Home
News

ரோபோட் ஹார்வஸ்டர்: இந்திய விவசாயத்துறையை புரட்டிப் போடப்போகும் இயந்திரம்.!

பருத்தி செடிகளில் உள்ள பருத்தியின் புகைப்படங்களை ஆராய்ந்து 3D தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைத்து, கணிணி விஷன் பயன்படுத்தி முதிர்ந்த பருத்தியை கண்டறிந்து பணியாற்றுகிறது இந்த ரோபோ.

By Vivek Sivanandam

தொழில்முனைவோராக மாற முடிவெடுத்த போது மனோகர் சம்பந்தத்தின் வயது 50. செமி கண்டக்டர் துறையில் தொழில்நுட்பவியலாளராக 25 பணியாற்றி அவர், விவசாயியாக மாற முடிவெடுத்து 2013ல் கார்பொரேட் உலகை விட்டு வெளியேறினார்.


"நான் தமிழ்நாட்டில் சிறு விவசாய நிலத்தை வாங்கி பல்வேறு பயிர்களை விளைவிக்க முயற்சித்தேன். பொதுவாகவே பருத்தி தான் முக்கிய பணப்பயிராக திகழ்கிறது. அதற்கு குறைவான நீரும், அதிக சூரிய ஒளியும் மட்டுமே தேவைப்படும்.ஆனால் மற்ற பயிர்களை ஒப்பிடும் போது விலை நன்றாக இருக்கும் " என்கிறார் சம்பந்தன். இவர் சவாலான ஒரு முயற்சியாக தனது 12.47 ஏக்கர் நிலம் மொத்தத்திலும் பருத்தியே விதைத்தார். அவரின் முயற்சியின் பலனாக நல்ல விளைச்சலும் பெற்றார்.

பருத்தி

பருத்தி

ஆனால் இதுவரை சந்திக்காத புதுமையாக பிரச்சனையை எதிர்கொண்டார். "பருத்தி விளைச்சல் என்பது துருதஷ்டவசமாக முற்றிலும் மனிதர்களால் மட்டுமே செய்யப்படுகிறது. முதிர்ந்த பருத்தியை அறுவடை மனிதர்களால் மட்டுமே செய்ய முடியும்என்பதால், அறுவடை காலத்தில் பணியாளர்களுக்கான தேவை மிக அதிகமாக இருக்கும்" என்கிறார் சம்பந்தன். பணியாளர்களுக்கானதேவை அவர்களுக்கான ஊதியத்தை அதிகரிப்பது மட்டுமின்றி குழந்தை தொழிலாளர்களையும் ஊக்குவிக்கிறது. " என்ன தான் நல்ல விளைச்சல் இருந்தாலும் அறுவடை காலத்தில் அதீத தேவையால் பணியாளர்கள் கிடைப்பது குதிரைக்கொம்பாக இருந்தது. இறுதியாக பருவமில்லா மழை பெய்து அறுவடைக்கு தயாராக இருந்த மொத்த பருத்தியையும் நாசப்படுத்திவிட்டது" என விளக்குகிறார் சம்பந்தன்.

 நீரஜ் பரத்வாத்

நீரஜ் பரத்வாத்

எனவே இந்த விவசாயத்தை வெற்றிகரமாக நடத்தவேண்டுமானால் வேறு வழிமுறையை கையாளவேண்டும் என விரைவாக உணர்ந்தார். தனக்கு ஆர்வமுள்ள, அதே நேரம் வளர்ந்துவரும் தொழில்நுட்பமான ரோபாட்டிக்ஸ்-ஐ பயன்படுத்தி இதற்கான தீர்வை கண்டறிய முடிவுசெய்தார். டெக்ஸாஸ் நிறுவனத்தில் தன்னுடன் பணிபுரிந்த நீரஜ் பரத்வாத் என்பவரையும் தன்னுடன் இணைத்துக்கொண்டார்.
ரோபாட்டிக்ஸ் தொழில்நுட்பம் மேம்பட்டு, அதற்கான செலவுகள் தொடர்ந்து குறைந்து வரும் வேளையில், சம்பந்தன் அவர்களுக்கு பண்ணை ரோபோ-வை தயாரிப்பதற்கான சாத்தியக்கூறுகளை தந்தது. " இந்தியாவின் விவசாய சூழ்நிலைக்கு ஏற்ற பண்ணை ரோபோவை உருவாக்க எண்ணினேன். இந்தியாவில் பருத்தி விளையும் குஜராத், மகாராஷ்டிரா,தெலுங்கானா மற்றும் இதர பகுதிகளில் தொழிலாளர் பிரச்சனை தான் முக்கிய பிரச்சனையாக இருக்கிறது" என்கிறார் அவர்.

