மீன்பிடித்து கொண்டிருக்கும் போது வலையில் சிக்கிய ராக்கெட்- குவியும் பொதுமக்கள்

|

புதுச்சேரியில் வம்பாகீரப்பாளையம் பகுதி மீனவர்கள் ஃபைபர் படகு மூலமாக மீன்படிக்க கடலுக்கு சென்றுள்ளனர். அப்போது அவர்கள் வலையில் கனமான பொருள் ஒன்று தென்பட்டுள்ளது.

30 அடி நீளமுள்ள உருளை

30 அடி நீளமுள்ள உருளை

வலையில் சிக்கிய பொருள் குறித்து கடலுக்குள் இருந்த மீனவர்கள் சற்று ஆராய்ந்து பார்க்கையில், அது 30 அடி நீளமுள்ள உருளை வடிவில் உள்ள ஒரு பொருள் என்பது தெரியவந்துள்ளது.

4 படகுகள் மூலம் கரைக்கு கொண்டுவந்த மீனவர்கள்

4 படகுகள் மூலம் கரைக்கு கொண்டுவந்த மீனவர்கள்

இதையடுத்து மீன்வர்கள் அந்த உருளை வடிவிலான பொருளை 4 படகுகள் மூலம் கரைக்கு எடுத்து வந்துள்ளனர். இதுகுறித்து மீனவர்கள் கொடுத்த தகவலின் பேரில், அந்த பகுதி காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

இஸ்ரோவின் புதிய ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட காரணம் இதுதான்!இஸ்ரோவின் புதிய ஏவுதளம் குலசேகரப்பட்டினத்தில் அமைக்கப்பட காரணம் இதுதான்!

எரிபொருள் நிரப்பிச்செல்லும் பொருள்

எரிபொருள் நிரப்பிச்செல்லும் பொருள்

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அந்த பொருள் குறித்து ஆராய்ந்து பார்க்கையில் அது ராக்கெட்டில் பொருத்தப்பட்டிருக்கும் ஒரு பொருள் என்பது தெரியவந்துள்ளது. மேலும் அது, ராக்கெட்டுக்கு எரிபொருள் நிரப்பிச் செல்லும் பொருள் என்பதும் கண்டறியப்பட்டது.

ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பாகம்

ராக்கெட்டின் எரிபொருள் நிரப்பும் பாகம்

ராக்கெட் விண்ணில் ஏவப்படும் போது, ராக்கெட்டுக்கு தேவையான எரிபொருள், அதன் கீழ் பகுதியில் ஐந்து உருளைகளில் எரிபொருள் நிரப்பட்டு ராக்கெட்டுன் விண்ணுக்கு அனுப்பப்படும். இந்த உருளையின் மூலமாக ராக்கெட்டுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு, ராக்கெட் கீழே எரியும் நெருப்பு மூலம் மேலே உந்திச் செல்லும்.

டிசம்பர் 6 முதல் அனைத்து டிசம்பர் 6 முதல் அனைத்து "ஜியோ கட்டணமும் உயர்வு": எவ்வளவு தெரியுமா?

ராக்கெட்டின் பூஸ்டர் என்று பொருள்

ராக்கெட்டின் பூஸ்டர் என்று பொருள்

ராக்கெட்டின் கீழ் பொருத்தப்பட்டு உருளைகளில் எரிபொருள் தீர்ந்துவிட்டால் அதை தாமாகவே கீழே கழட்டிவிடும் வண்ணம் இது வடிவமைக்கப்பட்டிருக்கும். அப்படி ராக்கெட்டில் இருந்து கீழே விழுந்த உருளையாக இது இருக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது. இந்த உருளையை பூஸ்டர் என்றும் அழைக்கப்படும்.

பி.எஸ்.ஓ.எம். எஸ்.எல். பூஸ்டராக இருக்கலாம்

பி.எஸ்.ஓ.எம். எஸ்.எல். பூஸ்டராக இருக்கலாம்

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து, கடந்த மார்ச் 22ம் தேதி, பூமியை கண்காணிக்க 'RISAT2B' என்ற செயற்கைகோளுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-46 ராக்கெட் அல்லது கடந்த ஏப்ரல் 1ம் தேதி எமிசாட் உள்ளிட்ட 29 செயற்கை கோள்களுடன் விண்ணில் ஏவப்பட்ட பி.எஸ்.எல்.வி. சி-45 ராக்கெட்டில் பயன்படுத்திய பி.எஸ்.ஓ.எம். எஸ்.எல். பூஸ்டராக இருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த ராக்கெட் பாகத்தை காண ஏராளமான பொதுமக்கள் அப்பகுதிக்கு குவிந்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Rocket parts caught a fisherman's Net in puducherry

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X