வெளியே செல்லும் போது பணம் எடுத்துட்டு போக வேணாம்., ஏடிஎம் செல்லவும் வேணாம்: பிரதமர் மோடி சொன்ன தகவல்!

|

மன் கி பாத் என்ற வானொலி நிகழ்ச்சியில் பிரதமர் மோடி நாட்டு மக்களிடையே நேற்று (ஏப்ரல் 24) உரையாற்றினார். அதில் தினசரி ரூ.20,000 கோடி மதிப்பிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளை நடைபெறுகின்றன எனவும் இது சேவைகளை மேம்படுத்தும் வகையிலும் திறந்த சமூகத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக குறிப்பிட்டார். மேலும் சிறிய ஆன்லைன் கட்டணங்களும் பெரிய டிஜிட்டல் பொருளாதாரத்தை உருவாக்க உதவுகின்றன எனவும் இதன்மூலம் பல புதிய ஃபின்டெக் ஸ்டார்ட்-அப்கள் உருவாகி வருவதாகவும் குறிப்பிட்டார்.

 ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை

மார்ச் மாதத்தில் மட்டும் ரூ.10 லட்சம் கோடி வரை யூபிஐ டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை நடந்துள்ளது எனவும் நாள்தோறும் ரூ.20,000 கோடி ஆன்லைன் பரிவர்த்தனை நடைபெறுகிறது எனவும் குறிப்பிட்டார். சிறிய தொழில் முனைவோர்கள் அதாவது சிறிய உணவகங்கள், பழக்கடைகளிலும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை செயல்படுத்தப்படுகிறது. டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஸ்டார்ட் அப் துறை குறித்து அறிந்த பலரும் அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். டிஜிட்டல் பணபரிவர்த்தனையால் பணத்தை எடுத்து செல்லவோ ஏடிஎம்மை தேடி அலையவோ இனி தேவையில்லை என குறிப்பிட்டார்.

டிஜிட்டல் பணம் செலுத்துதல்

டிஜிட்டல் பணம் செலுத்துதல்

டிஜிட்டல் பணம் செலுத்துதல் மற்றும் ஸ்டார்ட் அப் துறை குறித்து அறிந்த பலரும் அதை மற்றவர்களிடமும் பகிர்ந்து கொள்ளும்படி கேட்டுக் கொண்டார். உங்கள் அனுபவங்கள் நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு உத்வேகத்தை அளிக்கும் என அவர் குறிப்பிட்டார். கையில் காசு எடுத்துச் செல்லாமல் டிஜிட்டல் பண பரிவர்த்தனை மூலம் பணம் செலுத்தலாம், ஒரு நாள் முழுவதும் பணத்தை பயன்படுத்தாமலேயே டிஜிட்டல் பரிவர்த்தனை அனுபவத்தை உணர வேண்டும் என குறிப்பிட்டார்.

நேர்மையான சூழலை உருவாக்க முடியும்

நேர்மையான சூழலை உருவாக்க முடியும்

நம் நாட்டில் தினசரி ரூ.20,000 கோடி டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறுகிறது. மார்ச் மாதத்தில் மட்டும் யூபிஐ பரிவர்த்தனைகள் ரூ.10 லட்சம் கோடி ரூபாயை தாண்டி இருக்கிறது என அவர் குறிப்பிட்டார். இதுகுறித்து மோடி குறிப்பிட்ட தகவலின்படி, இதன்மூலம் நாட்டின் வசதிகளை மேம்படுத்துவது மட்டுமல்ல நேர்மையான சூழலை உருவாக்க முடியும் எனவும் குறிப்பிட்டார். மேலும் விடுமுறை நாட்களில் உள்ளூர் அருங்காட்சியத்திற்கு சென்று "MuseumMemories" என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி தங்கள் அனுபவங்களை பகிர்ந்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா

மத்திய அரசின் டிஜிட்டல் இந்தியா

மத்திய அரசு கொண்டு வந்த முக்கிய திட்டங்களில் டிஜிட்டல் இந்தியா திட்டம் ஒன்று. டிஜிட்டல் இந்தியா திட்டம் தொடர்ந்து முன்னேற்றம் அடைந்து வருகிறது. குறைவான விலையில் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டிப்போட்டுக் கொண்டு வழங்கும் சலுகை விலை இணைய சேவைகளும் இதற்கு முக்கிய காரணம். இந்தநிலையில் உலக பணக்காரர்களில் ஒருவரும் மைக்ரோசாப்ட் இணை நிறுவனருமான பில்கேட்ஸ், சினாவிற்கு அடுத்து டிஜிட்டல் துறையில் சிறந்த முன்னேற்றம் கண்டுள்ள ஒரு நாடு இந்தியாதான் என புகழாரம் சூட்டினார். இதுகுறித்து பில்கேட்ஸ் கூறியுள்ள முழு தகவல்களை பார்க்கலாம்.

டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள நாடு: பில்கேட்ஸ்

டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள நாடு: பில்கேட்ஸ்

இந்தியாவில் டிஜிட்டல் தொடர்பான விஷயங்கள் துரிதமாக முன்னேற்றம் அடைந்து வருகின்றன எனவும் சீனாவை தவிர டிஜிட்டல் துறையில் முன்னேற்றம் கண்டுள்ள அடுத்த நாடு இந்தியாதான் எனவும் பில்கேட்ஸ் கூறினார். மேலும் இந்தியாவில் டிஜிட்டல் கட்டண முறை பெருமளவு அதிகரித்து வருகிறது. 2016 ஆம் ஆண்டு நவம்பர் 8 ஆம் தேதி மத்திய அரசு பண மதிப்பிழப்பு நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி அப்போது புழக்கத்தில் இருந்த ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதும் ஒரு காரணமாக கருதப்படுகிறது என குறிப்பிட்டார்.இந்தியாவின் திறம்பட்ட செயல்பாடானது பண விநியோகத்திற்கான செலவு மற்றும் பண தேக்கத்தை குறைக்கும் எனவும் இந்தியாவின் நிதி பரிமாற்றக் கொள்கைகள் மற்றும் அடையாளங்களாக இருக்கும் லட்சிய தளங்களை பில்கேட்ஸ் பாராட்டினார்.

Best Mobiles in India

English summary
Rs 20,000 crore worth of digital transactions take place daily: PM Modi Mann ki Baat

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X