மோடியின் தீபாவளி பரிசு: 59 நிமிடங்களில் ரூ.1 கோடி கடன்: பெறுவது எப்படி?
குறிப்பாக 6 மாதங்களில் தேர்தல் வருவதால் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது மத்திய அரசு.
பிரதமர் மோடி அவர்கள் தீபாவளி பரிசாக தொழில் முனைவோருக்கு வெறும் 59 நிமிடத்தில் ரூ.1 கோடி கடன் கிடைக்கும் திட்டத்தை அறிமுகம் செய்து வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த திட்டத்தை பல்வேறு மக்கள் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக மத்திய அரசின் பண மதிப்பு இழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு பின்பு சிறு, குறு தொழில் நிறுவனங்களை கடுமையாக பாதித்துள்ளதாக குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் தான் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு
என்று இந்த புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

வலைதளம்
அதன்படி psbloansin59minutes.com என்ற வலைதளம் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வலைதளம் மூலம் வெறும் 59 நிமிடங்களில் ரூ.1 கோடி கடன் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறு, குறு நிறுவனங்கள்
குறிப்பாக சிறு, குறு நிறுவனங்கள் கடனுக்கு தேவையான சான்றிதழ்களை இணைத்த ஒரு மணி நேரத்திற்குள் ரூ.1 கோடி வரை கடன் பெறலாம் என்று பிரதமர் மோடி அவர்கள் தகவர் தெரிவித்துள்ளார்.

வட்டி விகிதம்:
இந்த கடனை பெற நினைப்பவர்கள் ஜிஎஸ்டி கீழ் முறையாக ரிட்டன் தாக்கல் செய்யும் நிறுவனங்கள் விண்ணப்பிக்கலாம் எனவும், பின்பு இந்த கடனுக்கு வட்டியிலிருந்து 2சதவீத தள்ளுபடியும் உண்டு என அறிவிக்க்ப்பட்டுள்ளது. குறிப்பாக இதன் மூலம் 72000 நிறுவனங்கள் பயன்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

6 மாதங்களில் தேர்தல்
குறிப்பாக 6 மாதங்களில் தேர்தல் வருவதால் பல்வேறு திட்டங்களை தொடர்ந்து அறிவித்து வருகிறது மத்திய அரசு. பின்பு பொதுத்துறை நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களிடம் இருந்து 20 சதவீத உற்பத்தியை கொள்முதல் செய்ய வேண்டும் என்பது ஏற்கெனவே நடைமுறையில் உள்ளது. தற்போது இது 25 சதவீதமாக அதிகரிப்பதாக பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் இதுபோன்று 12 அம்ச திட்டங்களை பிரதமர் மோடி அவர்கள் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications