அட அவருக்கே தெரியல அது: கூலித் தொழிலாளி வங்கி கணக்கில் இருந்த ரூ.1 கோடி- நம்ம ஒருதடவ பாஸ்புக் செக் பண்ணிருவோம்
சமீபகாலமாக பயன்படுத்தாத பாமர மக்களின் வங்கிக் கணக்கில் லட்சக் கணக்கிலும் கோடிக் கணக்கிலும் பணம் போடப்பட்டிருப்பதாக செய்திகள் வலம் வந்துக் கொண்டிருக்கின்றன. அதன்படி தெலுங்கானா போலீஸார் ஊழல் உடன் தொடர்பிருக்கும் தனிநபர் கணக்குகளின் சுய விவரங்களை டெல்லி சென்று ஆய்வு செய்தனர்.

தினக்கூலியின் வங்கி கணக்கு ஆய்வு
அப்போது டெல்லியே சேர்ந்த ஒரு தினக்கூலியின் வங்கி கணக்கை ஆய்வு செய்து பார்த்தனர். அந்த வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். வங்கி கணக்கில் ரூ.1 கோடி வைத்திருக்கும் தினக்கூலி தொழிலாளியிடம் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

அப்போது அந்த தினக்கூலி நபரிடம் அவரது வங்கு கணக்கு தொடர்பான பாஸ்புக், ஏடிஎம் உள்ளிட்ட எந்த ஆவணமும் இல்லை என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இதுகுறித்த விசாரணையில் அவரது வங்கிக் கணக்கில் சீனாவை சேர்ந்த ஆன்லைன் லோன் ஆப் நடத்தி வந்த தனியார் நிறுவனம் பயன்படுத்தி வந்தது தெரியவந்துள்ளது.

மேலும் இதுகுறித்து போலீஸார் தெரிவிக்கையில், இவரது வங்கி கணக்கு ஆன்லைன் லோன் ஆப் மோசடி, ஆன்லைன் சூதாட்டம் போன்ற மோசடி செயலுக்கு பயன்படுத்தியிருக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கின்றனர்.

தினக்கூலி தொழிலாளரின் சுய விவரங்களை பயன்படுத்தி வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு அதை பிறர் அனுமதிப்பதற்காக மாதந்தோறும் ரூ.4000 அவருக்கு வழங்கப்பட்டு வந்ததாக கூறப்பட்டது. மேலும் தனது வங்கிக் கணக்கில் ரூ.1 கோடி வரை இருப்பதும் அந்த கணக்கு தவறாக பயன்படுத்தி வந்ததும் கூலி தொழிலாளிக்கு தெரியவில்லை.

போலீசார் விசாரணை
மேலும் இதுகுறித்து போலீஸார் தினக்கூலியிடம் தொடர்ந்து விசாரணை நடத்தியதில், அவரது பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கிய நபர் குறித்து அவர் கூற பயப்படுவதாகவும், அதை கூறினால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்படும் என அவர் அஞ்சி வருவதாகவும் தெரிவித்தனர். இதுகுறித்த விசாரணை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.


Click it and Unblock the Notifications