அலைமோதும் கூட்டம்: ரூ.3,999-க்கு பக்கா ஸ்மார்ட் போன்: எந்த நிறுவனம் தெரியுமா?
சீனாவின் புதிய மொபைல் நிறுவனமான ஐடெல் இந்தியாவில் அதன் புதிய வகை ஸ்மார்ட்போன் மாடல்களை களம் இறங்கியுள்ளது. இந்த மொபைல்கள் இந்திய வாடிக்கையாளர்களுக்கென பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டது. மேலும் இந்த மொபைல்கள் வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் என நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

எஸ்42 மற்றும் எ44 என இரண்டு புதிய வகை மொபைல்
இந்நிறுவனம் எஸ்42 மற்றும் எ44 என இரண்டு புதிய வகை மொபைல்களை அறிமுகப்படுத்தியது. இவற்றின் விலையானது முறையே எஸ்42-8,499 ரூபாய்க்கும் எ44 மொபைல் ஆனது 5,799 ரூபாய்க்கும் விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

வேகம் மற்றும் மல்டி டாஸ்க்
ஐடெல் நிறுவனத்தின் தலைமை ஸ்மார்ட்போனான எஸ்42 வாடிக்கையாளர்களுக்கு வேகம் மற்றும் மல்டி டாஸ்க் அனுபவத்தை கொடுக்கும் குவால்காம் ஸ்னாப்டிராகன் தயாரிப்பில் 1.4 ஜிகாஹெர்ட்ஸ் வேகம் கொண்ட 425 சிப்செட் மற்றும் புத்தம் புது வரவான ஆண்ட்ராய்டு 8 ஓரியோ இயங்குதளத்தை கொண்டு வருகிறது. இக்கருவியில் 3ஜிபி ரேம் மற்றும் 16ஜிபி உள்ளடக்க மெமரி இடம்பெற்றது, அதன்பின்பு கூடுதலாக 128ஜிபி வரை மெமரி நீட்டிப்பு ஆதரவு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

எ44 மற்றும் எ44-ப்ரோ
எ44 மற்றும் எ44-ப்ரோ ஆனது கைக்கு அடக்கமான 5.45 அங்குலம் கொண்ட 18:9 திரை விகிதம் மற்றும் மிக மெல்லிய பெசல் கொண்டுள்ளது. இந்த இரண்டு போன்களும் ஆண்ட்ராய்டு 7.0 நௌக்கட் இயங்குதளம் கொண்டு செயல்படுகிறது.

ஏ25 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போன்
தற்போது ஐடெல் பிராண்ட் இந்தியாவில் ஏ25 என்ற பெயரில் புதிய ஸ்மார்ட்போனை குறைந்த விலையில் அறிமுகம் செய்துள்ளது. ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனாக வெளியாகி இருக்கும் ஐடெல் ஏ25 ஸ்மார்ட்போனில் 5.0 இன்ச் ஐ.பி.எஸ். ஹெச்.டி. 1280x720 பிக்சல் டிஸ்ப்ளே, குவாட்கோர் பிராஸர், 1 ஜி.பி. ரேம், 16 ஜி.பி. மெமரி வழங்கப்பட்டுள்ளது.

கேமரா மற்றும் செயலி வசதிகள்
கேமரா வசதிகளை பொருத்தவரை ஏ25 ஸ்மார்ட்போனில் 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ், 2 எம்.பி. செல்ஃபி கேமரா மற்றும் ஃபிளாஷ் லைட் வசதி வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்) இயங்குதளம், 3020 எம்.ஏ.ஹெச் பேட்டரி வழங்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் போனின் பிரத்யேக வசதிகள்
குறிப்பாக இந்த ஸ்மார்ட்போனில் ஆங்கிலம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம், மராத்தி, பஞ்சாபி, குஜராத்தி, உருது, நேபாளம், அசாமீஸ் மற்றும் ஒரியா போன்ற மொழிகளில் இயக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது.

ஐடெல் ஏ25 சிறப்பம்சங்கள்:
- 5.0 இன்ச் ஹெச்.டி. 1280x720 பிக்சல் ஐ.பி.எஸ். டிஸ்ப்ளே
- 1.4 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்கோர் பிராசஸர்
- 1 ஜி.பி. ரேம்
- 16 ஜி.பி. மெமரி
- மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
- ஆண்ட்ராய்டு 9.0 பை (கோ எடிஷன்)
- டூயல் சிம் ஸ்லாட்
- 5 எம்.பி. பிரைமரி கேமரா, எல்.இ.டி. ஃபிளாஷ்
- 2 எம்.பி. செல்ஃபி கேமரா, ஃபிளாஷ்
- டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
- மைக்ரோ யு.எஸ்.பி
- 3020 எம்.ஏ.ஹெச். பேட்டரி

ஐடெல் ஏ25 ஸ்மார்ட்போன்:
ஐடெல் ஏ25 ஸ்மார்ட்போன் கிரேடியன்ட் பர்ப்பிள், கிரேடியன்ட் புளு மற்றும் கிரேடியன்ட் சீ புளூ போன்ற நிறங்களில் கிடைக்கிறது. இதன் விலை ரூ. 3,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

5 கோடி வாடிக்கையாளர்கள் கொண்டாட்டம்
ஐடெல் நிறுவனம் ஏ46 ஸ்மார்ட் போனை ரூ.4,999-க்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த போனானது 2 ஜிபி ரேம் 32 ஜிபி சேமிப்பு வசதியுடன் வருகிறது. அதோடு இந்த வகை ஸ்மார்ட் போனுக்கு ஹெச்டி ஹெட்செட் இலவசமாக வழங்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications