறை தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டம் கூட தடை
கேரளாவில், ஓணம் பண்டிகை நெருங்கி வருவதை முன்னிட்டு, மதுக்கடைகளில் கூடும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தவும், பாதுகாப்பான சூழலை உருவாக்கவும் கேரள அரசாங்கம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. அதேபோல், ஓணம் பண்டிகையை முன்னிட்டு மக்கள் கூட்டமாகக் கூடுவதைத் தவிர்க்கவும் சில கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளிற்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று
இந்த கட்டுப்பாடுகள் அனைத்தும் தற்காலிகமானவை தான் என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி, கேரளாவில் ஒரு நாளிற்கு சுமார் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட மக்கள் புதிதாக அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது, மற்ற நாட்களில் காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை கடைகள் திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்பாக டிஜிட்டல் முறையிலும் ஆவணங்களை மதுக்கடையில் காண்பிக்கலாம்
மதுக்கடைகளில் மது வாங்க வரும் பொதுமக்கள் கட்டாயம் அவர்களின் ஆர்டி-பிசிஆர் அறிக்கை அல்லது தடுப்பூசி சான்றிதழ் போன்ற முக்கிய ஆவணங்களை கையுடன் கொண்டு வருவது சிறந்தது என்று அறிவுரைக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அவர்களின் ஆர்டி-பிசிஆர் அறிக்கை அல்லது தடுப்பூசி சான்றிதழ்களை PDF ஆவணங்களாகப் பயன்படுத்துவது இன்னும் அதிக பாதுகாப்பானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இதே போன்ற சூழ்நிலை உருவாகினால், இந்த நடைமுறை தமிழகத்திலும் கொண்டு வரப்படுமா என்பது கேள்விக்குறி?


Click it and Unblock the Notifications