சபாஷ்., ஒன்றரை மணி நேரம் ரயில் தாமதம்: ரூ.63,000 இழப்பீடு வழங்கும் IRCTC- எதற்கு தெரியுமா?

|

தேஜஸ் எக்ஸ்பிரஸ் இந்திய ரயில்வே அறிமுகம் செய்த முதல் ரயில் முழுவதும் குளிரூட்டப்பட்ட இந்தியாவின் அதிவேக தொடருந்தாகும். இந்த ரயிலானது இருக்கை வசதிகள் மட்டும் கொண்டதாகும். இந்த ரயிலானது முற்றிலும் நவீனமயமாக்கப்பட்டது. இந்த ரயிலானது தானியங்கி கதவுகளுடன் அறிமுகம் செய்யப்படுகிறது. அதேபோல் இந்த ரயில் சுமார் 130 முதல் 200 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கும்.

பிரத்யேக வசதிகள் கொண்ட தேஜஸ்

பிரத்யேக வசதிகள் கொண்ட தேஜஸ்

தேஜஸ் விரைவு வண்டிகளில் பயோ கழிப்பறை, தொலைக்காட்சி பெட்டிகள், இலவச இணைய வசதிகள் கொண்டது. இந்த ரயிலின் டிக்கெட் விலை சற்று அதிகமாக இருந்தாலும், இதில் பிரத்யேக இருக்கை வசதிகளும் உள்ளது. இந்த ரயிலானாது மும்பை கோவா, டெல்லி சண்டிகர், லக்னோ டெல்லி, எழும்பூர் மதுரை உள்ளிட்ட வழித்தடங்களில் பயணிக்கும்.

அகமதாபாத் - மும்பை இடையிலான தேஜஸ் விரைவு ரயில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக தாமதமானதால், பயணிகளுக்கு ஐ.ஆர்.சி.டி.சி இழப்பீடு வழங்க இருக்கிறது.

தேஜஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம்

தேஜஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதம்

கடந்த புதன்கிழமை நண்பகலில் மும்பை வந்த தேஜஸ் ரயில் ஒன்றரை மணி நேரம் தாமதமாக வந்தடைந்தது. புறநகர் பகுதியான பாயந்தர் (Bhayander), தாகிசார் (Dahisar) ரயில் நிலையங்களுக்கு இடையே ஏற்பட்ட, தொழில்நுட்ப கோளாறு காரணமாக ரயில் தாமதமானதாக கூறப்படுகிறது.

ரூ.63,000 இழப்பீடு

ரூ.63,000 இழப்பீடு

இதன் காரணமாக அதில் பயணித்த பயணிகளுக்கு ரூ.63 ஆயிரம் அளவுக்கு ஐ.ஆர்.சி.டி.சி இழப்பீடு வழங்க இருக்கிறது. அகமதாபாத்- மும்பை இடையில் இயக்கப்படும் தேஜஸ் ரயிலானது தனியாரால் இயக்கப்படும் நாட்டின் இரண்டாவது ரயிலாகும்.

களத்தில் இறங்கிய வோடபோன்: அதிரடியாக தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை அறிமுகம்களத்தில் இறங்கிய வோடபோன்: அதிரடியாக தினமும் 3 ஜிபி டேட்டா சலுகை அறிமுகம்

நிறுவனத்தின் விதி

நிறுவனத்தின் விதி

தேஜஸ் ரயில் தாமதமானதையடுத்து, அந்த நிறுவன விதிகளின் படி ரயில் ஒரு மணி நேரம் தாமதமானால் 100 ரூபாயும், 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் 250 ரூபாயும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

630 பயணிகளுக்கு தலா ரூ.100 இழப்பீடு

630 பயணிகளுக்கு தலா ரூ.100 இழப்பீடு

அதன்படி தேஜஸ் ரயிலில் பயணித்த 630 பயணிகளுக்கும் தலா 100 ரூபாய் என 63 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜ.ஆர்.சி.டி.சி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Rs.63,000 Compensation for train late: IRCTC officially said

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X