ஆசியாவுக்கு ஆபத்தாக வந்துள்ள புதிய ஆண்ட்ராய்டு மால்வேர்.!
இதில் இருந்து தப்பிக்க இருக்கும் வழிகளில் ஒன்று குரோம் பிரெளசர்களின் லேட்டஸ்ட் வெர்ஷனை பயன்படுத்துவதுதான்.
கடந்த ஏப்ரல் மாதம் காஸ்பெர்ஸ்கி லேப் ஆராய்ச்சியாளர்கள் ஒரு புதிய வடிவ மால்வேர் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். ஆசியாவில் உள்ள ஸ்மார்ட்போன் பயனாளிகளை குறி வைக்கும் இந்த மால்வேர் டொமென் நேம் சிஸ்டம் என்ற வடிவத்தில் ஊடுருவி ஹைஜாக் டெக்னிக்கை பயன்படுத்துவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

கடந்த நான்கு வாரங்களுகாக இந்த மால்வேர் ஒவ்வொரு இடமாக அதிகரித்து தற்போது ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் வரை பரவியுள்ளதாகவும், இந்த மால்வேர் ஐஒஎஸ் சாதனங்கள் மற்றும் கம்ப்யூட்டரிலும் ஊடுருவி வருவதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த மால்வேர் நமது மொபைல் உள்பட மற்ற சாதனங்களில் ஊடுருவி நமது தகவல்களை திருடுவது மட்டுமின்றி நம்முடைய சாதனத்தையும் ஹேக்கர்கள் தங்கள் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துவிடுகின்றனர். மிகப்பெரிய லாபம் அடைவதற்காக இந்த மால்வெரை சீனா அல்லது கொரியாவை சேர்ந்தவர்கள் இதனை உருவாக்கியிருக்கலாம் என சந்தேகம் கொள்ளப்படுகிறது.

எப்படி அட்டாக் செய்யும்?
இந்த மால்வேர் குறித்து காஸ்பெர்ஸ்கி கூறும்போது மிக எளிய வடிவில் இந்த ரோமிங் மாண்டிஸ் என்று அழைக்கப்படும் மால்வேர் நமது சாதனங்களில் டி.என்.எஸ் மூலம் ஊடுருவி அதன் மூலம் பரவும் வகையில் அபாயத்தை உருவாக்கி வருகிறது. இந்த மால்வேர் எந்த வடிவத்தில் நம்முடைய சாதனத்தை அடைகிறது என்பது இன்னும் தெரியவில்லை. டி.என்.எஸ் மூலம் வெற்றிகரமாக ஊடுருவப்பட்டவுடன் எந்தவொரு வலைத்தளத்தையும் அணுகுவதற்கு பயனர்களால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு முயற்சியும், தாக்குபவர்களின் சேவையகத்திலிருந்து வரும் போலித்தனமான உள்ளடக்கத்துடன் ஒரு உண்மையான தோற்றமுள்ள யூ.ஆர்.எல் போன்று வழிவகுக்கிறது.
இதில் இருந்து தப்பிக்க இருக்கும் வழிகளில் ஒன்று குரோம் பிரெளசர்களின் லேட்டஸ்ட் வெர்ஷனை பயன்படுத்துவதுதான். அதேபோல் லிங்குகளை கிளிக் செய்யும் முன் அந்த லிங்க் உண்மைதானா? என்பதை அறிந்து கொண்டு அதன் பின்னால் ஹேக்கர்களின் கைவரிசை உள்ளதா? என்பதை தெரிந்து கொண்டு கிளிக் செய்வது நல்லது.
இந்த ரோமிங் மாண்டிஸ் மால்வேர் பிரெளசர் அல்லது வேறு ஏதேனும் வழிகளில் ஊடுருவ வழி இருக்கின்றதா? என்று முதலில் ஆராய்கிறது. அதன்பின்னர் கிடைக்கும் வழிகளில் ஊடுருவி பின்னர் நம்முடைய தகவல்களை திருடுகிறது. மேலும் இது நாம் செயல்படுத்தும் ஒவ்வொரு செய்கைகளையும் அதுவே தானாக செய்யும் திறனையும் கொண்டுள்ளது.
உலகம் முழுவதும் பரவுகிறது
தென்கொரியா, வங்கதேசம், மற்றும் ஜப்பான் உள்பட ஆயிரக்கணக்கான இடங்களில் இந்த மால்வேர் ஊடுருவினாலும் முதல்கட்டமாக சுமார் 150 இடங்களை குறிவைத்து இந்த மால்வேர் பரவி வருவதாகவும், தினந்தோறும் ஆயிரக்கணக்கான இடங்களில் பரவி அதன் வேலையை செய்து வருவதாகவும் காஸ்பெர்ஸ்கி அறிவித்துள்ளது. மேலும் இந்த மால்வேர் ஆங்கிலம், கொரியன், சீனா மற்றும் ஜப்பானிய மொழிகளில் பரவி வருகிறது
ஆனால் அதே நேரத்தில் ஹேக்கர்கள் இன்னும் 27 மொழிகளில் இதனை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளது. குறிப்பாக போலந்து நாட்டு மொழி, ஜெர்மன், இந்தி, அரபு, பல்கேரியன் மற்றும் ரஷ்ய மொழிகளிலும் ஊடுருவி விட்டது,. மேலும் ஐஒஎஸ் பயனாளிகளையும் தாக்கும் வகையில் ஆப்பிள் தீம் ஒன்றையும் இந்த மால்வேர் உருவாக்கியுள்ளது. மேலும் லேட்டஸ்ட்டாக கம்ப்யூட்டரிலும் ஊடுருவும் வகையில் அதற்கான மாறுதல்களையும் இது செய்துவிட்டது. இந்த மால்வேர் குறித்த ஒரே ஒரு வழியை கண்டுபிடித்துவிட்டால் அதன் பின்னர் இதனை கட்டுப்படுத்துவது குறித்த ஆய்வுகளை காஸ்பெர்ஸ்கி தொடங்கிவிடும் என அறிவித்துள்ளது.
இண்டர்நெட்டை பயன்படுத்தும்போது ஒருசில விதிகளை பின்பற்றுமாறு காஸ்பெர்ஸ்கி நமக்கு அறிவுத்தியுள்ளது. அதன்படி உங்கள் டி.என்.எஸ் செட்டிங் ஐபிஎஸ் சப்போர்ட் உள்ளதா? என்பதை சோதனை செய்து கொள்ளுங்கள். அவ்வபோது உங்களுடைய லாகின் பாஸ்வேர்டுகளை மாற்றி ஹேக்கர்களுக்கு சில கடினத்தை கொடுக்கலாம். மூன்றாவது பார்ட்டி சோர்ஸ்களில் இருந்து எதையும் இன்ஸ்டால் செய்ய வேண்டாம்.


அதேபோல் மூன்றாவது பார்ட்டி சோர்ஸ்களிடம் இருந்து உங்கள் ஆண்ட்ராய்டு மொபைலில் எதையும் டவுன்லோடு செய்ய வேண்டாம். மேலும் அடிக்கடி பிரெளசர், இணையதள முகவரி ஆகியவற்றை சோதனை செய்து கொள்ளுங்கள். தேவையில்லாதவைகளில் சைன் இன் செய்ய வேண்டாம்.


Click it and Unblock the Notifications