ரோபோ வண்டு Vs இயற்கை வண்டு: சண்டைல எது ஜெயித்தது தெரியுமா- இதோ பிரமிப்பு வீடியோ!

|

உலகில் இயந்திரங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவுகளுக்கான தேவை அதிகரித்து வருகிறது, குறிப்பாக இந்த தேவைகளை பூர்த்தி செய்ய ரோபோக்களும் புதிதாக வடிவமைக்கப்பட்டு வருகின்றன. அவ்வாறு உருவாக்கப்படும் ரோபோக்கள் செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றல் போன்ற தொழில்நுட்பங்களுடன் மேம்படுத்தப்படுகின்றன.

வேண்டும் என்றால் நம்

குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால் நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நாளிலும் ஒவ்வொரு நிமிடத்திலும் ரோபோக்கள் நமக்கு பெரும் பயன்களை கொடுத்து வருகின்றன. நாம் வளர்க்கும் செடிகொடிகள், புல்வெளிகளை கவனிப்பது, ஜன்னல்களை சுத்தம் செய்வது, மற்றும் விண்வெளி வீரர்களுக்கு தேவையான உதவிகளை செய்வது என பலவிதமான சிறிய வகை ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிறிய வகை ரோபோக்கள் மூலம் ஆபத்தாக இருக்கும் உயிர்களைக் காப்பாற்ற முடியும்.

சிட்டி ரோபோ போல நமக்கு பல பயனளிக்கும்

மேலும் எந்திரன் படத்தில் வரும் சிட்டி ரோபோ போல நமக்கு பல பயனளிக்கும் ரோபோக்களை நாம் உருவாக்கி கொண்டிருப்பபதாக தெரிகிறது, இதற்கு ஒரு உதாரணம் கூறவேண்டும் என்றால் இன்வெண்டோ ரோபோடிக்ஸ் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட மித்ரா எனும் ஹியூமனாய்டு ரோபோ கொரோனா நோயாளிகளுக்கு உதவுவதைக் கண்டோம்.

அடடா! ட்ரூகாலர் செயலியில் இதெல்லாம் பண்ணலாமா: இத்தனை நாளா இது தெரியாம போச்சே!

 சிட்டி ரோபோ திடீரென வில்லனாக மாறக் கூடும்

இருந்தபோதிலும் ரோபோக்களின் நன்மைகள் என்று ஒரு பக்கம் இருந்தாலும் நிச்சயமாக தீமை என்ற மறுபக்கமும் இருக்கும் என்பதும் நம்மால் மறுக்க முடியாத உண்மைதான், அதாவது சிட்டி ரோபோ திடீரென வில்லனாக மாறக் கூடும். அதற்கு எடுத்துக்காட்டாக தான் இப்போது ட்விட்டரில் ஒரு காணொளி பிரபலமாகி வருகிறது.

ரோபோ வண்டு ஒரு உண்மையான

அதாவது ஒரு ரோபோ வண்டு ஒரு உண்மையான வண்டுடன் சண்டையிடும் காணொளி காட்சி இப்போது ட்விட்டரில் வெளியாகி இணையதளங்களில் பரவி வைரலாகிவருகிறது. இந்த வீடியோ பார்க்கும் பலரையும் வியப்பில் ஆழ்ந்தியுள்ளது.

இந்த வீடியோ நாடு முழுவதும் அதிக பரவி வைரலாகிவருகிறது, இதைப் பார்க்கும் பல்வேறு மக்கள், மனிதர்களின் எதிர்காலமும் இப்படிதான் இருக்கப்போகிறதா என்று கமெண்டில் கவலையுடன் கூறி வருகின்றனர். இன்னும் சிலர் இந்த சண்டைக் காட்சியை ரசித்தவர்களாக, ஒரு தரப்பு உண்மையான வண்டுக்கும் மற்றொரு தரப்பு ரோபோ வண்டுக்கும் ஆதரவாக கமெண்ட் தெரிவித்து வருகின்றனர்.

இந்த வீடியோவில் என்னதான், ரோபோ வண்டு இயற்கை வண்டுடன் போட்யிட்டாலும், இறுதியில் ரோபோ வண்டை வீழ்த்தி இயற்கை வண்டு வெற்றி பெறுவதாக காண்பிக்கப்படுகிறது. இதை குறிப்பிட்டு பலரும் என்னதான் செயற்கை இயந்திரங்கள் வளர்ச்சியடைந்தாலும் அதன் ஆணி வேர் மனிதர்களின் கைகளிலேயே இருக்கும் என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Robot beetle encounters the real beetle video went viral on internet: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X