ரூ.100, ரூ.150, ரூ.1000 நாணயங்கள் வெளியானது: தொடர்ந்து பரவும் தகவல்- நேரில் பார்த்தது உண்டா? உண்மை என்ன?
வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் ரிசர்வ் வங்கி ரூ.20, ரூ.100, ரூ.150 நாணயங்களை வெளியிட்டுள்ளதாக சமூகவலைதளங்களில் வெளியாகும் தகவல் குறித்து பார்க்கலாம்.

புதிய ரூ.200 நோட்டுகள்
இந்திய ரிசர்வ் வங்கி புதிய ரூ.200 நோட்டுகளை வெளியிடத் தயாராகி வருவதாக வாட்ஸ்அப்-ல் போலி தகவல்கள் மற்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அது பழைய படங்களை தூசி தட்டி அவற்றை மீண்டும் மறுசுழற்சி செய்து போலியான தகவல்களை வெளியிட்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்-ல் வெளியாகும் தகவலில் ரிசர்வ் வங்கி முன்னதாகவே ஒரு ரூபாய் நோட்டு, ரூ.20, ரூ.100 மற்றும் ரூ.150 நாணயங்களை வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது. வெளியான தகவலில் ரூ.1000 நாணயமும் காட்டப்படுகிறது.

உண்மை தகவல்
ரிசர்வ் வங்கியின் இணையதளத்தில் புதிய நாணய மதிப்பு குறித்து சமீபத்திய பதிவுகள் எதுவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. (ஆர்பிஐ உண்மைத் தகவலை காண்பதற்கு இங்கே கிளிக் செய்யவும்)
கூகுளின் ரிவர்ஸ் இமேஜ் படத் தேடலை பயன்படுத்தும் உண்மைநிலையை கண்டறியும் பட்சத்தில், 2016 நவம்பர் 8 ஆம் தேதி பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்ட சில வாரங்களுக்கு பிறகில் இருந்து இந்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. தனியார் செய்தி நிறுவனத்தின் பெயர் இதில் இடம்பெற்ற போதிலும் அதில் இருந்த யூஆர்எல் தவறாக இருந்த காரணத்தால் புகார் ஏதும் அளிக்கப்படவில்லை.

ரூ.100, ரூ.125, ரூ.1000 நாணயங்கள்
ரூ.2, ரூ.3, ரூ.350, ரூ.500 மற்றும் ரூ.100, ரூ.125, ரூ.1000 நாணயங்கள் வாட்ஸ்அப் மற்றும் சமூகவலைதளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த புதிய நாணயங்கள் ரிசர்வ் வங்கி மூலம் வெளியிடப்பட்டது என தகவல் தொடர்ந்து இணையதளத்தில் வெளியாகி வருகின்றன. இந்த புகைப்படங்களானது கடந்த ஆண்டுமுதல் வைரலாகி வருகிறது.

ரூ.1000 நாணயம்
ரிசர்வ் வங்கி புதிய நாணயத்தை சட்டப்பூர்வ டெண்டராக வெளியிட்டது என்ற உண்மை தவறானது. இந்த நாணயங்கள் சட்டப்பூர்வமானவை அல்ல என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
மைண்டேஜ் வேர்ல்ட் என்பது மும்பையில் அமைந்துள்ள ஒரு ஆன்லைன் அருங்காட்சியகம் ஆகும். தஞ்சாவூரில் உள்ள பிரகதீஸ்வரர் கோவிலின் 1000 ஆண்டுகளை நினைவுகூரும் வகையில் ரூ.1000 அச்சிடப்பட்டது என ஏப்ரல் 2015 கட்டுரையில் தெரிவிக்கப்பட்டது. இது நினைவு நாணயங்களே ஆகும். இது சட்டப்பூர்வ பயன்படுத்துவது அல்ல.

பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்கள்
பழைய நோட்டுகள் மற்றும் நாணயங்களை ஆன்லைனில் விற்பது மற்றும் வாங்குவது குறித்து ரிசர்வ் வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. தொழில்நுட்பங்கள் வளரந்து வரும் இந்த காலக்கட்டத்தில் அதை எந்த அளவிற்கு பயன்படுத்துகிறோமா அந்த அளவிற்கு அதன் பாதுகாப்பு அம்சத்தை அறிந்து கொள்ள வேண்டும் என்பது முக்கியம்.

கட்டணங்கள், கமிஷன், வரி என கூறி மோசடி
இந்திய ரிசர்வ் வங்கியின் பெயர், லோகோவை பயன்படுத்தி பழைய ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை வாங்குவது மற்றும் விற்பனை செய்வது தொடர்பாக கட்டணங்கள், கமிஷன், வரி என கூறி மோசடி செயல்கள் நடந்து வருவதாக ஆர்பிஐ கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளிக்கவில்லை
இந்திய ரிசர்வ் வங்கி இதுபோன்ற விஷயங்களை கையாளுவதில்லை எனவும் எந்த விதமான கட்டணங்கள், கமிஷன்களையும் கோருவது இல்லை என ஆர்பிஐ தெளிவுப்படுத்தியுள்ளது. அதேபோல் இத்தகைய பரிவர்த்தனைகளில் அதன் சார்பாக கட்டணம், கமிஷன் வசூலிக்க எந்தவொரு நிறுவனம் மற்றும் நபருக்கு ரிசர்வ் வங்கி அங்கீகாரம் அளிக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி குறிப்பிட்டுள்ளது.
Source: thequint.com


Click it and Unblock the Notifications