Home
News

போருக்கு ரோபோக்களை களமிறக்க தயாராகும் சீனா: ஆயுத பலத்தை காண்பிக்கும் விதமான வீடியோ வெளியீடு!

போர்களின் போதும் தீவிரவாதத் தாக்குதலின் போதும் வீரர்களின் உயிரழிப்பை தடுக்க போர்முனை ரோபோக்களை சோதனை செய்யும் விதமான வீடியோவை சீன ஸ்டேட் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

உயிரழிப்பை தடுக்க போர்முனை ரோபோக்கள்

உயிரழிப்பை தடுக்க போர்முனை ரோபோக்கள்

போர்களின் போதும் தீவிரவாதத் தாக்குதலின் போதும் வீரர்களின் உயிரழிப்பை தடுக்க போர்முனை ரோபோக்களை சோதனை செய்ய சீனா தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரிமோட் மூலம் இயக்கப்படும் ரோபோ

ரிமோட் மூலம் இயக்கப்படும் ரோபோ

இதுகுறித்த வீடியோவை சீன அரசு தொலைக் காட்சி வெளியிட்டுள்ளது. இதுகுறித்து சிசிடிவி தெரிவித்துள்ள விளக்கம் குறித்து பார்க்கையில் ரிமோட் மூலம் இயக்கப்படும் இந்த ரோபோக்களானது அதிநவீன வசதிகளோடு தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோட்களானது மணிக்கு 10 கிலோ மீட்டர் வரை வேகமாக செல்லக் கூடியது எனவும் செங்குத்தாக ஏறும் வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.

இயந்திர துப்பாக்கி, நைட் விஷன் கேமரா

இயந்திர துப்பாக்கி, நைட் விஷன் கேமரா

இதில் இயந்திர துப்பாக்கி மற்றும் இரவில் துல்லியமாக கண்காணிக்கும் வகையில் நைட் விஷன் கேமரா ஆகியவை உள்ளதோடு இந்த ரோபோக்கள் இரவு நேரத்திலும் துல்லியமாக தாக்கக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

ரோபோ வாரியர் என பெயர்

ரோபோ வாரியர் என பெயர்

ரோபோ வாரியர் என பெயரிடப்பட்டுள்ள இந்த ரோபோ வீரர்கள் சீன இராணுவத்தின் ஆயதக் களஞ்சியத்தில் ஒன்றாக இணைகிறது. இதில் கிரேன் போன்ற ஏவுகணை ஏவும் ரோபோவை கொண்டிருக்கும் சிறிய மாடலாகும். இந்த ரோபோக்கள் உயிரிழப்பை குறைக்கச் செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடுமையான நிலப்பரப்புகளிலும் கடந்து செல்லும்

கடுமையான நிலப்பரப்புகளிலும் கடந்து செல்லும்

இந்த வகை ரோபோக்களானது கடுமையான நிலப்பரப்புகளிலும் கடந்து செல்லும். போர்க்கள சூழ்நிலைகளை துல்லியமாக கண்காணிக்கும் எனவும் தீயணைப்புத் தேவைகளை பூர்த்தி செய்யும் பயன்படும் என கணிக்கப்படுகிறது.

புதிய ரோபோ வீரர்கள்

புதிய ரோபோ வீரர்கள்

சீன இராணுவத்தில் சேரும் புதிய ரோபோ வீரர்கள் படிப்படியாக வழக்கமாகிவிட்டதாக சிசிடிவி தரப்பில் தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஏவுகணைகளை குறுகிய இடைவெளியில் செலுத்த முடியும் என சிசிடிவி கூறுகிறது.

தீவிர ஆபத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை

தீவிர ஆபத்திலிருந்து விடுவிக்க நடவடிக்கை

இதுபோன்று ஆளில்லா ரோபோக்களை களமிறக்குவது என்பது படிப்படியாக மனித வீரர்களின் கடுமையான உடல் உழைப்பு மற்றும் தீவிர ஆபத்திலிருந்து விடுவிக்கும் என நம்பிக்கை தெரிவிக்கப்படுகிறது. போர் ரோபோக்ள் ராக்கெட் படைக்கு பயன்படுத்துவது என்பது போர் திறனுக்கு முக்கியத்துவம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

அணு ஆயுத பலம் கொண்ட இரு நாடுகள்

லடாக் எல்லையில் சீன ராணுவும் தீடீரென நடத்திய தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். அதேபோல் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகின. அணு ஆயுத பலம் கொண்ட இந்திய சீன ராணுவம் இடையே ஏற்படும் மோதல் போக்கு சர்வதேச நாடுகளிடையே பேசு பொருளாக மாறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சீனா போர் பயிற்சியில் ஈடுபட்டு வீடியோக்களை வெளியிட்டு ஆயுத பலத்தை காட்டி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.

source: dailymail.co.uk

Best Mobiles in India

English summary
Robot warriors are entering in china with machine gun, infrared night-vision camera
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X