வங்கி கணக்கில் இருந்த 17 லட்சம் அபேஸ்.. இவர் செய்த 'இந்த' தவறை நீங்களும் செய்யாதீர்கள்.. உஷாராக இருங்கள்..

|

திருச்சி பீமநகர் கண்டித்தெருவைச் சேர்ந்த 82 வயதான ராமகிருஷ்ணன் என்ற ஓய்வு பெற்ற அரசு ஊழியர் நம்ப முடியாத மோசடியில் சிக்கி 17 லட்ச ரூபாயைத் தனது வங்கி கணக்கில் இருந்து இழந்திருக்கிறார். இந்த செய்தி தற்பொழுது வங்கி பயனர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வங்கி கணக்கில் பாதுகாப்பாக இருந்த பணம் எப்படி திருடப்பட்டது என்று தெளிவாகப் பார்க்கலாம். இவர் செய்த இந்த சிறிய தவறை நீங்களும் செய்யாமல் பாதுகாப்பாக இருந்துகொள்ளுங்கள்.

31 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்த சேமிப்பு கணக்கில் திருட்டு

31 ஆண்டுகளாக பாதுகாப்பாக இருந்த சேமிப்பு கணக்கில் திருட்டு

இவர் 1990ஆம் ஆண்டில் பாலக்கரை பகுதியில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி கிளையில் தனது சேமிப்பு கணக்கைத் துவங்கி இருக்கிறார். 1990 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 31 ஆண்டுகளாக அவரின் சேமிப்பு கணக்கு செயல்பாட்டில் பாதுகாப்பாக இருந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இவர் சேமிப்பு கணக்கின் சமீபத்திய அப்டேட் படி, இவரது கணக்கில் சுமார் 17 லட்சம் வரை இருப்பு இருந்துள்ளது என்று கூறப்படுகிறது.

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரி போல் போன் அழைப்பு

ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரி போல் போன் அழைப்பு

இந்த நிலையில் கடந்த 3 ஆம் தேதி அவரின் மொபைல் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய நபர் தான் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி அதிகாரி என்று கூறியுள்ளார். போலி வங்கி அதிகாரி போல் பேசிய நபர் 82 வயதான ராமகிருஷ்ணனின் ஏடிஎம் அட்டையின் செயல்பாடு காலாவதி ஆகி விட்டதாகத் தெரிவித்திருக்கிறார். அதனால், அதை உடனே புதுபித்தாக வேண்டும் என்றும் அந்த நபர் ராமகிருஷ்ணனிடம் கூறியிருக்கிறார்.

'ஒன் ஏர்டெல்' திட்டம்: இது ஒரே திட்டம் தான் ஆனா DTH, பைபர்நெட், லேண்ட்லைன் எல்லாம் இலவசம்..விலை இது தான்..'ஒன் ஏர்டெல்' திட்டம்: இது ஒரே திட்டம் தான் ஆனா DTH, பைபர்நெட், லேண்ட்லைன் எல்லாம் இலவசம்..விலை இது தான்..

 ATM அட்டை காலாவதி ஆகிவிட்டது.. இனி உங்களால் பணம் எடுக்க முடியாது சார்

ATM அட்டை காலாவதி ஆகிவிட்டது.. இனி உங்களால் பணம் எடுக்க முடியாது சார்

இதனைக் கேட்ட ராமகிருஷ்ணன் தனது கணக்கில் இருக்கும் இருப்பு தொகையை எப்படி வெளியில் எடுப்பது என்று நினைத்துப் பார்த்து பதற்றமடைந்திருக்கிறார். ATM அட்டை காலாவதி ஆகிவிட்டதே என்று டென்ஷன் ஆக வேண்டாம் என்று அழைப்பில் இருந்த நபர் ராமகிருஷ்ணனிடம் அம்பாகப் பேசியிருக்கிறார். ஏடிஎம் அட்டையில் உள்ள எண்களையும், செல்போனுக்கு அனுப்பப்படும் ஓடிபி எண்ணையும் மட்டும் கூறினால் உடனே உங்களின் அட்டை ஆக்டிவேட் செய்யப்படும் என்று அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.

