அபேஸ் ஆன 5 நன்மைகள்.. புதுசா அறிமுகமான Amazon Prime Lite திட்டத்தில் தில்லாலங்கடி.. உஷாரய்யா உஷாரு!
அமேசான் நிறுவனமானது சற்றே மலிவான விலைக்கு, அமேசான் ப்ரைம் லைட் (Amazon Prime Lite) என்கிற புதிய மெம்பர்ஷிப் பிளானை (New Membership Plan) இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இது வழக்கமான ப்ரைம் மெம்பர்ஷிப் பிளானை விட ரூ.500 மலிவானதாக இருக்கிறது.
உடனே.. "என்னது ரூ.500 கம்மியா? பேசாம இதையே சப்ஸ்க்ரைப் பண்ணிடலாம் போலயே.. நமக்கு லாபம் தானே!" என்கிற முடிவுக்கு வந்துவிட வேண்டாம். ஏனென்றால் அமேசான் ப்ரைம் லைட் திட்டமானது வழக்கமான அமேசான் ப்ரைமில் உள்ள அனைத்து நன்மைகளையும் / பலன்களையும் வழங்கவில்லை.

ரூ.999 க்கு கிடைக்கும் "புதிய" அமேசான் ப்ரைம் லைட் திட்டம் மற்றும் ரூ.1499 க்கு கிடைக்கும் "வழக்கமான" அமேசான் ப்ரைம் திட்டம் ஆகிய இரண்டுமே 12 மாதத்திற்கு செல்லுபடியாகும் என்றாலும் கூட இவ்விரு திட்டங்களுக்கும் இடையே 5 முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.
அதாவது ரூ.1499 கொடுக்கும் அமேசான் ப்ரைம் மெம்பர்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள், ரூ.999 கொடுக்கும் ப்ரைம் லைட் மெம்பர்களுக்கு கிடைக்காது என்று அர்த்தம். அதென்ன நன்மைகள்? அதற்கு ஈடாக அமேசான் ப்ரைம் லைட் திட்டத்தில் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்? இதோ விவரங்கள்:
01. 4கே திரைப்படங்கள் மற்றும் நிகழ்ச்சிகள்: ப்ரைம் லைட் திட்டமானது ப்ரைம் வீடியோவில் (Prime Video) உள்ள அனைத்து கன்டென்ட்டிற்கான வரம்பற்ற அணுகலை வழங்கும். ஆனால் அவைகளை ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் ஆப்களின் வழியாக மட்டுமே கிடைக்கும். மேலும், அவைகள் எச்டி ரெசல்யூஷனுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
மறுகையில் உள்ள "வழக்கமான" ப்ரைம் மெம்பர்ஷிப் திட்டமானது 4கே ஸ்ட்ரீமிங்கை ஆதரிக்கிறது. அதுமட்டுமல்ல, ப்ரைம் லைட் மெம்பர்ஷிப் ஆனது 2 டிவைஸ்களுக்கான ஆதரவை மட்டுமே வழங்கும். ஆனால் வழக்கமான ப்ரைம் மெம்பர்ஷிப் பிளான் ஆனது மொத்தம் 6 டிவைஸ்களுக்கான ஆதரவுடன் வருகிறது.
02. இலவச ப்ரீ ஒன்-டே டெலிவரி: அமேசான் ப்ரைம் லைட் பிளானில் இலவச ஒரு-நாள் டெலிவரி (Free One-day Delivery) நன்மை கிடைக்காது. மாறாக இது இரண்டு நாட்களில் இலவச டெலிவரியை வழங்குவதாக உறுதியளிக்கிறது. அதாவது அமேசான் தளத்தில் நீங்கள் ஆர்டர் செய்த பொருள் 2 நாட்களில், டெலிவரி சார்ஜ் எதுவுமின்றி உங்கள் கைகளுக்கு வந்து சேரும்.
03. ப்ரைம் ரீடிங்: ரூ.999 க்கு அணுக கிடைக்கும் ப்ரைம் லைட் மெம்பர்ஷிப் பிளானில் ப்ரைம் ரீடிங் (Prime Reading) நன்மை கிடைக்காது. அறியாதோர்களுக்கு ப்ரைம் ரீடிங் என்பது ப்ரைம் ரீடிங் கேட்டலாக்கில் (Prime Reading Catalog) கீழ் கிடைக்கும் இ-புத்தகங்கள் (eBooks), காமிக்ஸ் (Comics) மற்றும் பலவற்றை அணுக உதவும் ஒரு நன்மையாகும்.
04. ப்ரைம் மியூசிக்: அமேசானின் மியூசிக் ஸ்ட்ரீமிங் சேவையான ப்ரைம் மியூசிக் (Prime Music) நன்மையானது, ப்ரைம் லைட் திட்டத்தின் கீழ் சேர்க்கப்படவில்லை. அதாவது ரூ.999 செலுத்தும் பயனர்களால் ப்ரைம் மியூசிக் ஆப்பை பயன்படுத்தி பாடல்களை கேட்க முடியாது என்று அர்த்தம்.
05. ப்ரைம் கேமிங்: ப்ரைம் ரீடிங், ப்ரைம் மியூசிக் பலன்களை போலவே அமேசான் ப்ரைம் லைட் மெம்பர்ஷிப் ஆனது, அது வழங்கும் நன்மைகளில் ப்ரைம் கேமிங்கையும் தவறவிடுகிறது. இதன் பொருள், ரூ.999 செலுத்தும் பயனர்களால் ரூ.1499 செலுத்தும் பயனர்களை போல இலவச இன்-கேம் கன்டென்ட் மற்றும் கேம்கள் அணுக முடியாது.


Click it and Unblock the Notifications