ரூ.19,000க்கு விற்ற Smart TV இப்போ ரூ.7,143 மட்டுமே! 62% தள்ளுபடியுடன் கிடைக்கும் டாப் டிவி லிஸ்ட்!
ஒரு வீடு என்பது முழுமை அடைவதற்கு Smart TV என்பது பிரதானமாகி விட்டது. ஸ்மார்ட்டிவிகள் பல்வேறு விலைப் பிரிவில் புதுப்புது அம்சங்களோடு அறிமுகமாகி வருகிறது. இதற்கு மத்தியில் ஸ்மார்ட்டிவிகளுக்கு ஆன்லைன் தளங்கள் தள்ளுபடிகள் அறிவித்து அதை இன்னும் மலிவு விலைகளாக மாற்றுகிறது. அதன்படியான தள்ளுபடி விவரத்தை தான் பார்க்கப்போகிறோம்.

புது ஸ்மார்ட் டிவி வாங்க சரியான நேரம்
டிஜிட்டல் யுகத்தில் ஒரு வீடு என்பது முழுமை அடைவதற்கு ஸ்மார்ட்டிவி என்பது பிரதானமாகி விட்டது. சிலரின் வீடுகளில் மட்டும் ஸ்மார்ட்டிவிகள் இல்லை. அதேபோல் பெரும்பாலானோர் வீட்டில் இருப்பது 32 இன்ச் ஸ்மார்ட்டிவிகள் தான் இருக்கிறது. உங்கள் வீட்டில் Smart TV இல்லை என்றாலும் சரி, 32 இன்ச் ஸ்மார்ட்டிவியை மேம்படுத்த திட்டமிட்டிருந்தாலும் சரி, அதற்கு இது சரியான நேரமாகும்.

அதீத தள்ளுபடியில் ஸ்மார்ட்டிவிகள்
ஸ்மார்ட்டிவிகளை போட்டிப்போட்டு ஒவ்வொரு நிறுவனங்களும் அறிமுகம் செய்து கொண்டிருக்கும் அதேநேரத்தில் ஆன்லைன் விற்பனை தளங்கள் போட்டிப்போட்டு அதற்கு சலுகைகள் வழங்கி வருகிறது. நீங்கள் சிறந்த அம்சங்கள் கொண்ட ஸ்மார்ட்டிவிகளை வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும்.
காரணம் பிளிப்கார்ட்டில் ரூ.19,000 மதிப்புள்ள ஸ்மார்ட்டிவியை ரூ.7,143 என்ற விலையில் வாங்கலாம். தள்ளுபடி விவரங்களை விரிவாக பார்க்கலாம்.

ரூ.19,000க்கு விற்ற ஸ்மார்ட்டிவி ரூ.7143 மட்டுமே
BeethoSOL 32 inch HD Ready LED Smart Android TV ஆனது ரூ.19,000 என விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்டிவி ரூ.7,143 என கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்டிவிக்கு பிளிப்கார்ட்டில் 62 சதவீதம் வரை தள்ளுபடி வழங்கப்பட்டிருக்கிறது. இது பக்கா ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்டிவியாகும். நெட்ஃபிளிக்ஸ், அமேசான் பிரைம், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், யூடியூப் போன்ற பல ஸ்ட்ரீமிங் தள ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. இதில் 24 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் பொருத்தப்பட்டுள்ளது.

Mi 5A Smart Android TV
Mi 5A Smart Android TV ஆனது பெயர் குறிப்பிடுவது போல் பக்கா ஆண்ட்ராய்டு டிவி ஆகும். இந்த டிவியானது ரூ.24,999க்கு விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது ரூ.13,999 என கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்டிவிக்கு 44 சதவீத தள்ளுபடி வழங்கப்படுகிறது.

சிறந்த ஆண்ட்ராய்டு டிவி
Mi 5A Smart Android TV ஆனது எச்டி ரெடி எல்இடி டிஸ்ப்ளேவைக் கொண்டிருக்கிறது. இதில் டால்பி ஆடியோ ஆதரவுகள் இருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ், டிஸ்னி+ ஹாட்ஸ்டார், பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட பல்வேறு ஓடிடி ஸ்ட்ரீமிங் தள ஆதரவு இதில் வழங்கப்பட்டிருக்கிறது. சிறந்த ஆண்ட்ராய்டு டிவி வாங்கத் திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான தேர்வாகும்.

Infinix Y1 Smart Linux TV
Infinix Y1 Smart Linux TV ஆனது ரூ.16,999 என விற்கப்பட்டு வந்த நிலையில் தற்போது பாதி விலைக்கு கிடைக்கிறது. அதாவது இந்த ஸ்மார்ட்டிவி பிளிப்கார்ட்டில் 47 சதவீத தள்ளுபடியுடன் ரூ.8,999 என கிடைக்கிறது.

பிரைம் வீடியோ, யூடியூப் உள்ளிட்ட ஓடிடி அணுகல் இதில் கிடைக்கிறது. லினக்ஸ் ஓஎஸ் மூலம் இது இயங்குகிறது. 20 வாட்ஸ் ஸ்பீக்கர்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. எல்இடி பேனல் ஆதரவு இதில் இருக்கிறது. 4ஜிபி ரேம் இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்டிவி.

Toshiba Smart TV
Toshiba Smart TV ஆனது ஃபுல் எச்டி ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி ஆகும். 43 இன்ச் அளவு கொண்ட இந்த ஸ்மார்ட்டிவியானது ரூ.34,990 என நிர்ணயம் செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த டிவிக்கு 28 சதவீத தள்ளுபடி கிடைக்கிறது. அதன்படி இந்த ஸ்மார்ட்டிவியானது பிளிப்கார்ட் தளத்தில் ரூ.24,990 என வாங்கலாம். கூடுதலாக நோ காஸ்ட் இஎம்ஐ, வங்கி சலுகைகள் என பல தள்ளுபடிகள் வழங்கப்படுகிறது.

இந்த ஸ்மார்ட்டிவி ஆனது நெட்ஃபிளிக்ஸ், பிரைம் வீடியோ, ஜீ5, ஆக்ஸிஜன் ப்ளே, ஈராஸ் நவ், ஜியோ சினிமா, சோனி லைவ் என பல ஓடிடி அணுகலைக் கொண்டிருக்கிறது. 20 வாட்ஸ் பவர்ஃபுல் ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி ஆடியோ, டிடிஎஸ் விர்ச்சுல் என ஏணைய ஆடியோ அவுட் அம்சங்கள் இதில் இருக்கிறது. இந்த டிஸ்ப்ளே ஆனது 1080 பிக்சல் ஆதரவைக் கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