3 முறை OTP எண்;  மூன்று முறை 20 ஆயிரம் பணம் அபேஸ்

3 முறை OTP எண்; மூன்று முறை 20 ஆயிரம் பணம் அபேஸ்

ATM அட்டையை ஆக்டிவேட் செய்வதாகக் கூறி ராமகிருஷ்ணனிடமிருந்து மூன்று முறை அந்த நபர் OTP எண்ணைப் பெற்றவுடன் எதுவதும் சொல்லாமல் அழைப்பை துண்டித்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார். அதன்பின் ராமகிருஷ்ணனின் வங்கிக் கணக்கில் இருந்து 20 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டதாக SMS நோட்டிபிகேஷன் வந்துள்ளது. இதைக் கண்டு பதறிப்போன ராமகிருஷ்ணன், அவரின் பேரன் கிருபாகரனுக்கு விஷயத்தைத் தெரியப்படுத்தியிருக்கிறார்.

பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..பழைய 5 ரூபாய் நோட்டுக்கு இப்போ ரூ.30,000 கிடைக்கிறதா? உங்ககிட்ட இந்த நோட்டு இருக்கானு பாருங்க..

வங்கிக்கு புகார் அளித்த பின்பும் காணாமல் போன 17 லட்சம்

வங்கிக்கு புகார் அளித்த பின்பும் காணாமல் போன 17 லட்சம்

கிருபாகரன் தாத்தா கூறிய விஷயத்தைக் கேட்டவுடன் உடனடியாக ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கிக் கிளையின் இ-மெயிலுக்கு தனது தாத்தா ராமகிருஷ்ணன் ஏமாற்றப்பட்டிருக்கிறார் என்று கூறியதோடு, அவரின் வங்கிக் கணக்கில் இருந்து தெரியாத நபர்களால் சட்டவிரோத பண பரிவர்த்தனை நடந்திருப்பதாகப் புகார் அளித்துள்ளார்.

வங்கி மேலாளர் கொடுத்த உண்மையான ஷாக் இது தான்

வங்கி மேலாளர் கொடுத்த உண்மையான ஷாக் இது தான்

அதற்குப் பின்னர், கடந்த 8-ம் தேதி ராமகிருஷ்ணன் நேரடியாக அவர் வங்கி கணக்கு இருக்கும் பாலக்கரை ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கி சென்று மேலாளரைச் சந்தித்துள்ளார்.அப்போது தான் அவருக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. வங்கி மேலாளர் ராமகிருஷ்னனின் கணக்கைக் கணினியில் ஓபன் செய்து பார்த்து, அவரின் வங்கிக் கணக்கில் வெறும் 259 ரூபாய் மட்டுமே இருப்பு இருப்பதாகத் தெரிவித்திருக்கிறார். ராமகிருஷ்ணன் அதிர்ச்சியடைந்து உறைந்தே போனார்.

வந்துட்டேனு சொல்லு: ரூ.7,984 மட்டுமே- உயர்தர நோக்கியா சி20 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் : கூடவே இயர்பட்ஸ் வேற!வந்துட்டேனு சொல்லு: ரூ.7,984 மட்டுமே- உயர்தர நோக்கியா சி20 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம் : கூடவே இயர்பட்ஸ் வேற!

பணம் பறிக்க மர்ம நபர்கள் இப்படி கூட செய்ய முடியுமா?

பணம் பறிக்க மர்ம நபர்கள் இப்படி கூட செய்ய முடியுமா?

பணம் எடுக்கப்பட்ட தடயமே இல்லாமல், எப்படி இந்த திருட்டு நடத்தப்பட்டிருக்கிறது என்ற ஆராய்ந்த போது, ராமகிருஷ்ணின் மொபைல் எண்ணிற்கு வரும் வங்கி நோட்டிபிகேஷன் மெசேஜ்களை மர்ம நபர்கள் பிளாக் செய்தது தெரியவந்துள்ளது. SMS பிளாக்கர் மூலம் ராமகிருஷணனின் போனிற்கு வரும் மெசேஜ்களை மர்ம நபர்கள் தடுத்துள்ளனர்.

வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை

வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை

இந்த செய்தி வங்கி பயனர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதே உண்மை. இவர் செய்த 'அதே' தவறை நீங்களும் செய்யாமல் பாதுகாப்பாய் இருங்கள். வங்கி ஊழியர்கள் எப்பொழுதும் உங்களை போனில் அழைத்து எந்த சேவையையும் வழங்க மாட்டார்கள் என்பதை மறக்காதீர்கள். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Best Mobiles in India

English summary
Rs 17 Lakh withdrawn by spam callers from an 82-year-old man bank account in Trichy Tamilnadu : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X