சத்தமின்றி ஏடிஎம்களின் பணப் பரிவர்த்தனைகக்கான கட்டணம் உயர்வு: எப்போது முதல் தெரியுமா?

|

ரிசர்வ் வங்கி சார்பில் ஒரு புதிய அறிவிப்பு வெளிவந்துள்ளது. அதாவது நம் வங்கி சாராத மாற்று வங்கியின் ஏடிஎம் மையத்தில் பணம் எடுப்பதற்கான கட்டணத்தை உயர்த்த இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி அளித்துள்ளது.

ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி

மேலும் இதுதொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏடிஎம் பராமரிப்பு செலவை கருத்தில் கொண்டு இந்த பரிவர்தனை கட்டணம் உயர்த்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனவே மாதாந்திர இலவச பரிவர்த்தனை வரம்பை தாண்டி ஏடிஎம்மை பயன்படுத்தும் வங்கி வாடிக்கையாளர்களிடம் ஒரு பரிவர்த்தனைக்கு ரூ.20-க்கு பதிலாக ரூ.21 வீதம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 1-ம் தேதி முதல்

ஜனவரி 1-ம் தேதி முதல்

அதாவது ஏடிஎம் மையங்களில் மாதந்திர இலவச பரிவர்த்தனை எண்ணிக்கையைத் தாண்டி பயன்படுத்துவதற்கான கட்டணத்தை தான் உயர்த்திக் கொள்ள வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி கடந்த வியாழக்கிழமை அனுமதி கொடுத்துள்ளது. மேலும் இந்த நடைமுறை வரும் 2022-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

உஷார் மக்களே.! இந்த 5 ஆப்ஸை உடனே உங்க போனில் டெலீட் செய்யுங்கள்.. இல்லைனா வங்கியில் உள்ள பணம் அபேஸ்.!உஷார் மக்களே.! இந்த 5 ஆப்ஸை உடனே உங்க போனில் டெலீட் செய்யுங்கள்.. இல்லைனா வங்கியில் உள்ள பணம் அபேஸ்.!

மூன்று முறையும் இலவசமாக பணப்

குறிப்பாக வாடிக்கையாளர்கள் தாம் கணக்கு வைத்திருக்கும் வங்கி ஏடிஎம்களில் மாதந்தோறும் ஐந்து முறையும், பிற வங்கி ஏடிஎம்களில் மூன்று முறையும் இலவசமாக பணப் பரிவர்த்தனை செய்துகொள்ள தொடர்ந்து அனுமதிக்கப்படுவர்.

இன்னும் 3 நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க: ஸ்மார்ட்போன்களுக்கு 50%வரை தள்ளுபடி அறிவிக்கும் பிளிப்கார்ட்!இன்னும் 3 நாள் மட்டும் வெயிட் பண்ணுங்க: ஸ்மார்ட்போன்களுக்கு 50%வரை தள்ளுபடி அறிவிக்கும் பிளிப்கார்ட்!

ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பணப்

மேலும் வரும் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் பணப் பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.15-இலிருந்து ரூ.17 ஆக உயர்த்தவும், பணமில்லாத பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணத்தை ரூ.5-இலிருந்து ரூ.6-ஆக உயர்த்தவும் வங்கிகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதாக சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!கடலில் வேகமாக பரவும் 'கடல் சளி' ஆபத்து.. மனிதர்களுக்கு தொற்று பரவும் அபாயம் - விஞ்ஞானிகள் எச்சரிக்கை.!

 வருங்கால வைப்பு நிதியம்

வருங்கால வைப்பு நிதியம்

அதேபோல்வருங்கால வைப்பு நிதியம் புதிய விதிகளை அறிவித்துள்ளது. இபிஎஃப் கணக்கை ஆதார் உடன் இணைக்க வேண்டும்எனவும் அதற்கான காலக்கெடு இந்த மாதம் இறுதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

சட்டம் இயற்றியாச்சு: பிட்காயின் அங்கீகரித்த முதல் நாடு- பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு குடியுரிமை இருக்கு!சட்டம் இயற்றியாச்சு: பிட்காயின் அங்கீகரித்த முதல் நாடு- பிட்காயின் முதலீட்டாளர்களுக்கு குடியுரிமை இருக்கு!

 இணைத்தல் சமூக பாதுகாப்பு

இபிஎஃப் ஆதார் இணைத்தல் சமூக பாதுகாப்பு 2020-இன் 142-வது பிரிவில் சமீபத்திய மாற்றம்படி பணியாளர்கள் வருங்கால வைப்பு நிதி (இபிஎஃப்) கணக்குடன் ஆதார் அட்டையை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு நிதி புதிய கட்டுப்பாடு ஜூன் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இந்த மாத இறுதிக்குள் இதை இணைக்க வேண்டும் எனவும் காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Rise in ATMs' transaction fees: Do you know when?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X