உங்கள் SBI கணக்கில் இருந்து திடீரென ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டதா? ஏன் தெரியுமா? இதுதான் காரணம்..
ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (State Bank of India) வங்கி தொடர்ந்து புதிய சேவைகள் மற்றும் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை வழங்கி வருகிறது. எனவே தான் இந்த வங்கியில் அதிக மக்கள் கணக்கு வைத்துள்ளனர். அதேபோல் நீங்கள் எஸ்பிஐ வாடிக்கையாளராக இருந்தால், கடந்த சில வாரங்களில் உங்கள் வங்கி கணக்கில் இருந்து ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டு இருக்கும். எதற்காக இதுபோல ரூ.236ஐ பிடித்தம் செய்கிறார்கள். இதற்கான காரணம் என்ன என்பது குறித்து தகவல்களை இங்கே பார்க்கலாம்.
அதாவது எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் அனைவருக்கும் கடந்த சில வாரங்களில் ரூ.236 பிடித்தம் செய்யப்பட்டதாக மேசேஜ் வந்திருக்கும். நாம் யாருக்கும் பணம் அனுப்பவில்லை. ஆனால் ஏன் ரூ.236 பிடித்தம் செய்தார்கள் என்ற சந்தேகம் உங்களுக்கு வந்திருக்கும். இது குறித்து வரும் எஸ்எமஎஸ்-களில் கூட தெளிவான தகவல் இருக்காது. இதனால் பல வாடிக்கையாளர்கள் குழும்பிப் போய் இருப்பார்கள்.

இது வேறு எதுவும் இல்லை உங்கள் டெபிட் கார்டு அதாவது ஏடிஎம் கார்டின் மெயிடன்ஸ் பீஸ் தான் அது. அதன்படி எஸ்பிஐ சார்பில் கிளாசிக், சில்வர், குளோபல் என பல வகையான கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் இந்த கார்டுகளுக்கு ஆண்டுதோறும் ரூ.200 பராமரிப்பு தொகையை வசூலிப்பார்கள். அதை தான் இப்போது பிடித்துள்ளனர். ஆனாலும் சார்ஜ் ரூ.200 தான் எதற்காக ரூ.236-ஆக பிடிக்கிறார்கள் என்று நீங்கள் கேட்கலாம்.
அதாவது இதற்கான காரணம், இந்த பரிவர்த்தனைக்கு மத்திய அரசு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கிறது. அதன்படி ரூ.200க்கு 18% ஜிஎஸ்டி என்றால் அது ரூ.36 வருகிறது. எனலே இந்த இரண்டையும் சேர்த்தே ரூ.236 பராமரிப்பு தொகையாக பிடித்தம் செய்யப்படுகிறது. அதேசமயம் பராமரிப்பு தொகை என்பது கார்டு வகைகளைப் பொறுத்து மாறுபடும்.
உதாரணமாக கிளாசிக், சில்வர் குளோபல் கார்டுகளுக்கு தான் ரூ.236 வசூலிக்கப்படுகிறது. ஆனால் யுவா/ கோல்ட்/ காம்போ/ மை கார்டு ஆகியவற்றுக்கு ரூ.250 + ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். இதுதவிர பிளாட்டினம் கார்டுகளுக்கு ரூ.350+ ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். மேலும் பிரைட் மற்றும் ப்ரீமியம் கார்டுகளுக்கு ரூ.425+ ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படும். பின்பு இதுபோல ஒவ்வொரு டைப் கார்டிற்கும் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக இந்த பிடித்தம் தொடர்பாக உங்களுக்கு வரும் மெசேஜ்ஜில் AMC எனக் குறிப்பிட்டு இருப்பார்கள். அதாவது AMC என்றால் Account Maintenance Charge ஆகும்.மேலும் இந்தாண்டு மட்டுமின்றி இனி வரும் ஆண்டுகளிலும் கூட பராமரிப்பு கட்டணத்தைப் பிடிக்கவே செய்வார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் எஸ்பிஐ வங்கி தினசரி யுபிஐ பரிவர்த்தனை வரம்பை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக இது வாடிக்கையாளர்கள் தங்கள் நிதிகளை மிகவும் கவனமாக நிர்வகிக்கவும், அதிகப்படியான செலவுகளைத் தவிர்க்கவும் உதவுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன்படி அனைத்து யுபிஐ ஆப்ஸ்களிலும் வாடிக்கையாளர்களை ஒரு நாளைக்கு அதிகபட்சமாக 10 பரிவர்த்தனைகள் செய்ய அனுமதிக்கிறது.

வாடிக்கையாளர்களுக்கு ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் வரையறுக்கப்பட்டுள்ள அதிகபட்ச தொகை ரூ.1,00,000 ஆகும். குறிப்பாக இந்த வரம்பை மீறி யுபிஐ வழியாகப் பணம் செலுத்த முடியாது. குறிப்பாக இந்த வரம்புகள் மாற்றத்திற்குட்பட்டவை. எனவே, வாடிக்கையாளர்கள் அவ்வப்போது வங்கியின் விதிமுறைகளையும், நிபந்தனைகளையும் வங்கி இணையதளங்கள் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும்.
சரி இப்போது விஷயத்துக்கு வருவோம். அதாவது எஸ்பிஐ வங்கியால் நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச UPI பரிவர்த்தனை வரம்பு ரூ. 1,00,000 ஆகும். ஆனால் இந்த வரம்பை ரூ.1,00,000-க்கு மேல் உங்களால் அதிகரிக்க முடியாது என்றாலும், SBI Yono அப்ளிகேஷன் மூலம் உங்கள் நிதித் திட்டமிடல் தேவைகளுக்கு ஏற்றவாறு அதை குறைத்துக் கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications