Home
News

AI உங்கள் வேலைகளை பறிக்காது.. இவர்கள் தான் பறிப்பார்கள்.. பீட்டர் ஜே போட்டு உடைத்த உண்மைகள்!

ஒன்றல்ல இரண்டல்ல.. மனிதர்களால் உருவாக்கப்பட்ட, மனிதர்களுக்காக உருவாக்கப்பட்ட ரோபோட்கள் மனித குலத்திற்கு எதிராக திரும்பிய பல கதைகள், நாவல்கள் மற்றும் திரைப்படங்கள் இங்குள்ளன. "அதெல்லாம் இப்போ நடக்குற காரியமா?.. போய் வேலையை பாருங்கப்பா" என்று நாம் சலித்துக்கொண்ட சில ஆண்டுகளிலேயே ஏஐ என்று சுருக்கமாக அழைக்கப்படும் ஆர்ட்பிஷியல் இன்டெலிஜென்ஸ் விஸ்வரூபம் எடுத்து.. சிலருக்கு - பார்ப்பதற்கு வேலை இல்லாமல் செய்துவிட்டது!

இது அடுத்தடுத்த கட்டங்களுக்கு செல்லுமா? ஏஐ (AI) நம்முடைய வேலைகளை எல்லாம் நம்மிடம் இருந்து பறித்துக்கொள்ளுமா? இதுபோன்ற கேள்விகளும், இந்த கேள்விகளுக்கான பதில்களும், விளக்கங்களும் நாளுக்கு நாள் தீவிரமாகி கொண்டே போகிறது. சில நேரங்களில் இப்படியான கேள்விகளுக்கு மிகவும் எளிமையான பதில்களே தேவைப்படுகிறது. அப்படியான பதில்களை தான் பீட்டர் ஜே (Peter Jay) கூறியுள்ளார். இவர் ஜப்ராவின் தெற்காசியா & ஏபாக் சேனல்களின் துணை தலைவர் & நிர்வாக இயக்குநர் ஆவார்!

AI உங்கள் வேலைகளை பறிக்காது.. இவர்கள் தான் பறிப்பார்கள் - பீட்டர் ஜே!

பீட்டர் ஜேவின் கூற்றுப்படி ஏஐ ஆனது உண்மையில் உங்கள் வேலையை அழிக்க வரவில்லை - அது உங்கள் வேலையை காப்பாற்ற வந்துள்ளது. ஏஐ-க்கும் உங்களுக்கும் இடையே நிற்கும் ஒரே விஷயம் என்னவென்றால் - அதை ஏற்றுக்கொள்ள உங்களுக்கு இருக்கும் தயக்கம் தான் என்று போட்டுடைத்து உள்ளார் பீட்டர் ஜே. சுருக்கமாக ஏஐ உங்கள் வேலைகளை பறிக்காது; மாறாக ஏஐ-ஐ பயன்படுத்துபவர்கள் தான் உங்கள் வேலைகளை பறிப்பார்கள் என்று கூறியுள்ளார்!

நீங்கள் தொடர்ச்சியான மீட்டிங்களில் சிக்கி, இமெயில்களில் மூழ்கும்போது, உங்களுக்காக சில கடுமையான வேலையை செய்யக்கூடியது ஏஐ தான் என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். ஜாப்ரா நிறுவனம் ஆனது 4,200 அறிவுசார் பணியாளர்கள் மற்றும் 1,800 முடிவெடுப்பவர்களை ஆய்வு செய்து, 2025 இல் ஏஐ எவ்வாறு தங்கள் வேலையை மறுவடிவமைக்கும் என்பது குறித்து அவர்களின் கருத்துக்களை பீட்டர் ஜே கேட்டறிந்துள்ளது.

ஜாப்ரா கிரேட் எக்ஸ்பெக்டேஷன்ஸ் அறிக்கை 2024 இன் படி, 90% நிபுணர்கள் ஏஐ பற்றி அறிந்திருந்தாலும், 27% பேர் மட்டுமே உண்மையில் அதை அவர்களின் வேலையில் பயன்படுத்துகின்றனர். இது மின்சார கார்கள் இருப்பதை அறிந்திருந்தும், குதிரையில் ஏறி வேலைக்கு செல்வதற்கு சமம் என்கிறார் பீட்டர் ஜே.
மேலும் அவர் ஏஐ புரட்சி இப்போது வரவில்லை - அது ஏற்கனவே வந்துவிட்டது என்றும் குறிப்பிட்டுளளார்.