3D தொழில்நுட்பம்

3D தொழில்நுட்பம்

பல ஆண்டு கடின முயற்சிக்கு பின்பு, ஜிரோபோமேக் எனும் பண்ணை ரோபோவை உருவாக்கினார்.அதன் மூலம் விவசாய உற்பத்தியை பல மடங்கு உயர்த்துவதுடன், தொழிலாளர்களுக்கான தேவையையும் குறைக்கலாம். மேலும் தொழிலாளரின் கூலியை உயர்துவதுடன், விவசாய பொருளாதாரத்தையும் மேம்படுத்த முடியும். பருத்தி செடிகளில் உள்ள பருத்தியின் புகைப்படங்களை ஆராய்ந்து 3D தொழில்நுட்பம் மூலம் ஒருங்கிணைத்து, கணிணி விஷன் பயன்படுத்தி முதிர்ந்த பருத்தியை கண்டறிந்து பணியாற்றுகிறது இந்த ரோபோ. ரோபோவில் உள்ள ஒரு கை பருத்தியை பறிப்பதற்கும், மற்றொன்று அதை சரியாக பறிக்க இடம் ஏற்படுத்திக்கொடுக்கவும் உதவுகிறது.

மனித முயற்சி

மனித முயற்சி

இது போன்ற பல்வேறு கைகள் இணைக்கப்பட்ட, தானாக இயங்கும் வாகனம் செடிகளுக்கு சென்று பண்ணை முழுவதும் பருத்தியை அறுவடை செய்கிறது. இதில் மனித முயற்சி சில இடங்களில் தேவைப்படுகிறது. சரியான வரிசையில் ரோபோவை செலுத்துதல், அறுவடை செய்த பருத்தியை இறக்குதல், இயந்திரத்தை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு மாற்றுதல் போன்றவற்றிக்கு மனிதர்கள் தேவைப்படுகின்றனர். இப்போதைக்கு இந்த ரோபோ பருத்தி அறுவடைக்கு மட்டுமே பயன்படுத்தப்பட்டாலும், வருங்காலத்தில் வெண்டை, கத்தரி போன்ற இதர பயிர்களுக்கு விரிவுபடுத்தப்படவுள்ளது. மேலும் களையெடுத்தல், உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்து தெளித்தல் போன்றவற்றிக்கும் பயன்படுத்தவுள்ளது.

'பார்மிங் ஏஸ் ஏ சர்வீஸ்'

'பார்மிங் ஏஸ் ஏ சர்வீஸ்'

இந்தியாவில் விவசாய சேவைகள் 'பார்மிங் ஏஸ் ஏ சர்வீஸ்' என்பதை நோக்கி நகர தயாராகி வருகின்றது. அதில் விவசாய செயல்பாடுகள் அனைத்தும் சேவையாக வழங்கப்படவுள்ளது. விதைத்தல், ஆலோசனை வழங்குதல், பராமரித்தல், அறுவடை செய்தல் என அனைத்துமே இந்த சேவைக்குள் அடக்கம். அனைத்து விவசாய செயல்பாடுகளையும் ஒருங்கிணைத்து தொடக்கம் முதல் இறுதி வரை எல்லாவற்றையும் தரும் வழிமுறையுடன் விரைவில் பல நிறுவனங்கள் களமிறங்குகின்றன என்கிறார் சம்பந்தன்.

ஐரோப்பா

ஐரோப்பா

இந்த FAAS துறையில் EM3, Triingo, Zamindara, VST போன்ற பல நிறுவனங்கள் ஏற்கனவே முதலீடுகளை செய்ய துவங்கி விட்ட நிலையில், அரசாங்கமும் இதுபோன்ற தொழில்முனைவோருக்கு நிதியுதவி வழங்கி முயற்சியை விரிவாக்க ஊக்குவிக்கிறது. இவரின் ஸ்டார்ட்அப் நிறுவனம் 2018-19 நிதியாண்டில் ரூ1 கோடி வருவாயை எதிர்பார்க்கும் நிலையில், இந்தியாவை தவிர ஐரோப்பா மற்றும் ஆப்ரிக்காவிலும் விரிவாக்கம் செய்யவுள்ளது.

Best Mobiles in India

English summary
Robot harvester This precision farm machine can shape the future of India s agriculture : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X