காவல்நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் ரோபோ: அசத்திய ஆந்திரா மாநிலம்.!

|

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அருகே இந்தியாவிலேயே முதல் முறையாக காவல் நிலையத்தில் புகார்களை பதிவு செய்யும் வகையில் சைபீரா என்ற புதிய ரோபோ அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

காவல் நிலையத்தில்

குறிப்பாக காவல் நிலையத்தில் புகார்களைப் பெற்று காவல்துறையினருக்கு எளிதாக அந்த புகார்களைக் கொண்டு போய் சேர்க்கும் வகையில் இந்த ரோபோ மாடல் உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 13 கேமராக்கள்

தற்சமயம் விசாகப்பட்டினம் அருகே இருக்கும் மஹாராணிப்பேட்டை காவல் நிலையத்தில் உள்ள இந்த ரோபோவில், 360 டிகிரியிலும் படம் பிடிக்கும் வகையில் 13 கேமராக்கள் பொறுத்தப்பட்டுள்ளன எனத் தகவல் கிடைத்துள்ளது.

ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.!ரியல்மி எக்ஸ்2 ப்ரோ VS ரியல்மி எக்ஸ்2 என்ன வித்தியாசம்: விரிவாகப் பார்ப்போம் வாங்க.!

படம் பிடித்து அனைத்து

இந்த சைபிரா ரோபோவில் உள்ள கேமராவில் ரவுடிகள் அல்லது காவல் துறையினர் தேடும் நபர்கள் சிக்கினால், அவர்களைஉடனடியாக படம் பிடித்து அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் அளித்துவிடும்.

24மணி நேரத்தில்

மேலும் இந்த சைபிரா ரோபோ மக்களிடையே தானாகவே புகார்களைப் பெறும் ஆற்றல் கொண்டது, புகார்களைப் பெறவது மட்டுமின்றி, புகார்களுக்கான ஒப்புகை சீட்டை சம்பந்தப்பட்டவர்களுக்கு 24மணி நேரத்தில் அளித்துவிடும்.

செய்தி அனுப்பும்

புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றால் 24மணி நேரத்திற்கு ஒருமுறை உயரதிகாரிகளுக்கு நினைவூட்டல் செய்தி அனுப்பும். மேலும் இந்த ரோபோவை ரோபோ கப்லர் என்ற நிறுவனம் வடிவமைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆந்திரா காவல்

அதேசமயம் இந்த ரோபோவை மக்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும் பகுதிகளில் வைப்பதால் பாதுகாப்பை உறுதி செய்யலாம் என ஆந்திரா காவல் துறை கருதுவதாகச் செய்திகள் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
robot cybira launched to aid cops in visakhapatnam to take complaints : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X