ஒரே நாளில் ரூ.1400 கோடி வசூல்! வாரிசு, துணிவு இல்ல பாஸ் புது Samsung போன்! உண்மை என்ன?
பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சாம்சங் நிறுவனம் பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக Samsung Galaxy S23ஐ அறிமுகம் செய்தது. இந்த ஸ்மார்ட்போனுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
1 நாளில் ரூ.1,400 கோடி வசூல்
சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்23க்கு 1.4 யூனிட்கள் ப்ரீ ஆர்டர் கிடைத்துள்ளதாகவும் இதன் மூலம் ப்ரீஆர்டர் தொடங்கப்பட்ட முதல் நாளிலேயே ரூ.1,400 கோடி கிடைத்துள்ளதாகவும் நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இரண்டு மடங்கு அதிக வரவேற்பு
சாம்சங் இந்தியா, மொபைல் வர்த்தகத்தின் மூத்த துணைத் தலைவர் ராஜு புல்லன் PTI இடம் இதுகுறித்து தெரிவித்த தகவல் வெளியாகி இருக்கிறது. அதில், சாம்சங் கேலக்ஸி எஸ்22 என்ற முந்தைய பதிப்புடன் ஒப்பிடுகையில் Samsung Galaxy S23க்கு இரு மடங்கு அதிக முன்பதிவு கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
24 மணிநேரத்தில் 1.4 லட்சம் யூனிட்கள்
மேலும், முதல் 24 மணி நேரத்தில் நாங்கள் கிட்டத்தட்ட 1.4 லட்சம் யூனிட்கள் முன்பதிவுகளை பெற்றுள்ளோம் என்றும் இது கேலக்ஸி எஸ்22ஐ விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிகம் என்றும் தெரிவித்துள்ளார். ஒரு போனின் சராசரி விலை சுமார் 1 லட்சம் ரூபாய் என்ற வீதம் எனவும் இதன் ப்ரீ ஆர்டர் மூலம் சுமார் ரூ.1,400 கோடி 24 மணி நேரத்திற்குள் கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டிருக்கிறார்.
சாம்சங் கேலக்ஸி எஸ்23 ப்ரீ ஆர்டர் தொடக்கம்
சாம்சங் கேலக்ஸி எஸ்23 ஸ்மார்ட்போனுக்கான முன்பதிவு நடைபெற்று வருகிறது. கேலக்ஸி எஸ்23 சீரிஸின் விலை ரூ.75,000 முதல் ரூ.1.55 லட்சம் வரை நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் தயாரிக்கப்படும் சாம்சங் ஸ்மார்ட்போன்
முந்தைய கேலக்ஸி எஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் சாம்சங்கின் வியட்நாம் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டது. ஆனால் சமீபத்திய Galaxy S23 போன் அதன் நொய்டா ஆலையில் தயாரிக்கப்படும் என நிறுவனம் அறிவித்துள்ளது.
Samsung Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra
சாம்சங் நிறுவனம் பக்கா ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக Samsung Galaxy S23, Galaxy S23+, Galaxy S23 Ultra போனை அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2 ஆம் தேதி நடந்த Galaxy Unpacked நிகழ்வில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டது. இதன் அனைத்து போன்களும் குவால்காமின் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 2 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது. மூன்று மாடல்களிலும் Gorilla Glass Victus 2 பாதுகாப்பை கொண்டிருக்கிறது.
Samsung Galaxy S23 மற்றும் Galaxy S23+ விலை
Samsung Galaxy S23 தொடரில் அடிப்படை மாடலாக சாம்சங் கேலக்ஸி எஸ்23 இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனின் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.79,999 என நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல் Samsung Galaxy S23+ இன் 8 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.94,999 எனவும் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
Samsung Galaxy S23 Ultra விலை
Samsung Galaxy S23 Ultra ஸ்மார்ட்போனின் 12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் விலை ரூ.1,24,999 எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,34,999 எனவும் 12ஜிபி ரேம் மற்றும் 1டிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் வேரியண்ட் விலை ரூ.1,54,999 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.

200 மெகாபிக்சல் பிரைமரி வைட் கேமரா மற்றும் எஸ் பென் ஆதரவு
Samsung Galaxy S23 சீரிஸ் இல் ப்ரீமியம் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எஸ்23 அல்ட்ரா இருக்கிறது. இதன் கேமரா அம்சங்கள் குறிப்பிடத்தக்க வகையில் இருக்கிறது. இதில் 200 மெகாபிக்சல் பிரைமரி வைட் கேமரா, 12 எம்பி அல்ட்ரா வைட் ஷூட்டர், 10 எம்பி ஆப்டிகல் ஜூம் டெலிஃபோட்டோ லென்ஸ் மற்றும் 10 டெலிஃபோட்டோ ஷூட்டர் ஆதரவைக் கொண்டிருக்கிறது. டிஜிட்டல் கேமராவுக்கு இணையான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இதில் பதிவு செய்ய முடியும். இந்த சாம்சங் ஸ்மார்ட்போன் உடன் எஸ் பென் ஆதரவும் வழங்கப்பட்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications








