Home
News

ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.500 தள்ளுபடி: எப்படி புக் செய்வது?

சிலிண்டர் முன்பதிவு செய்வதில் பல்வேறு புதிய முறைகள் நடைமுறையில் உள்ளது. இதில் தற்போது ஆன்லைன் மூலம் சிலிண்டர் முன்பதிவு செய்பவர்களுக்கு ரூ.500 கேஷ்பேக் பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம்.

சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

சமையல் எரிவாயு சிலிண்டர்களை புக் செய்வதில் பல்வேறு புதிய வழிமுறைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சிலிண்டர்கள் மானிய விலையில் வீடுகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. மானியத் தொகை பயனர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது. கூடுதலாக தற்போது எரிவாயு சிலிண்டர்கள் புக் செய்வதில் தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது மானியம்

ஆன்லைனில் முன்பதிவு செய்யும்போது மானியம்

எரிவாயு சிலிண்டர்கள் ஆன்லைனில் முன்பதிவு செய்யும் போது மானியத்துடன் கேஷ்பேக் சலுகையும் பெறமுடியும் அதற்கான வழிமுறைகள் குறித்து பார்க்கலாம். பேடிஎம் மூலம் வாடிக்கையாளர்கள் சிலிண்டர் புக் செய்யும்போது ரூ.500 கேஷ்பேக் பெறலாம். பேடிஎம் மூலம் முதல்முறையாக கேஸ் புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே இந்த சலுகை பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று.

பேடிஎம் பயன்பாட்டில் புக் செய்ய வேண்டும்

பேடிஎம் பயன்பாட்டில் புக் செய்ய வேண்டும்

பேடிஎம் பயன்பாட்டிற்குள் சென்று புக் சிலிண்டர் என்ற தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில் பாரத் கேஸ், இண்டேன் கேஸ், எச்பி கேஸ் என்ற விருப்பம் காண்பிக்கும், தங்களது எரிவாயு நிறுவன பெயரை தேர்வு செய்ய வேண்டும். அதன்பின் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண், எல்பிஜி ஐடி, வாடிக்கையாளர்கள் எண் ஆகிய விவரங்களை உள்ளிட்ட Proceed என் ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

ரூ.500 வரை கேஷ்பேக்

ரூ.500 வரை கேஷ்பேக்

எல்பிஜி சிலிண்டர் விலை அதில் காண்பிக்கப்படும். கட்டணத்தை செலுத்துவதற்கு முன்பு ரூ.500 வரை கேஷ்பேக் பெற சலுகை குறியீட்டுகோடை பதிவிட வேண்டும். கட்டணம் செலுத்துவதற்கு முன்பு FIRSTLPG என்ற குறியீட்டை பதிவிட்டு பின் கட்டணம் செலுத்த வேண்டும். இதை பின்பற்றும்போது குறைந்தபட்சமாக ரூ.500 கேஷ்பேக் பெற முடியும்.

டிசம்பர் 31 வரை மட்டுமே சலுகை

டிசம்பர் 31 வரை மட்டுமே சலுகை

இந்த சலுகையானது டிசம்பர் 31 ஆம் தேதி வரை மட்டுமே செல்லுபடியாகும். சலுகையின் விதிமுறைகளின் படி இந்த குறியீட்டுக் கோடை பயன்படுத்த மறந்துவிட்டால் கேஷ்பேக் சலுகை கிடைக்காது. அதேபோல் பேடிஎம் மூலம் முதல்முறை சிலிண்டர் புக் செய்யும்போதே இந்த கேஷ்பேக் சலுகை பொருந்தும்.

நவம்பர் 1 முதல் புதிய நடைமுறை

நவம்பர் 1 முதல் புதிய நடைமுறை

அதேபோல் சமையல் எரிவாயு சிலிண்டர்கள் பெறுவதில் புதிய நடைமுறையை எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளது. இந்த புதிய நடைமுறையானது நவம்பர் 1 ஆம் தேதி முதல் செயலுக்கு வந்துள்ளது. இந்த புதிய நடைமுறையானது கேஸ் சிலிண்டர் முறைகேடு மற்றும் உண்மையான நுகர்வோர்களை அறிந்து கொள்ள எண்ணெய் நிறுவனங்களால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.

டெலிவரி ஆதென்டிகேஷன் கோட் கட்டாயம்

டெலிவரி ஆதென்டிகேஷன் கோட் கட்டாயம்

இனி எல்பிஜி சிலிண்டரை வீட்டில் விநியோகம் செய்யும் போது ஒரு முறை கடவுச்சொல் எனப்படும் OTP கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டெலிவரி ஆதென்டிகேஷன் கோட் (Delivery Authentication code) எனப்படும் DAC என்ற புதிய நடைமுறையை இந்திய எண்ணெய் நிறுவனங்கள் செயல்படுத்தியுள்ளது.

ஓடிபி எண் கூறுவது கட்டாயம்

ஓடிபி எண் கூறுவது கட்டாயம்

வாடிக்கையாளர்கள் சிலிண்டர் முன்பதிவு செய்யும் போது பதிவு செய்யப்பட்டுள்ள மொபைல் எண்ணுக்கு ஒரு ஓடிபி அனுப்பப்படும். சிலிண்டர் விநியோகிக்க வரும் ஊழியரிடம் தங்களுக்கு அனுப்பப்பட்ட ஓடிபி எண்ணை கூறினால் மட்டும் இனி சிலிண்டர் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs.500 Cashback Available on Booking GasCylinder From Paytm!
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X