ரூ.500, ரூ.1000 தடை : ஏர்டெல், வோடபோன் பில் செலுத்தும் காலக்கெடு நீட்டிப்பு.!
ரூ.500/- மற்றும் ரூ.1000/- தடை காரணமாக தொலைபேசி பில்கள் கட்ட முடியவில்லையா.? ஏர்டெல் மற்றும் வோடபோன் உங்களுக்கான காலக்கெடுவை நீட்டித்துள்ளது.
ரூ.500/- மற்றும் ரூ.1000/- தாள்களை தடை செய்த நரேந்திர மோடியின் வரலாற்றுச்செயல் ஆனது பல நன்மைகளை நமக்கு வழங்க இருக்கிறது என்பது ஒருபக்கமிருக்க மறுபக்கம் அது பரவலாக பொதுவான வெகுஜன பாதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
கையில் பணம் இல்லை, ஏடிஎம் இல்லை, ஆனால் கட்டணம் செலுத்தும் தேதி மட்டும் நெருங்கி கொண்டே இருக்கிறது என்பது தான் உங்கள் கவலை என்றால் நீங்கள் ஒரு வோடபோன் அல்லது ஏர்டெல் வாடிக்கையாளர் என்றால், நீங்கள் இனி கவலைப்பட தேவையில்லை.

கவலைப்பட தேவையில்லை
தங்கள் வாடிக்கையாளர்களின் வசதியை மனதிற்கொண்டு வோடஃபோன் இந்தியா மற்றும் பார்தி ஏர்டெல் நிறுவனம் பில் செலுத்தும் கெடு நாளை 3 நாட்கள் அதிகமாக நீட்டிக்க முடிவு செய்துள்ளது எனவே, இந்த வழக்கில் நீங்கள் ரூ.500/- மற்றும் ரூ.1000/- தாள்கள் தடை காரணமாக கவலைப்பட தேவையில்லை, மேலும் தகவல்களுக்கு தொடரவும்.

பில்லுக்கு பணம்
மக்கள் தங்கள் டிடிஎச், இணையம் அல்லது வேறு எந்த பில் கட்டணம் செலுத்தும் கெடு நாள் நெருங்கிக்கொண்டு இருக்கிறது என்ற பயத்தில் கையில் பணமின்றி இருக்கிறார்கள் ஆனால் நீங்கள் ஏர்டெல் அல்லது வோடபோன் பயனராக இருந்தால், நீங்கள் உங்கள் பில்லுக்கு பணம் செலுத்தவும் மற்றும் உங்கள் சேவை தொடர்ந்து அனுபவிக்கவும் கூடுதலாக 3 நாட்கள் கிடைக்கும்.

காலாவதி
இந்த வழக்கில் நீங்கள் வோடபோன் வயர்லெஸ் சேவையை பெறுபவர் என்றால் நீங்கள் பில் கடா வேண்டிய கடைசி தேதி நவம்பர் 15 ஆகும். காலாவதியாகி நீட்டிப்பு பற்றி தொலை தொடர்பு ஆபரேட்டர் அதன் வாடிக்கையாளர்களுக்கு மெசேஜ்களை அனுப்பி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
புதிய ஸ்மார்ட்போன் கருவிகளை சலுகை விலையில் வாங்க கிளிக் செய்யுங்கள்

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்
பார்தி ஏர்டெல் நிறுவனமும் மூன்று நாட்கள் நிலுவைத் தொகை காலக்கெடுவை நீட்டித்துள்ளது. எனினும், தொலை தொடர்பு ஆப்ரேட்டர் கூடுதலாக வழங்கும் தரவு மற்றும் டால்க் டைம்தனை ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் லோன் முறையில் கொடுக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆன்லைன் மூலம்
வாடிக்கையாளர்களும் தங்கள் பில்களை ஆன்லைன் மூலம், எம்பைசா வழியாக, செக் மூலமாக அல்லது குறைந்த தர வகுப்பு தாள்கள் கொண்டும் கூட செலுத்தலாம்.

மேலும் படிக்க
ரூ.500 நோட்டுகள் நிறுத்தம், பணமின்றி சமாளிக்க உதவும் ஆப்ஸ்.!


Click it and Unblock the Notifications