எப்போதும்போல் நடந்த ஆன்லைன் வகுப்பு: மாணவி வீட்டுக்குள் புகுந்த திருடர்கள்- பதிவான வீடியோ!

|

ஆன்லைன் வகுப்பு நடந்துக் கொண்டிருந்த போது திடீரென மாணவி ஒருவரின் வீட்டில் திருடர்கள் புகுந்து கொள்ளையடித்த சம்பவம் சக மாணவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை

கொரோனாவைக் கட்டுப்படுத்த தளர்வுகளோடு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதன் விளைவாக பள்ளி, கல்லூரிகள் செயல்பட முடியாத நிலை ஏற்பட்டது. பள்ளி, கல்லூரிகள் எப்போது திறக்கப்படும் மாணவர்களின் படிப்புகள் என்னவாகும் என்பது கேள்விக்குறியானது.

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்புகள்

மாணவர்களுக்கு சில பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்து வருகின்றனர். அதேபோல் வீட்டில் இருந்தபடியே வேலை பார்க்கும் ஊழியர்களுக்கு நிறுவனங்கள் வலியுறித்து வருகிறது. அதற்கேற்ப தொலைத் தொடர்பு நிறுவனங்களும் டேட்டா சலுகைகளை கூடுதலாக வழங்கி வருகிறது. வீடியோ கான்பிரன்ஸ் கால் செய்வதற்கு ஜூம் ஆப் பெரும்பாலானோர்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஜூம் செயலி

ஜூம் செயலி

ஜூம் செயலி என்பது பல்வேறு தேவைக்கும் பிரதான பயன்பாடாக இருக்கிறது. நீதிமன்ற வழக்கு விசாரணையும் வீடியோகால் மூலம் நடத்தப்பட்டு வருகிறது. ஜூம் செயலி குறித்து பல்வேறு குற்றச்சாட்டுகள் வந்தாலும், இதன் பயன்பாடு அதிகரித்துக் கொண்டே வருகிறது.

மத்திய ஈக்வடார் அம்பட்டோ பகுதி

மத்திய ஈக்வடார் அம்பட்டோ பகுதி

இந்த நிலையில் மத்திய ஈக்வடார், அம்பட்டோ பகுதியில் நடந்துக் கொண்டிருந்த ஆன்லைன் வகுப்பின்போது அதிர்ச்சி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஈக்வடார் துங்குராஹூவாவில் உள்ள அம்பட்டோ பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்தப்பட்டது. இதில் ஆசிரயர் உட்பட 25 பேர் ஆன்லைன் வகுப்பில் ஈடுபட்டிருந்தனர்.

ஆர்டர் செய்த மொபைல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?-ஒரு மனசாட்சி வேண்டாமா?ஆர்டர் செய்த மொபைல் வீட்டுக்கு வந்தது: திறந்து பார்த்தா?-ஒரு மனசாட்சி வேண்டாமா?

வீட்டில் திடீரென திருடர்கள் புகுந்தனர்

வீட்டில் திடீரென திருடர்கள் புகுந்தனர்

அப்போது அந்த ஆன்லைன் வகுப்பில் ஒருவராக கலந்து கொண்ட மரியாஜோஸ் என்ற மாணவியின் வீட்டில் திடீரென திருடர்கள் புகுந்தனர். வீட்டுக்குள் நுழைந்த திருடர்கள் முகமூடி அணிந்தபடி இருந்தனர். இதை பார்த்த சக மாணவர்கள் அடுத்தடுத்த நடவடிக்கையை எடுக்கத் தொடங்கினர். அதில் ஒருவர் மரியாஜோஸ் தாயாரின் மொபைல் எண் உள்ளதா, அவரது விலாசம் தெரியுமா என ஒருவர் கேட்கிறார். அதில் ஒருவர் தன்னிடம் மரியா ஜோஸ் தாயாரின் மொபைல் எண் இருப்பதாக தெரிவித்தார்.

வேகமாக காரில் தப்பிச் சென்ற கொள்ளையர்கள்

அதோடு திருடர்களில் ஒருவர் லேப்டாப்பை மூடிவிடுகிறார். அதோடு காட்சி உறைந்த நிலையில் உள்ளது. வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் வேகமாக காரில் தப்பிச் சென்றுவிட்டனர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து போலீஸில் புகார் அளிக்கப்பட்டது.

கொள்ளையர்களை கைது செய்த போலீஸார்

கொள்ளையர்களை கைது செய்த போலீஸார்

புகாரின் பேரில் விரைந்த போலீஸார், ஹூவாச்சி க்ரேன் எனும் பகுதியில் வைத்து கொள்ளையர்களை மடக்கி பிடித்தனர். கொள்ளையர்களிடம் இருந்து 3017 டாலர்கள், இரண்டு மொபைல் போன்கள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு துளைக்கும் ஆயுதம், லேப்டாப்கள், வீடியோ கேம்ஸ் கன்சோல் ஆகியவற்றை கைப்பற்றினர். கொள்ளையர்களை கைது செய்த போலீஸார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

source: dailymail.co.uk

Piccourtesy: SocialMedia

Best Mobiles in India

English summary
Robbers Enters into Students House During Zoom Online Class

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X