Home
News

Jio-க்கு தாவுங்க.. ரூ.250 இல் இருந்து ரூ.300.. Airtel கஸ்டமர்கள் தலையில் அடுத்த இடி.. கோபால் விட்டல் அறிவிப்பு

ரூ.250 இல் இருந்து ரூ.300 என்றதுமே ஏர்டெல் (Airtel) நிறுவனம் ஆனது - ரூ.250 பட்ஜெட்டில் கிடைக்கும் திட்டங்களை ரூ.300 க்கு விலை உயர்த்த போகிறதா? என்று நீங்கள் யூகித்து இருந்தால்.. கிட்டத்தட்ட அது சரி தான். ஆனால் இந்த ரூ.50 அதிகரிப்பானது ரீசார்ஜ் திட்டங்களில் வரப்போவது இல்லை.

மாறாக ஏர்டெல்லின் ஏஆர்பியு-வில் (Airtel ARPU) ரூ.50 அதிகரிப்பு திட்டமிடப்பட்டுள்ளது. ஏஆர்பியு என்பதன் விரிவாக்கத்தை அறிந்தவர்கள் - இதில் ஏற்படும் அதிகரிப்பு எப்படி ஏர்டெல் ரீசார்ஜ் திட்டங்களின் மீதான விலை உயர்விற்கு வழிவகுக்கும் என்பதை நன்கு அறிந்து இருப்பார். ஏஆர்பியு என்றால் ஆவரேஜ் ரெவின்யூ பெர் யூசர் (Average revenue per user) என்பதன் சுருக்கமாகும்.

ரூ.250 இல் இருந்து ரூ.300.. Airtel கஸ்டமர்கள் தலையில் அடுத்த இடி!

அதாவது - ஒரு பயனருக்கு சராசரி வருவாய் ஆகும். இந்தியாவின் இரண்டாவது பெரிய டெலிகாம் ஆபரேட்டர் ஆன பாரதி ஏர்டெல், 2026 நிதியாண்டின் முதல் காலாண்டின் இறுதியில் அதன் சராசரி ஒரு பயனருக்கு வருவாய் ரூ.250 என அறிவித்துள்ளது. கூடவே இந்நிறுவனம் விரைவில் அதன் ஏஆர்பியு இலக்கான ரூ.300-ஐ அடைய விரும்புகிறது.

இது குறித்து பேசிய பாரதி ஏர்டெல்லின் தலைமை நிர்வாக அதிகாரி ஆன கோபால் விட்டல் (Bharti Airtel CEO Gopal Vittal), இந்தியாவின் கட்டண கட்டமைப்பு (India's Tariff Architecture) இதற்கு உகந்ததாக இல்லை, அதை சரிசெய்ய வேண்டும் என்று கூறியுள்ளார். அதாவது அடுத்த ரீசார்ஜ் கட்டண விலை உயர்விற்கு அடித்தளம் போடுகிறார்; அதை பலமாக பரிந்துரைக்கவும் செய்கிறார்.

இப்போதைக்கு நாம் எவ்வளவு டேட்டாவை கொடுக்கிறோம், எவ்வளவு எஸ்எம்எஸ் மற்றும் வாய்ஸ் கால்களை கொடுக்கிறோம் என்பதெல்லாம் ஒரு விஷயமே இல்லை. இதெல்லாம் வளர்ச்சிக்கு வழிவகுக்காது. இந்தோனேசியாவில் இருப்பதை போல, மிகவும் புத்திசாலித்தனமான கட்டமைப்பு இருந்திருந்தால், இன்று இந்தியாவிற்கு இருக்கும் ஏஆர்பியு-வை விட கணிசமான உயர்ந்த இடத்தில் நாம் அமர்ந்திருப்போம் என்றும் விட்டல் கூறியுள்ளார்.

மேலும் அதிகமான நன்மைகளை பெறும் நுகர்வோர்கள் அதிகமாக பணம் செலுத்தும் கட்டண அமைப்பை (Consumers who consume more, pay more) பற்றியும் மிட்டல் பேசியுள்ளார். அதிக நன்மைகளை நுகர்வோர்கள் செலுத்தும் கட்டணம் ஏழைகளை விட குறைவாக இருப்பது ஒரு துரதிர்ஷ்டவசமான சூழ்நிலை. நாம் இனி ஏழைகளிடம் கட்டணம் வசூலிக்க வேண்டியதில்லை என்றும் விட்டல் கூறியுள்ளார்.

கட்டண உயர்வுகள் (Tariff Hike) இல்லாத நிலையில், ஃபீச்சர் போன் (Feature Phone) பயனர்களை ஸ்மார்ட்போன்களாக மேம்படுத்துதல், டேட்டாவை பணமாக்குதல் (Data monetisation) மற்றும் ப்ரீபெய்டு பயனர்களை போஸ்ட்பெய்டு சேவைகளுக்கு மாற்றுதல் (Converting prepaid users to postpaid services) ஆகியவற்றில் மட்டுமே ஏர்டெல் நிறுவனம் கவனம் செலுத்தி வருகிறது. இந்த முயற்சிகளின் கீழ் - 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் ஏர்டெல் நிறுவனம் 0.7 மில்லியன் போஸ்ட்பெய்டு பயனர்களை சேர்த்துள்ளது

இனிமேலும் அடிப்படை கட்டணங்களை (Base Tariff) அதிகரிக்க முடியாது என்பதை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நன்கு புரிந்து வைத்துள்ளன. இல்லையெனில் நாட்டில் உள்ள ஏழை மக்களை அது கடுமையாக பாதிக்கும். இதில் கவனம் செலுத்தி தான் ஏர்டெல் நிறுவனம் ஆனது மேற்குறிப்பிட்ட "புதிய கட்டண அமைப்பை" பற்றி பேசுகிறது

இந்த அமைப்பு - குறைவாக நுகரும் மக்கள் குறைவாக பணம் செலுத்த வேண்டும், அதிகமாக நுகரும் மக்கள் அதிகமாக பணம் செலுத்த வேண்டும் என்பதை உறுதி செய்யும். இதன் அடிப்படையில் வரும் அடுத்த சுற்று கட்டண உயர்வு ஆனது தொழில்துறைக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். அடிப்படை கட்டணங்களில் ஏற்படும் எந்தவொரு உயர்வும் கடுமையான சந்தாதாரர் இழப்பை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆகையால் தான் எல்லா நிறுவனங்களும் அமைதியாக இருக்கின்றன.

உதாரணத்திற்கு கடைசியாக அறிவிக்கப்பட்ட விலை உயர்வானது ஜியோ, ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா கஸ்டமர்களை பிஎஸ்என்எல் பக்கத்திற்கு தாவுவதற்கு வழி செய்து கொடுத்தது (இன்னும் சொல்லப்போனால் 100 அடி ரோடு ஒன்றே போட்டு கொடுத்தது). அது மீண்டும் நடக்கலாம். ஏர்டெல் மட்டுமே வித்தியாசமான விலை உயர்வை அறிவித்தால், இம்முறை யாரும் பிஎஸ்என்எல் பக்கம் செல்ல மாட்டார்கள். ஜியோவிற்கு தான் தாவுவார்கள்!

More from GizBot

Best Mobiles in India

English summary
Rs 250 to Rs 300 Airtel Wants To Increase ARPU CEO Gopal Vittal Comments on Tariff Hikes
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X