சொன்னா நம்ப மாட்டீங்க: எல்லா இடத்துலயும் Google pay, Phonepe யூஸ் பண்ணதோட "பலன்" இத்தனை கோடியா?

|

ஜனவரி மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 658 மில்லியன் இணைய பயனர்கள் மற்றும் சுமார் 1.2 பில்லியன் மொபைல் சந்தாரர்கள் இருக்கின்றனர். Unified Payment Interface (UPI) தலைமையிலான பல்வேறு பயன்பாடுகள் மூலம் முதல் காலாண்டின் ஜனவரி-மார்ச் மாதங்களில் மட்டும் 9.36 பில்லியன் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன் மதிப்பு ரூ.10.25 டிரில்லியன்களாகும். இதற்கே வியக்க வேண்டாம் முழு தகவலை விரிவாக பார்க்கலாம்.

வணிகர்களிடம் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை மதிப்பு?

வணிகர்களிடம் பரிவர்த்தனை செய்யப்பட்ட தொகை மதிப்பு?

UPI P2M (person to merchant) அதாவது நுகர்வோர் டூ வணிகம் மிக அதிக கட்டண முறையாக இருக்கிறது. மொத்த பரித்தவர்த்தனை எண்ணிக்கைளில் 64 சதவீதமும் தொகை மதிப்பில் 50 சதவீதமும் இந்த பரிவர்த்தனைகள் தான் செய்யப்பட்டிருக்கிறது. நுகர்வோர் டூ வணிகம் என்பது வாடிக்கையாளர்கள் வாங்கும் பொருட்களுக்கு செலுத்தும் தொகை ஆகும்.

இரண்டு மடங்கு அதிகரித்த பரிவர்த்தனை

இரண்டு மடங்கு அதிகரித்த பரிவர்த்தனை

2021 ஆம் ஆண்டின் முதல் காலாண்டுடன் ஒப்பிடும் போது அதன் பரிவர்த்தனைகளின் அளவும் மதிப்பும் இரண்டு மடங்கு அதிகமாகும். கூகுள் பே, பேடிஎம் பேமெண்ட் பேங்க் ஆப், போன் பே, அமேசான் பே, ஆக்சிஸ் பேங்க்ஸ், ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, எச்டிஎஃப்சி பேங்க் உள்ளிட்டவைகள் மூலம் பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பிரதான பயன்பாடுகல் எது தெரியுமா?

பிரதான பயன்பாடுகல் எது தெரியுமா?

மார்ச் 2022 நிலவரப்படி பிரபலமான பணி பரிவர்த்தனை பயன்பாடாக போன் பே, கூகுள் பே மற்றும் பேடிஎம் உள்ளிட்டவை இருக்கிறது. இந்த பயன்பாடுகள் யுபிஐ பரிவர்த்தனை எண்ணிக்கையில் 94.8 சதவீதத்தையும், தொகை மதிப்பில் 93 சதவீதத்தையும் கொண்டிருக்கிறது.

டெபிட் கார்ட் பரிவர்த்தனை வளர்ச்சி என்ன?

டெபிட் கார்ட் பரிவர்த்தனை வளர்ச்சி என்ன?

கிரெடிட் கார்ட்கள் மூலம் 7% மட்டுமே பரிவர்த்தனை செய்யப்பட்டிருக்கிறது. இருப்பினும் இதன் தொகை மதிப்பு 26% ஆகும். காரணம் அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகளுக்கு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தவே பயனர்கள் முன்னுரிமை செலுத்துகிறார்கள். டெபிட் கார்டுகள் மூலமான பரிவர்த்தனைகள் குறித்து பார்க்கையில், எண்ணிக்கையில் 10 சதவீதமும் மதிப்பில் 18 சதவீதமும் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. யுபிஐ பரிவர்த்தனை வளர்ச்சி காரணமாக முந்தைய ஆண்டை விட டெபிட் கார்ட் பரிவர்த்தனை வளர்ச்சி சரிவை சந்தித்து இருக்கிறது.

