ஆஹா.. வேறலெவல் ஐடியா இது: ஓட்டலில் உணவு பரிமாறும் ரோபோ.!
இப்போது வரும் புதிய புதிய தொழில்நுட்பங்கள் மனிதர்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். அதேபோல் சில இடங்களில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது. குறிப்பாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அவ்வாறு உருவாக்கப்படும் ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக மனிதனுக்கு தேவையான பணிகளை செய்ய உயிருள்ள மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிற்ற மின்னணு கருவி தான் ரோபோ. குறிப்பாக மனிதனால் உருவாக்கப்படும் இந்த ரோபோ எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை அதனை உருவாக்கும் மனிதன் முடிவு செய்கிறான்.

இந்நிலையில் மைசூருவில் பிரபலமான ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது தற்போது தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியால் மனித வேலைப்பாடுகள் குறைந்து மின்சாதன பயன்பாடுகள் அதிகரித்துவிட்டன என்றுதான் கூறவேண்டும்.குறிப்பாக மனித உருவ வடிவிலான ரோபோக்கள் பல துறைகளில் பணியாற்றி
வருகின்றன.

அந்த வகையில் மைசூருவில் பிரபலமான சித்தார்த்தா ஓட்டலில் வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாற ரோபோ வசதி
கொண்டுவரப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த ரோபோ பட்டு சேலையுடன் வந்து வாடிக்கையாளர்களுக்கு உணவு கொண்டு
வருகிறது.

குறிப்பாக உணவகத்திற்கு வரும் வாடிக்கையாளர்களிடம் வழக்கம்போல் சப்ளையர்கள் ஆர்டர்கள் எடுத்துக்கொள்வார்கள். இந்த ஆர்டர் லிஸ்ட்டை, ரோபோவிடம் சப்ளையர் வழங்குவார். அதை ரோபோ, சமையல்காரரிடம் வழங்கும். உணவு தயாரானதும், ரோபோவிடம் உள்ள பாத்திரத்தில் வைக்கப்படும். உடனே அதை ரோபோ எடுத்துக் கொண்டு நகர்ந்தபடியே வாடிக்கையாளர்களின் மேஜைக்கு அருகே செல்லும்.

குறிப்பாக ஒருமுறை சார்ஜ் செய்தால், சுமார் 8 மணி நேரம் இந்த ரோபோ இயங்கும் என்று கூறப்படுகிறது. அதேபோல்செயற்கை நுண்ணறிவில் இந்த ரோபோ வேலை செய்கிறது.

மேலும் இதுகுறித்து அந்த உணவகத்தின் அதிகாரி ஒருவர் கூறியது என்னவென்றால், 2.5 லட்சம் ரூபாய் மதிப்பில் டெல்லியில் இருந்து ரோபோ வாங்கப்பட்டது. குறிப்பாக 6 ரோபோக்கள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளன.இது தற்போதுள்ள மனிதவளத்திற்குதுணைபுரியும் என்று தெரிவித்துள்ளார்.

இப்போது பல நாடுகளில் உள்ள தொழிற்சாலைகள், அலுவலகங்கள், வீடுகளில் கூட ரோபோக்களை பயன்படுத்துகிறார்கள். இனி வரும் காலங்களில் தற்போதைய தொழில்நுட்பங்களை விட அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் ரோபோக்கள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.


Click it and Unblock the Notifications