அடேங்கப்பா., இப்படியொரு உதவி செய்யுமா? கோவை விமான நிலையத்தில் வந்தது சூப்பர் ரோபோ.!

|

நாட்டில் பல துறைகளில் ரோபோக்களின் பயன்பாடு அதிகரித்து வருகிறது. அதாவது மனிதனுக்கு தேவையான
பணிகளை செய்ய உயிருள்ள மனிதனை விட வேகமும், திறனும் நிறைந்த ஒரு உயிற்ற மின்னணு கருவி தான் ரோபோ. குறிப்பாக மனிதனால் உருவாக்கப்படும் இந்த ரோபோ எந்தெந்த வேலைகளை செய்ய வேண்டும் என்பதை அதனை உருவாக்கும் மனிதன் முடிவு செய்கிறான்.

இரண்டு நடமாடும் ரோபோக்கள்

இரண்டு நடமாடும் ரோபோக்கள்

இந்நிலையில் கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு வழிகாட்ட இரண்டு நடமாடும் ரோபோக்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக சிறந்த தொழில்நுட்ப வசதியுடன் இந்த ரோபோக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும் இந்த ரோபோ செயல்பாடு குறித்து கோவை விமானநிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியதை இப்போது பார்ப்போம்.

இதை மட்டும் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.105 வரவு: வாட்ஸ்அப் அறிவித்த அட்டகாச சலுகை!இதை மட்டும் செய்தால் உங்கள் வங்கிக் கணக்கில் ரூ.105 வரவு: வாட்ஸ்அப் அறிவித்த அட்டகாச சலுகை!

ஆங்கில கட்டளைக்கு மட்டுமே செயல்படும்

ஆங்கில கட்டளைக்கு மட்டுமே செயல்படும்

அதாவது இரண்டு ரோபோக்களும் பயணிகளுக்கு உதவ பயன்படுத்தப்படும். அதேபோல் இந்த ரோபோக்கள் பயணிகளுக்கு தேவையான தகவல்கள், விமான நிலையத்தில் உள்ள வசதிகள் மற்றும் வழிகாட்டுதல்களை மேற்கொள்ளும். குறிப்பாக இப்போது ஆங்கில கட்டளைக்கு மட்டுமே செயல்படுகிறது இந்த ரோபோ. ஆனால் விரைவில் தமிழ் மொழியிலும் இந்த ரோபோக்கள் செயல்படும்.

அடடே! விலை இன்னும் குறைஞ்சுட்டா! OnePlus 9 5G / Samsung Galaxy S20 FE 5G வாங்கச் சரியான நேரம்..அடடே! விலை இன்னும் குறைஞ்சுட்டா! OnePlus 9 5G / Samsung Galaxy S20 FE 5G வாங்கச் சரியான நேரம்..

 செயற்றை நுண்ணறிவு தொழில்நுட்பம்

செயற்றை நுண்ணறிவு தொழில்நுட்பம்

மேலும் இந்த ரோபோக்கள் செயற்றை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில், பயணிகளின் கேள்விகளுக்கு ஒலி வடிவிலான பதில்களை தரும். பின்பு விமான நிலையம் வரும் பயணிகளை அணுகி அவர்களின் தேவைகளை கேட்கும் என்றும், பயணிகள் உதவி மையத்துடன் தொடர்புகொண்டு பேச உதவும் என்றும் கூறப்படுகிறது.

செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா? இந்த 7 காரணங்கள் தெரிந்தால் நீங்க செவ்வாய்க்கு போகமாட்டீங்க..

 வீடியோகால் பேசவும் முடியும்

வீடியோகால் பேசவும் முடியும்

குறிப்பாக வீடியோகால் முறையில் உதவியாளருடன் பேசவும் முடியும் என்று கோவை விமான நிலைய இயக்குனர் செந்தில் வளவன் கூறியுள்ளார். அதேபோல் மனிதக் கழிவுகளை கைகளால் அகற்றும் முறையை ஒழிப்பதற்காக சென்னை ஐ.ஐ.டி கல்வி நிறுவனத்தின் ஆராய்ச்சியாளர்கள்ஹோமோசெப் எனும் ரோபோவை உருவாக்கியுள்ளனர்.

ரொம்ப ரொம்ப கம்மி- 30 நாட்கள் வரை வேலிடிட்டி: பிஎஸ்என்எல் வழங்கும் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்கள்!ரொம்ப ரொம்ப கம்மி- 30 நாட்கள் வரை வேலிடிட்டி: பிஎஸ்என்எல் வழங்கும் பட்ஜெட் விலை ரீசார்ஜ் திட்டங்கள்!

சென்னை ஐ.ஐ.டி

சென்னை ஐ.ஐ.டி

ஹோமோசெப் ரோபோ ஆனது தற்போது களப் பணிக்கு முழுமையாகத் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தமிழகத்தின் பல்வேறு இடங்களில் மொத்தம் 10 எந்திரங்கள் அமைக்கத் திட்டமிடப்பட்டு, அதற்கான இடங்களை கண்டறிவது தொடர்பாக தூய்மைப் பணியாளர்களுடன்ஆராய்ச்சியாளர்கள் ஏற்கனவே தொடர்பு கொண்டு உள்ளனர்.

12525 கிராமத்துக்கு 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்: ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணியை தொடக்கி வைத்த முதல்வர்12525 கிராமத்துக்கு 1ஜிபிபிஎஸ் வேகத்தில் இணையம்: ஆப்டிகல் ஃபைபர் கேபிள் பதிக்கும் பணியை தொடக்கி வைத்த முதல்வர்

ஹோமோசெப் திட்டம்

ஹோமோசெப் திட்டம்

இத்திட்டத்தின் முதன்மைத் திட்ட ஆய்வாளரும், சென்னை ஐ.ஐ.டி எந்திர பொறியியல் துறையின் ஆசிரியருமான பேராசிரியர் பிரபு ராஜகோபால் கூறியது என்னவென்றால், ஹோமோசெப் திட்டம் தனித்துவம் வாய்ந்தது. எங்களின் முயற்சி உத்வேகமாக இருக்கும் என நம்புகிறோம் என்று கூறினார். குறிப்பாக எந்திரப் பொறியியல் துறை ஆசிரியர் மற்றும் துறை சார்ந்த பேராசிரியர்கள் ரோபோவை உருவாக்கி உள்ளனர் என்று தகவல் வெளிவந்துள்ளது. அதேபோல் தூய்மைப் பணியாளர்களே ஆபரேட்டர்களாக பணியாற்றுவார்கள் என்றும், ரோபோவை
முழுமையாக கையாளவும், அருமையாக இயக்கவும் அவர்களுக்கு பயற்சி வழங்கப்படும் என்று கூறியுள்ளனர்.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
Robot assisting passengers at Coimbatore Airport: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X