POS டெர்மினல் பரிவர்த்தனை விவரங்கள்

POS டெர்மினல் பரிவர்த்தனை விவரங்கள்

மொத்த POS டெர்மினல்களின் எண்ணிக்கை 6.07 மில்லியனாக இருந்த நிலையில் 2022 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் அரை மில்லியனுக்கும் அதிகமாக வளர்ந்து இருக்கிறது. POS டெர்மினல்கள் என்பது வணிகர்கள் பயன்படுத்தும் சாதனமாகும். நாம் பெரும்பாலான கடைகளில் பார்க்கப்படும் கார்ட் ஸ்வைப் செய்யும் மிஷன்கள் POS என அழைக்கப்படுகிறது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது 28% வளர்ச்சியை POS டெர்மினல்கள் கண்டிருக்கிறது.

QR ஸ்கேன் பரிவர்த்தனை விவரம்

QR ஸ்கேன் பரிவர்த்தனை விவரம்

UPI QR ஸ்கேன் பரிவர்த்தனைகள் குறித்து பார்க்கையில், மார்ச் 2021 உடன் ஒப்பிடும் போது இந்த ஆண்டு எண்ணிக்கையில் 87 சதவீதம் அதிகரித்திருக்கிறது. ஜனவரி மாத நிலவரப்படி இந்தியாவில் சுமார் 1.2 பில்லியன் மொபைல் சந்தாதாரர்கல் உள்ளனர். இதில் சுமார் 658 மில்லியன் இணைய பயனர்கள் அடங்குவார்கள்.

அதிகரிக்கும் டிஜிட்டல் பயன்பாடு

அதிகரிக்கும் டிஜிட்டல் பயன்பாடு

தொழில்நுட்ப வளர்ச்சி என்பது எதிர்பார்க்காத அளவிற்கு பல கட்டங்கள் முன்னோக்கி வளர்ந்து வருகிறது. அதற்கு ஏற்ப அனைத்து தரப்பு மக்களும் தங்களை மேம்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவின் முக்கிய கொள்கையான டிஜிட்டல் இந்தியா கொள்கை பல கட்டங்கள் முன்னோக்கி வருகிறது. அதில் பிரதான ஒன்றாக இருப்பது டிஜிட்டல் பரிவர்த்தனை. சிறிய கடை முதல் பெரிய கடை வரை அனைத்திலும் டிஜிட்டல் பரிவர்த்தனை ஏற்றுக் கொள்ளப்பட்டு வருகிறது. சிறிய பொருள் வாங்கினால் கூட ஸ்கேனர் போர்ட் எங்கே இருக்கிறது என்ற கேள்வி அனைவராலும் கேட்கத் தொடங்கப்பட்டுவிட்டது.

கூகுள் பே, போன்பே, பேடிஎம்

டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு என கூகுள் பே, போன்பே, பேடிஎம், பீம் ஆப் என பல இருந்தாலும் அனைத்தையும் ஒருங்கிணைப்பது யூபிஐ எனப்படும் யுனிஃபைட் பேமெண்ட் இண்டர்பேஸ் தான். UPI (Unified Payment Interface) ஆனது மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் இயங்கும் சேவையாகும். இந்த சேவையானது அனைத்து டிஜிட்டல் பரிவர்த்தனை தளங்களிலும் பணம் பரிமாற்றம் செய்ய அனுமதிக்கிறது.

யுபிஐ என்றால் என்ன?

யுபிஐ என்றால் என்ன?

மொபைல் போன் மூலமாக தங்களது வங்கி பயன்பாட்டில் இருந்து மற்றொரு வங்கிக்கு பணம் செலுத்தும் செயலுக்கு யுபிஐ பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி யுபிஐ பயன்பாடானது 24x7 என்ற அடிப்படையில் செயல்படுவதால் இந்த சேவைக்கு ஏணையோர் ஆர்வம் தெரிவிக்கின்றனர். இந்த சேவையானது ரிசர்வ் வங்கி மற்றும் பிற வங்கிகளின் ஆதரவோடு செயல்படும் லாபநோக்கமற்ற அமைப்பாக இருக்கிறது.

Best Mobiles in India

English summary
Rs.10.25 Trillion Transaction Via UPI in India in 2022 1st Quarter: Report Said!

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X