மிகப்பெரிய கட்டுக்கதையை முன்கூட்டியே அகற்றுவோம்: ஏஐ என்பது உங்களை மாற்ற சதி செய்யும் ஒரு முரட்டு ரோபோ அல்ல. அதற்கு பதிலாக, இது ஒரு அலுவலக உதவியாளரை போன்றது, சாதாரணமான, திரும்ப திரும்ப செய்யும் பணிகளை கையாளுகிறது, இதனால் நீங்கள் உண்மையில் முக்கியமான வேலையில் கவனம் செலுத்த முடியும்.

ஊழியர்கள் தங்கள் நேரத்தில் 62% இமெயில்களை எழுதுவதற்கும், 57% மீட்டிங்களில் பிஸியாக இருப்பதற்கும் செலவிடுகிறார்கள் - இது பிஸியான வேலையின் வரையறை. இதற்கிடையில், 23% மட்டுமே படைப்பாற்றல் மற்றும் புதுமைக்காக நேரத்தை அர்ப்பணிக்கிறார்கள். இதெப்படி வணிகத்தை முன்னோக்கி எடுத்துச்செல்ல உதவும் என்று கேள்வி எழுப்பும் பீட்டர் ஜே, ஏஐ என்பது பொறுப்பேற்பது பற்றியது அல்ல. மேலும் இது உங்கள் வேலையை அகற்றுவது பற்றியது அல்ல என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் பரிந்துரைக்கிறார்!

மேலும் ஏஐ என்பது வெறும் செயல்திறனை பற்றியது மட்டுமல்ல - அது மன உறுதியைப் பற்றியது. இமெயில்கள், மீட்டிங்கள் மற்றும் நிர்வாகப் பணிகளால் ஊழியர்கள் மிகவும் சோர்வடைவதாக உணர்கிறார்கள், ஆனால் ஆக்கப்பூர்வமான சிந்தனை, உத்தி மற்றும் ஒத்துழைப்பில் ஈடுபடும்போது செழித்து வளர்கிறார்கள் என்பதை தரவுகள் காட்டுகின்றன

ஏஐ இந்த சமநிலையை மாற்ற உதவும், உணர்வற்ற பணிகளை தானியக்கமாக்குகிறது, இதனால் ஊழியர்கள் மகிழ்ச்சியையும் உற்பத்தித்திறனையும் தரும் விஷயங்களில் கவனம் செலுத்த முடியும். இவை அனைத்தும் உங்கள் வணிகம் சரியான வழியில் செல்வதையும்.. நிறுவனங்கள் மிகவும் திறமையானவை மட்டுமல்ல, அதிக ஈடுபாடு கொண்டவை மற்றும் குறைவான சோர்வு கொண்ட பணியாளர்களை கொண்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்தும் என்றும் பீட்டர் ஜே கூறியுள்ளார்.

மேலும் ஏஐ பற்றி நீங்கள் இன்னுமும் சந்தேகத்தில் இருந்தால்.. ஒரு கடுமையான உண்மை என்னவென்றால் - உங்களுக்கு இனி வேறு வழியில்லை. இப்போது ஏஐ உடன் ஒருங்கிணையும் நிறுவனங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் தங்கள் தொழில்களில் ஆதிக்கம் செலுத்தும். தயங்குபவர்கள் தூக்கி விடப்படுவார்கள். எனவே, கில்லிங் ரோபோக்களை பற்றி கவலைப்படுவதை நிறுத்திவிட்டு, கில்லிங் பெர்பார்மென்ஸ்-ஐ பற்றி சிந்திக்கத் தொடங்குங்கள் என்றும் பீட்டர் ஜே பரிந்துரைக்கிறார்.

More from GizBot

Best Mobiles in India

English summary
Robots is Not Going To Replace You From Your Job But someone Who knows AI Just Might
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X