வயர்லெஸ் பிராண்ட்பேண்ட் மார்க்கெட்: ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த திட்டம்

|

ஐ.சி.ஆர்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையின்படி கடந்த மார்ச் மாதத்தில் ரிலையன்ஸ் ஜியோ மட்டுமே அதிக வாடிக்கையாளர்களை இணைத்த நிறுவனமாக கருத்தில் கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிறுவனம் கூடுதலாக 9.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இணைத்து மொத்த வாடிக்கையாளர்களாக சுமார் 300 மில்லியனை தொட்டு சாதனை செய்துள்ளது.

வயர்லெஸ் பிராண்ட்பேண்ட் மார்க்கெட்: ரிலையன்ஸ் ஜியோவின் அடுத்த திட்டம்

மேலும் ஐ.சி.ஆர்.ஏ இதுகுறித்து கூறியபோது, 'வாடிக்கையாளர்கள் அதிகரித்ததன் காரணமாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் பங்குச்சந்தையில் கடந்த மார்ச் மாதம் 25.2 சதவிகிதம் அதிகரித்தது. பிப்ரவரியிஉம் 24.4 சதவிகிதம் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் வோடோபோன் - ஐடியா மார்க்கெட் 36 சதவிகிதமும், பார்தி ஏர்டெல் நிறுவனம் 32.1 சதவிகிதமும் பங்குச்சந்தையில் கடந்த மார்ச் மாதம் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

1023 மில்லியன்

1023 மில்லியன்

அதே நேரத்தில் வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த 2019, மார்ச் மாதத்தில் 1162 மில்லியன் குறைந்துள்ளதாகவும் தெரிகிறது. மேலும் நாடு முழுவதும் மார்ச் மாதம் 1022 மில்லியன் வாடிக்கையாளர்கள் ஸ்டெடியாக இருப்பதும், இதேபொல் பிப்ரவரியிலும் 1023 மில்லியன் வாடிக்கையாளர்கள் இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது

2 சதவிகிதம் அதிகரித்துள்ளது

இருப்ப்பினும் வயர்லெஸ் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த 2019 மார்ச் மாதத்தில் 2 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று தெரிகிறது

ஹர்ஷ் ஜக்னானி

ஹர்ஷ் ஜக்னானி

கடந்த சில மாதங்களில் மினிமம் ரீசார்ஜ் திட்டங்கள் கொண்டு வரப்பட்டதால் மார்ச் மாதம் அதிக வாடிக்கையாளர்கள் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனங்களில் இருந்து வெளியேறியதாக வந்துள்ள செய்தியும் மறுக்கப்பட்டுள்ளது. குறைந்த வருவாய் தரும் வாடிக்கையாளர்களை வெளியேற்றுவதற்கான முயற்சியில் செய்யப்பட்ட திட்டமாக இது கருதப்படுகிறாது, இதனால் ஏ.ஆர்.பி.யூ அளவை மேம்படுத்தவும், லாபத்தை அதிகரிக்கவும், கடந்த சில ஆண்டுகளில் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வாடிக்கையாளர்களின் இந்த வீழ்ச்சியானது தொழில்துறை வருவாயைப் பாதிக்கக்கூடியதாக இருக்காது என்று ஐ.சி.ஆர்.ஏ நிறுவனத்தின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஹர்ஷ் ஜக்னானி தெரிவித்துள்ளார்.

வயர்லெஸ் பிராட்பேண்ட்

வயர்லெஸ் பிராட்பேண்ட்

இந்த நிலையில் வயர்லெஸ் பிராட்பேண்ட் வாடிக்கையாளர்களின் தளம் வலுவான வளர்ச்சியுடன் தொடர்ந்து பராமரிக்கப்படுவதாகவும், இது 2019 மார்ச் மாதத்தில் 544.9 மில்லியனாக அல்லது மொத்த சந்தாதாரர்களின் 47 சதவீதத்தில் அதிகரித்து, மாதத்தில் 12.9 மில்லியன் கூடுதலாக உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிலையன்ஸ் ஜியோ வயர்லெஸ் பிராட்பேண்ட் சந்தையில் 56 சதவிகித சந்தை பங்கைக் கொண்டுள்ளது. இதனையடுத்து பார்தி ஏர்டெல் 21 சதவிகிதமும், வோடபோன் ஐடியா 20 சதவிகிதமும் கொண்டுள்ளது

100 சதவிகித வாடிக்கையாளர்களும் வயர்லெஸ் வாடிக்கையாளர்களே.

100 சதவிகித வாடிக்கையாளர்களும் வயர்லெஸ் வாடிக்கையாளர்களே.

ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை பொருத்தவரை அதனுடைய 100 சதவிகித வாடிக்கையாளர்களும் வயர்லெஸ் வாடிக்கையாளர்களே. ஆனால் பார்தி நிறுவனத்திற்கு இந்த சதவிகிதம் 35 மட்டுமே, வோடோபோன் ஐடியாவுக்கு 28 சதவிகிதம் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது

Most Read Articles
Best Mobiles in India

English summary
RJio leads wireless broadband market with 56 market share ICRA: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X