அல்டிமேட் சென்டிமென்ட்., கண்ணீர் வடித்த டெலிவரி பாய்: மனசு கேட்காத வழிப்பறி திருடர்கள்!- இதோ வீடியோ!

|

டெலிவரி பையன் கண்ணீர் வடித்து அழுததை பார்த்து வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்த அனைத்து பொருட்களையும் திரும்பக் கொடுக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனா

உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தும் கொரோனா

கொரோனா தொற்று உலகம் முழுவதும் தாக்கத்தை ஏற்படுத்தி வரும் நிலையில் இதை கட்டுப்படுத்த அந்தந்த நாட்டு அரசு தரப்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக பாகிஸ்தான் அரசு சமூகஇடைவெளியை கடைபிடிக்க வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது.

வழிப்பறிக் கொள்ளையர்கள்

வழிப்பறிக் கொள்ளையர்கள்

இந்த நிலையில் டெலிவரி பையன் கண்ணீர் வடித்து அழுதுதை பார்த்து வழிப்பறிக் கொள்ளையர்கள் பறித்த அனைத்து பொருட்களையும் திரும்பக் கொடுக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

டெலிவரி செய்வதற்கு வந்த ஊழியர்

டெலிவரி செய்வதற்கு வந்த ஊழியர்

பாகிஸ்தான் கராச்சியில் உள்ள வீட்டில் இருந்து ஆர்டர் செய்த பொருட்களை டெலிவரி செய்வதற்காக ஊழியர் ஒருவர் வந்துள்ளார். டெலிவரி முடித்து விட்ட அந்த பையன் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து புறப்பட தயாரானார்.

இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர்

இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர்

அப்போது அதே வழியில் இரு சக்கர வாகனத்தில் இருவர் வருகின்றனர். டெலிவரி செய்துமுடித்து விட்டு வந்த பையனுக்கு அருகில், நிறுத்திவிட்டு கையில் இருக்கும் அனைத்தையும் கேட்கின்றனர்.

இந்திய - சீன எல்லை மோதல்: கொதித்த இந்தியர்கள்! கூகுளில் தேடுவது இதுதான்.!இந்திய - சீன எல்லை மோதல்: கொதித்த இந்தியர்கள்! கூகுளில் தேடுவது இதுதான்.!

அனைத்தையும் கொடுத்த டெலிவரி ஊழியர்

அனைத்தையும் கொடுத்த டெலிவரி ஊழியர்

இருசக்கர வாகனத்தில் வந்த இருவரில் ஒருவர் டெலிவரி பையனிடம் இருக்கும் பொருட்களை மிரட்டி வாங்குகின்றனர். டெலிவரி பையன் அச்சத்தோடு தனது கையில் இருந்த அனைத்தையும் கொடுக்கிறார்.

பையனின் அழுகையை பார்த்த வழிப்பறி கொள்ளையர்கள்

அப்போது கண்ணீர் வடித்த அழுதபடி அந்த பையன் அனைத்தையும் வழிப்பறி கொள்ளையர்களிடம் கொடுக்கிறார். இந்த பையனின் அழுகையை பார்த்த வழிப்பறி கொள்ளையர்கள் வாங்கிய அனைத்தையும் திரும்பக் கொடுத்து விடுகின்றனர்.

கட்டிப்பிடித்து சென்ற டெலிவரி பாய்

கட்டிப்பிடித்து சென்ற டெலிவரி பாய்

டெலிவரி பையனிடம் இருந்து வாங்கிய பொருட்களை திரும்பக் கொடுத்த வழிப்பறிக் கொள்ளையர்கள் அவரிடம் மன்னிப்பு கேட்கும் விதமாக கைக்குலுக்கி சென்றுவிடுகின்றனர். அதை அவரை கட்டிப்பிடித்து தங்களது வாகனத்தை எடுத்து புறப்பட்டனர். இந்த காட்சி அந்த பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Best Mobiles in India

English summary
Robbers returning the valuables things to deliveryman after he tears

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X