அன்புள்ள அப்பா: நடக்க முடியாத மகனுக்காக ரோபோ உருவாக்கிய தந்தை.!

|

உலகில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, குறிப்பாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன.

அவரது தந்தை

அதேபோல் இப்போது உள்ள ஒரு சில புதிய தொழில்நுட்பங்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது என்றே கூறலாம். இந்நிலையில் பிரான்ஸ்-ல் நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் முடங்கி இருந்த 16 வயது மகனை ரோபோ உதவியுடன் எழுந்து நடக்க செய்துள்ளார் அவரது தந்தை.

 தந்தை ஜீன் லூயிஸ்

வெளிவந்த தகவலின்படி, பிரான்ஸ்-ல் ஆஸ்கார் எனும் 16 வயது சிறுவனின் அன்பு கோரிக்கைக்கு இணங்க அவரது தந்தை பிரத்யேக ரோபோ ஒன்றை வடிவமைத்துள்ளார். குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் ரோபோவை உருவாக்கியுள்ளார் அந்த 16 வயது சிறுவனின் தந்தை ஜீன் லூயிஸ்.

டெஸ்லா செல்ப் டிரைவிங் காரை நிலவு மெதுவாக்கியதா? வைரல் வீடியோவுடன் காரணம்.. எலான் மஸ்குக்கே இது தெரியல..டெஸ்லா செல்ப் டிரைவிங் காரை நிலவு மெதுவாக்கியதா? வைரல் வீடியோவுடன் காரணம்.. எலான் மஸ்குக்கே இது தெரியல..

னக்கு நடக்க யாராவது

இதற்கு முன்பு, எனக்கு நடக்க யாராவது தேவைப்பட்டார்கள் ஆனால் இந்த ரோபோ என்னை சுதந்திரமாக உணர வைக்கிறது என்று கூறினார் ஆஸ்கார். மேலும் இவரது தந்தை ஜீன் லூயிஸ் இன்னும் பத்தாண்டுகளில் உலகில் சக்கர நாற்காலிகளுக்கு தேவையே இருக்காது என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

உறுதிப்படுத்தும் நாணயங்கள்- கீழடி சொல்லும் உண்மை: நாணயத்தில் இருந்த உருவம் எது தெரியுமா?உறுதிப்படுத்தும் நாணயங்கள்- கீழடி சொல்லும் உண்மை: நாணயத்தில் இருந்த உருவம் எது தெரியுமா?

வாண்டெர்க்ராஃப்ட்

அதேபோல் எழுந்து நடக்க முடியாதவர்களுக்காக பாரிஸ்-ல் இதுபோன்ற ரோபோக்களை தயாரிக்கும் வாண்டெர்க்ராஃப்ட் எனும் நிறுவனத்தில் நிறுவனர்களில் ஒருவராக உள்ளார் ஜீன் லூயிஸ். குறிப்பாக இதுபோன்ற ரோபோக்கள் மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இருக்கிறது.

ஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா?ஜியோபோனுடன் ஆரோக்கியமான போட்டியில் களமிறங்கும் நோக்கியா.. என்ன திட்டம் தெரியுமா?

 47 மொழிகளில் பேசும்

இதேபோன்று இந்தியாவிலும் 47 மொழிகளில் பேசும் மனித வடிவிலான புதிய ரோபோ ஒன்றை உருவாக்கி மும்பையைச் சேர்ந்த கணினி ஆசிரியர் சாதனை படைத்துள்ளார்.

விளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3!விளையாடாதீங்க., உண்மையாகவே விலை இவ்வளவுதானா- அட்டகாச அம்சங்களுடன் நாய்ஸ் கலர் ஃபிட் ப்ரோ 3!

சேர்ந்த தினேஷ் பட்டேல்

மும்பையைச் சேர்ந்த தினேஷ் பட்டேல் என்ற அசிரியர், பிளாஸ்டிக், அட்டைப்பெட்டி,மரக்கட்டை போன்ற பொருட்களை வைத்து, ஷாலு என்ற மனித வடிவிலான ரோபோவை உருவாக்கியுள்ளார். மேலும் தினேஷ் பட்டேல் கூறியது என்னவென்றால், ஷாலு ரோபோவை உருவாக்க 50 ஆயிரம் ரூபாய் மட்டுமே செலவு செய்ததாகவும், பின்பு இதை உருவாக்க 3 வருடங்கள் ஆனதாகவும் தெரிவித்துள்ளார். ஷாலு ரோபோ தமிழ்,ஆங்கிலம், இந்தி, தெலுங்கு உட்பட இந்திய மொழிகளிலும், உலக அளவில் 38 மொழிகளிலும் பேசும் திறன் கொண்டது என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின்பு இந்த ரோபோ நாம் கேட்கும் பொது அறிவு சார்ந்த கேள்விகளுக்கும் பதிலளிக்கும் என்று கூறப்படுகிறது. இந்த புதிய வகை ரோபோவை பள்ளிகளில் ஆசிரியாராகவும் பயன்படுத்தலாம் என்று தினேஷ் பட்டேல் கூறியுள்ளார்.

Best Mobiles in India

English summary
Robot created by father for son who can't walk in France: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X