Home
News

ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்தால் வீட்டுக்கே டெலிவரி செய்யும் ரோபோக்கள்.!

இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் நமக்கு மிகவும் பயன்படும் வகையில் இருக்கிறது. அதேபோல் இப்போது தயாரிக்கப்படும் ரோபோ மாடல்கள் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் வெளிவருகிறது என்றுதான் கூறவேண்டும், அதன்படி சிங்கப்பூரில் புதிய முயற்சியாக டெலிவரி பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

ஆன்லைனில் உங்களுக்கு

அதாவது நீங்கள் ஆன்லைனில் உங்களுக்கு தேவையான பொருட்களை ஆர்டர் செய்தால் போதும் இந்த ரோபோ உங்களதுவீட்டுக்கே வந்து பொருட்களை சேர்த்துவிடும். சிறந்த மென்பொருள் மற்றும் வன்பொருள் தொழில்நுட்ப வசதியுடன் வெளிவந்துள்ளதுஇந்த அசத்தலான ரோபோ.

க்கள் தங்களுக்கு தேவையா

உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் தங்களுக்கு தேவையான பொருட்களை ஆன்லைனிலேயே ஆர்டர் செய்கின்றனர். பின்பு ஆர்டர் செய்த சிறுது நேரத்தில் டெலிவரி பாய் வந்து வீட்டு கதவை தட்டுவார். ஆனால் இப்போது நீங்கள் சிங்கப்பூரில் இருந்தால் ரோபோ வந்து வீட்டுக்கதவை தட்டும்.

 இப்போது வாடிக்கையாளர்களிடம்

சிங்கப்பூரில் டெலிவரி செய்யும் பணியில் ரோபோக்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன, கண்டிப்பாக இந்த புதிய முயற்சி மிகப் பெரிய வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது கேமெல்லோ என்று பெயரிடப்பட்ட இரண்டு ரோபோக்கள் தான் இப்போது வாடிக்கையாளர்களிடம் பொருட்களை கொண்டு சேர்க்கும் பணிக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ரோபோக்கள் 20 கிலோ வரையிலான பொருள்களை

இந்த புதிய வகை ரோபோக்கள் 20 கிலோ வரையிலான பொருள்களை எந்தவித சேதமும் இன்றி கொண்டு சேர்க்கும் திறன் கொண்டவை என்று கூறப்படுகிறது. பின்பு இந்த ரோபோக்களில் இரு அறைகள் உண்டு எனத் தகவல் வெளிவந்துள்ளது.

 700 வீடுகள் கொண்ட குடியிருப்பிற்

தற்சமயம் 700 வீடுகள் கொண்ட குடியிருப்பிற்கு பொருள்களை கொண்டு சேர்க்கும் பணியை சோதனை அடிப்படையில் செய்து வருகின்றன இந்த ரோபோக்கள். மேலும் இந்த சேவை பலபகுதிகளில் விரைவில் விரிவு படுத்தப்படும் என நம்பிக்கை தெரிவித்துள்ளது இந்த ரோபோகளை வடிவமைத்த நிறுவனமான OTSAW.

இவை

இந்த புதிய வகை ரோபோக்களில் கேமரா, முப்பரிமாண சென்சார்கள் என பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் தானாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ரோபோ மாடல்களில் வாடிக்கையாளர்கள் ஆர்டர் செய்திருந்த பொருட்கள்வைக்கப்பட்டவுடன், இவை குடியிருப்பை நோக்கி வரும் பாதை, பொருட்களை எடுத்து சென்று வழங்கும் இடம் போன்ற தகவல்கள் வாடிக்கையாளர்களின் மொபைல் போனுக்கு அனுப்பப்படும்.

 தினமும் காலை 7

மேலும் வெளிவந்த தகவலின்படி, வார நாட்களில் தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரையிலும், சனிக்கிழமைகளில் அரை நாளும் இந்த ரோபோக்கள் பணி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு எடுத்து சென்று வழங்கிய பின்னர் தன்னைதானே சுத்தப்படுத்திக்கொள்ளும் வசதியை கொண்டுள்ளன இந்த ரோபோக்கள்.

Best Mobiles in India

English summary
Robots will deliver groceries to your home: Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X