சொன்னதை செய்வோம் : அப்போ போன், இப்போ டிவி : ரிங்கிங் பெல்ஸ் அதிரடி.!!

By Meganathan
|

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் கருவியை ரூ.251க்கு வழங்குவதாகக் கூறி இந்தியாவில் சர்ச்சையை ஏற்படுத்திய ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் தான் வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றும் காலம் வந்து விட்டதாகத் தெரிவித்துள்ளது. இந்நிறுவனம் மக்களை ஏமாற்றலாம் என அந்நிறுவனத்தின் மீது குற்றம்சாட்டப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

தற்சமயம் சுமார் 2,00,000 ஃப்ரீடம் 251 கருவிகளோடு தயாராக இருக்கின்றோம். ஜூன் மாதம் 30 ஆம் தேதி முதல் இவற்றை விநியோகம் செய்ய துவங்குவோம் என அந்நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஒ மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.

01

01

ஜூன் 30 ஆம் தேதிக்குள் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் சுமார் 25,00,000 கருவிகளை விநியோகம் செய்ய பிப்ரவரி மாதம் திட்டமிட்டது, எனினும் அந்நிறுவனம் சுமார் 7 கோடி முன்பதிவுகளை மூன்றே நாட்களில் பெற்றது.

02

02

'பிரச்சனைகளைத் திருத்திக்கொண்டு, கருவியை வெளியிடும் வரை அமைதியாய் இருக்க முடிவு செய்தோம். அதன் படி 4 இன்ச் டூயல் சிம் கொண்ட கருவிகள் விநியோகம் செய்ய தயாராக இருக்கின்றது' என கோயல் தெரிவித்துள்ளார்.

03

03

'ஒரு கருவிக்கு ரூ.140-150 வரை இழப்பு ஏற்படும், எனினும் டிஜிட்டல் இந்தியா மற்றும் மேக் இன் இந்தியா போன்ற திட்டங்களின் மூலம் இந்தியாவின் கிராமப்புறங்களில் இணைக்க ஃபீரடம் 251 கருவிகள் உதவுவது மகிழ்ச்சியளிக்கின்றது' என கோயல் தெரிவித்துள்ளார்.

04

04

3ஜி கனெக்டிவிட்டி, 1.3 ஜிகாஹெர்ட்ஸ் குவாட்-கோர் பிராசஸர், 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி இன்டர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக 32 ஜிபி வரை நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.

05

05

கேமராவை பொருத்த வரை 8 எம்பி ப்ரைமரி கேமரா மற்றும் 3.2 எம்பி முன்பக்க கேமராவும், 1,800 எம்ஏஎச் பேட்டரி மற்றும் ஆண்ட்ராய்டு 5.1 லாலிபாப் இங்குத்தளமும் கொண்டுள்ளது.

06

06

ஃப்ரீடம் 251 கருவிகள் கருப்பு மற்றும் வெள்ளை நிறங்களில் கிடைக்கின்றது. கருவியை ஆன் செய்யும் போது இந்திய கொடி திரையில் தெரிவதோடு இதில் கூகுள் ஆப்ஸ் வசதி வழங்கப்பட்டுள்ளது.

07

07

ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் 32 இன்ச் எச்டி திரை கொண்ட எல்இடி தொலைக்காட்சி பெட்டிகளை ஜூலை மாதம் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது.

08

08

இந்தியாவில் விலை குறைந்த தொலைக்காட்சி கருவியாக இது இருக்கும் என்பதோடு இதன் விலை ரூ.10,000க்குள் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

09

09

தொலைக்காட்சிகளின் விநியோகம் இரு நாட்களில் செய்யப்பட்டு விடும் என்றும் இவை இணையம் மூலம் விற்பனை செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10

10

பிப்வரி மாதம் நடைபெற்ற ஃப்ரீடம் 251 கருவியின் அறிமுக விழாவில் முன்னாள் பாஜக தலைவர் முரளி மனோகர் ஜோஷி கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Ringing Bells all set to deliver Two lakh Freedom 251 phones Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X