ஒரே நாளில் ரூ.1000 கோடி வசூல், 12 லட்ச ஸ்மார்ட்போன்களை விற்ற Samsung.. என்ன நடக்குது இந்தியாவில்!

|

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் பண்டிகை தின விற்பனையின் முதல் நாளில் ரூ.1000 கோடிக்கு மேல் சாம்சங் ஸ்மார்ட்போன்கள் விற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமேசானில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக கேலக்ஸி எம்13 இருப்பதாக சாம்சங் வெளியிட்ட தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ரூ.1000 கோடிக்கும் மேல் விற்பனை..

ரூ.1000 கோடிக்கும் மேல் விற்பனை..

இதுகுறித்து டெலிகாம் டாக் தளத்தில் வெளியான தகவல்களை பார்க்கலாம். அமேசான் மற்றும் பிளிப்கார்ட்டில் பண்டிகை தின விற்பனை நடைபெற்று வருகிறது.

இதன் முதல் நாளில் 12 லட்சத்திற்கும் அதிகமான கேலக்ஸி ஸ்மார்ட்போன்கள் விற்றுள்ளதாகவும், விற்பனையாகியுள்ள தொகையின் மதிப்பு ரூ.1000 கோடிக்கும் மேல் எனவும் சாம்சங் இந்தியா தெரிவித்துள்ளது.

இந்த பண்டிகை விற்பனையில் சாம்சங் நிறுவனம் கேலக்ஸி சீரிஸ் ஸ்மார்ட்போன்களுக்கு 17 முதல் 60 சதவீதம் வரை தள்ளுபடியை அறிவித்துள்ளது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

1.2 மில்லியனுக்கும் அதிகமான கேலக்ஸி போன்கள் விற்பனை

1.2 மில்லியனுக்கும் அதிகமான கேலக்ஸி போன்கள் விற்பனை

பண்டிகை தின விற்பனையின் முதல் நாளில் 1.2 மில்லியனுக்கும் அதிகமான கேலக்ஸி ஸ்மார்ட்போனை விற்பனை செய்து சாம்சங் இந்தியாவில் புதிய சாதனை படைத்துள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இல் இதுவரை கண்டிராத அளவு தள்ளுபடிகள் சாம்சங் போன்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

அமேசான் மற்றும் பிளிப்கார்ட்

இந்தியாவில் இரண்டு முன்னணி விற்பனை தளமாக அமேசான் மற்றும் பிளிப்கார்ட் இருக்கிறது. இந்த இரண்டு தளங்களும் ஒரே காலக்கட்டத்தில் பண்டிகை தின விற்பனையை நடத்தி வருகிறது. எனவே இரண்டு தளங்களும் போட்டிப்போட்டுக் கொண்டு சலுகைகளை அறிவித்துள்ளது.

அதிகம் விற்பனையாகியுள்ள ஸ்மார்ட்போன்கள்..

அதிகம் விற்பனையாகியுள்ள ஸ்மார்ட்போன்கள்..

கேட்ஜெட் 360 இல் சாம்சங் தெரிவித்ததாக வெளியான தகவலில், Amazon மற்றும் Flipkart இல் இதுவரை கண்டிராத அளவு சாம்சங் கேலக்ஸி ஸ்மார்ட்போன்களுக்கு தள்ளுபடிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் நிறுவனம் ஒரே நாளில் ரூ.1000 கோடிக்கும் மேல் கேலக்ஸி போன்களை விற்பனை செய்தது என சாம்சங் தெரிவித்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Galaxy S20 FE 5G, Galaxy S22 Ultra, Galaxy S22, Galaxy M53, Galaxy M33, M32 Prime Edition மற்றும் Galaxy M13 ஆகிய ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியை பெற்றிருக்கிறது.

தள்ளுபடி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

தள்ளுபடி விலையில் சாம்சங் ஸ்மார்ட்போன்கள்

Galaxy S22 சீரிஸ் 17% முதல் 38% வரை தள்ளுபடியை பெற்றிருக்கிறது. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலின் முதல் நாளில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போனாக சாம்சங் இருக்கிறது. குறிப்பாக கேலக்ஸி எம்13 தான் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் என சாம்சங் குறிப்பிட்டுள்ளது.

இரு மடங்கு அதிகரிப்பு..

இரு மடங்கு அதிகரிப்பு..

பிளிப்கார்ட் இன் பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் முதல் நாளில் மட்டும் சாம்சங் தனது சந்தைப் பங்கில் இரு மடங்கு அதிகரிப்பைக் கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிறிஸ்துமஸ் தின விற்பனையில் சாம்சங் அதன் 5ஜி ஸ்மார்ட்போனுக்கு தள்ளுபடி வழங்கி அதிலும் ஆதிக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டாவது காலாண்டு நிலவரம்..

5.7 மில்லியன் யூனிட் உடன் 2022 ஆம் ஆண்டின் இரண்டாவது காலாண்டில் சாம்சங் 16.3 சதவீத சந்தைப் பங்கைக் கொண்டிருப்பதாக சந்தை ஆராய்ச்சி நிறுவனமான ஐடிசி தெரிவித்துள்ளது.

டாப் இடங்களை பிடித்திருக்கும் நிறுவனங்கள்..

டாப் இடங்களை பிடித்திருக்கும் நிறுவனங்கள்..

கடந்த மாதம் இன்டர்நேஷனல் டேட்டா கார்ப்பரேஷன் (ஐடிசி) வெளியிட்ட அறிக்கையின்படி, ஏப்ரல்-ஜூன் காலாண்டில் இந்திய ஸ்மார்ட்போன் சந்தை 3% அதிகரித்து 35 மில்லியன் ஸ்மார்ட்போன்களை எட்டியது.

சீன நிறுவனமான Xiaomi இதில் முதலிடத்தைப் பிடித்துள்ளது. ஐடிசியின் அறிக்கைப்படி, சீன பிராண்டுகள் தான் தற்போது இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் டாப் 3 இடங்களை பிடித்திருக்கிறது. முன்னதாகவே குறிப்பிட்டது போல் சியோமி ஒன்று மற்ற இரண்டு ரியல்மி மற்றும் விவோ ஆகும்.

சாம்சங் கடந்த காலாண்டு அறிக்கையில் நான்காவது இடத்தில் இருந்தாலும், இந்த காலாண்டில் டாப் இடத்தை பிடிக்கும் என கணிக்கப்படுகிறது. இதில் எதுவும் இந்திய நிறுவனம் இல்லை என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

Best Mobiles in India

English summary
Rs.1000 Crore Worth Smartphones Sold by Samsung in Amazon and Flipkart Festival Sales

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X