ரூ.499-/க்குள் அதிகமான டேட்டா தரும் டெலிகாம் நிறுவனம் எது? வாங்க பார்ப்போம்.!

ஏர்டெல் ரூ.499-/திட்டதில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 82-நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 164ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

|

இந்தியாவில் டெலிகாம் நிறுவனங்கள் தொடர்ந்து புதிய திட்டங்கள் மற்றும் சலுகைகளை வழங்கிய வண்ணம் உள்ளது, குறிப்பாக ஜியோ நிறுவனம்
இந்த ஆண்டு துவக்கம் முதலே பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தியது. சில நாட்களுக்கு முன்பு ஓப்பன்சிக்னல் வெளியிட்ட ஸ்பீட் டெஸ்டில் அறிக்கையின் படி ரிலையன்ஸ் ஜியோ, வெறும் 5.13 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை மட்டுமே பதிவு செய்துள்ளது. மறுகையில் உள்ள பார்தி ஏர்டெல் நிறுவனமானதோ 9.31 Mbps என்கிற சராசரி 4ஜி பதிவிறக்க வேகத்தை பதிவு செய்துள்ளது. இது ஜியோவை விட சரியாக 4 Mbps அதிகமாகும்.

ரூ.499-/க்குள் அதிகமான டேட்டா தரும் டெலிகாம் நிறுவனம் எது?

டெலிகாம் நிறுவனம் இப்போது நாள் ஒன்றுக்கு 2ஜபி டேட்டா முதல் 5ஜிபி டேட்டா வரை வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி ஜியோ அறிவித்துள்ள ரூ.799/- திட்டத்தில் நாள் ஒன்றுக்கு 5ஜிபி டேட்டா வீதம் பயன்படுத்த முடியும், குறிப்பாக இந்த திட்டத்தை 28நாட்கள் மட்டுமே பயன்படுத்த முடியும். ஜியோ ரூ.799/- திட்டத்தில் பயனர்கள் மொத்தமாக 140ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது ரூ.499-க்குள் அதிகமான டேட்டா தரும் டெலிகாம் நிறுவனங்களின் பட்டியலைப் பார்ப்போம்.

ஐடியா:

ஐடியா:

ஐடியா நிறுவனம் அறிமுகம் செய்துள்ள ரூ.499/-ப்ரீபெய்ட் திட்டத்தில் தினசரி 2ஜிபி வீதம் 82 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், குறிப்பாக
இந்த திட்டத்தில் 164ஜிபி டேட்டா மொத்தமாக வழங்கப்படுகிறது. மேலும் எஸ்டிடி மற்றும் லோக்கல் கால் அழைப்பு இந்த திட்டத்தின் கீழ்
இலவசமாக வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இலவச ரோமிங் கால் அழைப்பு மற்றும் தினசரி 100எஸ்எம்எஸ் இந்த
திட்டத்தில் வழங்கப்படுகிறது என ஐடியா நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர்டெல்:

ஏர்டெல்:

ஏர்டெல் ரூ.499/-திட்டதில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 82-நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 164ஜிபி டேட்டாவை
பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ்டிடி, லோக்கல் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் இலவசமாக
வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் கிடைக்கும்.

 ஜியோ:

ஜியோ:

ஜியோ அறிவித்துள்ள ரூ.498/-திட்டதில் தினசரி 2ஜிபி டேட்டா வீதம் 91-நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 182ஜிபி டேட்டாவை பயன்படுத்த முடியும். மேலும் எஸ்டிடி, லோக்கல் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் கிடைக்கும்.

Instagram Simple Tips and Tricks (TAMIL)
 வோடபோன்:

வோடபோன்:

வோடபோனின் ரூ.511/- திட்டத்தில் 2ஜிபி டேட்டா வீதம் 84-நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 168ஜிபி டேட்டாவை பெற முடியும். மேலும் எஸ்டிடி, லோக்கல் கால் அழைப்புகள் மற்றும் ரோமிங் அழைப்புகள் இலவசமாக வழங்கப்படுகிறது. குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் கிடைக்கும்.

 பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல்:

பிஎஸ்என்எல் அறிவித்துள்ள ரூ.485/-திட்டத்தில் தினசரி 1.5ஜிபி டேட்டா வீதம் 91 நாட்களுக்கு பயன்படுத்த முடியும், மொத்தமாக இந்த திட்டத்தல் 182ஜிபி டேட்டாவை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் எஸ்டிடி, லோக்கல் கால் அழைப்புகளை இலவசமாக வழங்கப்படுகிறது.குறிப்பாக இந்த திட்டத்தில் தினசரி 100எஸ்எம்எஸ் கிடைக்கும்.

Best Mobiles in India

English summary
Rs 499 Plans Compared – Which Is The Best Value-For-Money Plan ; Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X