யாருக்கு என்ன தீங்கு செய்தோம்.. ஆன்லைனில் ரீசார்ஜ் செய்தது குற்றமா? "1 லட்ச ரூபாய் க்ளோஸ்" உஷார் மக்களே!

|

Netflix பிளானை அப்டேட் செய்ய முயற்சித்த நபரின் வங்கி கணக்கில் இருந்து 1 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டிருக்கிறது. பொருட்கள், உணவுகள் என அனைத்தையும் ஆன்லைனில் தான் ஆர்டர் செய்கிறோம். மின்சாரக் கட்டணம் முதல் சிலிண்டர் புக்கிங், மொபைல் ரீசார்ஜ் என அனைத்தும் ஆன்லைனில் தான் மேற்கொள்கிறோம். டிஜிட்டல் யுகத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அவசியம் தான், ஆனால் அதே அளவு பாதுகாப்பு என்பதும் முக்கியம்.

ஆன்லைன் மோசடி

ஆன்லைன் மோசடி

மும்பையை சேர்ந்த நபர் ஒருவர் தனது வங்கி கணக்கு விவரங்களை நெட்ஃபிளிக்ஸ் பிளான் அப்டேட் என குறிப்பிட்ட மோசடி செய்பவர்களிடம் அளித்து ஏமாற்றமடைந்திருக்கிறார். சமீபகாலமாகவே ஆன்லைன் மோசடி வழக்குகள் அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாக தற்போது புதிய வழக்கு ஒன்று இதில் இணைந்திருக்கிறது.

1 லட்ச ரூபாய் மோசடி

1 லட்ச ரூபாய் மோசடி

இணைய மோசடி வழக்கில் 74 வயதான நபர் ஒருவர், தனது நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்றபோது 1 லட்ச ரூபாயை இழந்துள்ளார். நெட்ஃபிளிக்ஸ் என முகமூடி இட்டுக் கொண்ட மோசடி கும்பல் இந்த ஏமாற்ற செயலில் ஈடுபட்டிருக்கிறது. நெட்ஃபிளிக்ஸ் பிளானை அப்டேட் செய்யும்படியும் அதற்கு வங்கி விவரங்களை வழங்கும்படியும் கூறி ஏமாற்றி இருக்கிறது இந்த கும்பல்.

உஷாராக இருப்பது அவசியம்

தெரியாத எண்ணில் இருந்து வரும் தகவலை நம்ப வேண்டாம். அதில் உள்ள லிங்க்களை கிளிக் செய்ய வேண்டாம். அதில் கேட்கப்படும் விவரங்களை பூர்த்தி செய்ய வேண்டாம் என பல வழிகளில் அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அதெல்லாம் எதுக்கு நமக்கு வரப் போகுது நமது வங்கிக் கணக்கில் சுத்தமாக பணம் இல்லை என இயல்பாக இருப்பவர்கள் ஏராளம். உங்கள் வங்கி கணக்கில் பணம் எப்போதும் வராமல் இருக்காது, ஏதாவது ஒரு அவசர சூழ்நிலையில் உங்கள் வங்கி கணக்கில் பணம் வரும் போது அப்போது ஏமாற்றப்படுவீர்கள் என்பதை நினைவில் வைக்க வேண்டும்.

சைபர் குற்றவாளிகள்

சைபர் குற்றவாளிகள்

அதன்படி அனுப்பப்பட்ட போலி தகவலில் தற்போது ஒரு முதியவர் ஏமாற்றம் அடைந்திருக்கிறார். 74 வயதான முதியவர் ஒருவர் தனது நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்க முயன்றபோது 1 லட்ச ரூபாயை இழந்திருக்கிறார். சைபர் குற்றவாளிகள் ஒரு முதியவரின் நெட்ஃபிளிக்ஸ் சந்தாவை புதுப்பிக்கச் சொல்லி அவரை ஏமாற்ற முயன்றிருக்கிறார். சரிபார்க்கப்பட்ட கணக்கில் இருந்து வந்தது போன்றே இந்த தகவல் இருக்கிறது.

ரூ.499 சந்தா கட்டணம்

ரூ.499 சந்தா கட்டணம்

இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட அறிக்கையின்படி, மும்பை சேர்ந்த முதியவர் ஒருவர் இந்த மோசடிக்கு உள்ளாகி இருக்கிறார். சுமார் 1 லட்ச ரூபாய்க்கும் மேல் இழந்திருக்கிறார் அந்த முதியவர். நெட்ஃபிளிக்ஸ் பயன்பாட்டை ரீசார்ஜ் செய்யும் படி இந்த தகவலில் கோரப்பட்டிருக்கிறது. அந்த தகவலில், உங்களது ரூ.499 சந்தா காலம் முடிந்து விட்டது. இதை ரீசார்ஜ் செய்யாத காரணத்தால் உங்கள் கணக்கு முடக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவல்நிலையத்தில் புகார்

காவல்நிலையத்தில் புகார்

இந்த தகவல் மெயில் மூலம் வந்திருக்கிறது. பயனர்களுக்கு ஓடிடி இயங்குதளம் அனுப்பும் அதே மின்னஞ்சல் போல் இது இருந்திருக்கிறது. வித்தியாசமே கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இந்த மெயில் ஐடி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து தனது தகவலை நிரப்பி வங்கி விவரங்களை பூர்த்தி செய்திருக்கிறார். பின் அவரது வங்கி கணக்கில் இருந்து ரூ.1.22 லட்சம் திருடப்பட்டிருக்கிறது. இதை அறிந்த அந்த முதியவர் நவம்பர் 29 ஆன்று ஜூஹூ காவல்நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்திருக்கிறார்.

கவனக்குறைவாக இருந்த முதியவர்

கவனக்குறைவாக இருந்த முதியவர்

மெயில் ஐடியில் வந்த லிங்க்கை கிளிக் செய்து தனது கிரெடிட் கார்ட் விவரங்களை அந்த முதியவர் நிரப்பி இருக்கிறார். பின் அவரது மொபைல் போனுக்கு ஓடிபி அனுப்பப்பட்டிருக்கிறது. அதையும் பதிவிட்டிருக்கிறார். பின் அவரது வங்கி கணக்கில் பணம் திருடப்பட்டுள்ளது.

பாதுகாப்பு முக்கியம்

பாதுகாப்பு முக்கியம்

இந்த முதியவர் தனக்கு வந்த ஓடிபி எந்த தொகைக்கு வந்திருக்கிறது என்பதை சரிபார்க்காமல் பகிர்ந்திருக்கார் என கூறப்படுகிறது. அதாவது அவர் ரீசார்ஜ் செய்யவேண்டிய ரூ.499க்கு பதிலாக ரூ.1.22 லட்சத்துக்கு ஓடிபி வந்திருக்கிறது. இதன்மூலம் மோசடி நடந்திருக்கிறது. இதுபோன்ற தகவலை படிப்பதோடு மட்டுமில்லாமல் பிறருக்கு பகிர்ந்து பாதுகாப்பாக இருக்கும் படி அறிவுறுத்தப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Rs.1 lakh defrauded from the bank account of a Man who updated Netflix subscription Plan

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X