திடீரென்று ரூ.3,000 விலை குறைக்கப்பட்ட லேட்டஸ்ட் Samsung போன்! நம்பி வாங்கலாமா?
நீங்கள் ஒரு சாம்சங் ரசிகர் என்றால், அந்நிறுவனத்திடம் இருந்து ஒரு நல்ல 'வாட்டர் ரெசிஸ்டண்ட்' ஸ்மார்ட்போனை அல்லது ஒரு நல்ல மிட்-ரேன்ஜ் மாடலை வாங்க வேண்டும் என்கிற திட்டம் உங்களுக்கு இருந்தால், இதை விட ஒரு அருமையான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கவே கிடைக்காது!
ஏனெனில் சாம்சங் நிறுவனம், அதன் மிட்-ரேன்ஜ் வாட்டர்-ரெசிஸ்டண்ட் ஸ்மார்ட்போன் ஒன்றின் விலையை நம்பமுடியாத அளவிற்கு குறைத்துள்ளது. அதென்ன மாடல்? அதன் பழைய மற்றும் புதிய விலை விவரங்கள் என்னென்ன? இதை நம்பி வாங்கலாமா? இல்லை வேண்டாமா? வாருங்கள் விரிவாக பார்க்கலாம்!

ரூ.3,000 ப்ரைஸ் கட்... அதுவும் எல்லா ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் மீதும்!
நாம் இங்கே பேசும் சாம்சங் நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் - கேலக்ஸி ஏ53 5ஜி (Galaxy A53 5G) ஆகும். நினைவூட்டும் வண்ணம், சாம்சங்கின் இந்த 5ஜி ஸ்மார்ட்போன் 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களின் கீழ், இந்த ஆண்டு மார்ச் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
தற்போது கேலக்ஸி ஏ53 5ஜி ஸ்மார்ட்போனின் இரண்டு ஸ்டோரேஜ் விருப்பங்களின் மீதும் ரூ.3,000 என்கிற விலைக்குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இனிமேல் Samsung Galaxy A53 5G மாடலின் விலை இதுதான்!
அறிமுகத்தின் போது Samsung Galaxy A53 5G ஸ்மார்ட்போனின் 6GB+128GB ஸ்டோரேஜ் ஆப்ஷன் ஆனது ரூ.34,499 க்கும் மற்றும் 8GB+128GB விருப்பமானது ரூ.35,999 க்கும் வெளியானது.
தற்போது இந்த 2 ஸ்டோரேஜ் ஆப்ஷன்களுமே ரூ.3,000 என்கிற விலைக்குறைப்பை பெற்றுள்ளன. அதாவது இப்போது 6ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.31,499 க்கும், 8ஜிபி ரேம் வேரியண்ட்டை ரூ.32,999 க்கும் வாங்கலாம் என்று அர்த்தம்.
இந்த ஸ்மார்ட்போன் நான்கு கலர் ஆப்ஷன்களின் கீழ் வருகிறது: Awesome Blue, Awesome Black, Awesome Peach மற்றும் Awesome White.

இந்த Price Cut-ஐ கருத்தில் கொண்டு இதை நம்பி வாங்கலாமா? வேண்டாமா?
அந்த முடிவை எடுப்பதற்கு முன், சாம்சங் Galaxy A53 5ஜி ஸ்மார்ட்போன் வழங்கும் அம்சங்களை பற்றி நாம் மேலோட்டமாகவாவது பார்க்க வேண்டும்.

டிஸ்பிளே, ஸ்டோரேஜ் - எப்படி?
சாம்சங் கேலக்ஸி ஏ53 5ஜி ஆனது 1080x2400 பிக்சல் ரெசல்யூஷன், 120Hz ரெஃப்ரெஷ் ரேட், கார்னிங் கொரில்லா கிளாஸ் உடனான 6.5 இன்ச் FHD+ Super AMOLED டிஸ்ப்ளேவை பேக் செய்கிறது.
இதுவொரு மிட்ரேன்ஜ் சாம்சங் ஸ்மார்ட்போன் என்பதால், ஆக்டாகோர் எக்ஸினோஸ் 1280 ப்ராசஸர் உடன் 6ஜிபி / 8ஜிபி ரேம் மூலம் இயக்கப்படுகிறது. இன்டர்னல் ஸ்டோரேஜை பொறுத்தவரை, 128ஜிபி-ஐ வழங்குகிறது; இதில் மைக்ரோ எஸ்டி கார்டு ஆதரவும் உள்ளது.

கேமரா செட்டப் - எப்படி?
ஆண்ட்ராய்டு 12 ஓஎஸ் அடிப்படையிலான Samsung One UI 4.1 கொண்டு இயங்கும் இந்த ஸ்மார்ட்போனில் 64MP மெயின் கேமரா + 12MP அல்ட்ரா-வைட் கேமரா + 5MP டெப்த் சென்சார் + 5MP மேக்ரோ கேமரா என்கிற குவாட் ரியர் கேமரா செட்டப் உள்ளது. முன்பக்கத்தில்,32MP செல்பீ கேமரா உள்ளது.
மேலும் இது இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், டால்பி அட்மோஸால் ட்யூன் செய்யப்பட்ட ஸ்டீரியோ ஸ்பீக்கர்ஸ், வாட்டர்-ரெசிஸ்டண்ட்டிற்கான IP67 மதிப்பீடு போன்றவைகளையும் வழங்குகிறது.

பேட்டரி - எப்படி?
இந்த ஸ்மார்ட்போன் 25W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 5000mAh பேட்டரி மூலம் சக்தியூட்டப்படுகிறது. நிறுவனத்தின் கூற்றுப்படி, இது வெறும் 30 நிமிடங்களில் 50% வரை சார்ஜ் ஆகும்.

தீர்ப்பு சொல்லிடலாமா?
சாம்சங் கேலக்ஸி A53 5G - ஒரு திறமையான மிட்-ரேன்ஜ் பிரீமியம் ஸ்மார்ட்போன் தான் என்றாலும் கூட செயல்திறன் அடிப்படையில் கொஞ்சம் பின்தங்கியதாகவே தெரிகிறது.

பெர்ஃபார்மென்ஸ்-ஆ? கேமராவா? எது உங்களுக்கு வேண்டும்?
இதன் சற்றே குறைவான செயல்திறனுக்கு முக்கிய காரணம் இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சிப்செட் தான். நிறுவனத்தின் பட்ஜெட் ஸ்மார்ட்போன் ஆன Galaxy M33 5G போன்ற மாடல்களுக்கு வேண்டுமானால் இது பொருத்தமாக இருந்திருக்கலாம், ஆனால் ரூ.35,000 என்கிற பட்ஜெட்டிற்கு இது சரிவராது என்றே கூற வேண்டும்.
இன்னும் குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், இதன் "முன்னோடியான" Galaxy A52s 5G வழங்கும் கேமிங் செயல்திறனை கூட இது வழங்கவில்லை.
இருப்பினும் கேமராக்களை பொறுத்தவரை, ஏ53 5ஜி ஸ்மார்ட்போனில் எந்த குறையும் சொல்ல முடியாது, குறிப்பாக டேலைட்டில்! மேலும் இந்த பட்ஜெட் பிரிவின் கீழ் IP67 மதிப்பீட்டை வழங்குவதும் கூட சாம்சங் நிறுவனத்தின் ஒரு அருமையான நடவடிக்கை தான். இனிமேல் உங்கள் முடிவு!
Photo Courtesy: Samsung


Click it and Unblock the Notifications