பஞ்சாயத்து ஓவர் : ஃப்ரீடம் 251 விநியோகம் செய்ய தேதி அறிவிக்கப்பட்டது.!!

By Meganathan
|

உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் வழங்குவதாக அறிவித்து நாடு முழுக்க அதிக பிரபலமான ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் முன்பு அறிவித்ததை போன்றே வீடிக்கையாளர்களுக்கு ஃப்ரீடம் 251 கருவிகளை விநியோகம் செய்ய தேதிகளை அறிவித்துள்ளது.

அறிவிப்பு வந்தவுடன் எவ்வித தயக்கமும் இன்றி முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தும் விதமாக ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் அறிவிப்பு அமைந்துள்ளது.

01

01

ஏற்கனவே கருவிகளை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு விநியோகம் செய்யும் பணிகள் துவங்கும் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனத்தின் தலைவர் மோஹித் கோயல் தெரிவித்துள்ளார்.

02

02

ஃப்ராடம் 251 கருவிகளுக்கு ஏற்கனவே பணம் செலுத்தியவர்களுக்கு ஜூன் மாதம் 28 ஆம் தேதி முதல் கருவிகள் விநியோகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

03

03

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் ஃப்ரீடம் 251 கருவிகளுக்கான விற்பனையை தனது இணையதளத்தில் துவங்கியது. அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களில் இது ஏமாற்று வேலை என செய்திகள் பரவலாக வெளியாகி இந்நிறுவனம் பல்வேறு சர்ச்சைகளில் சிக்கயது.

04

04

இரண்டு நாள் விற்பனையிலேயே அதிக வாடிக்கையாளர்கள் இணையதளம் பயன்படுத்திய காரணத்தினால் இந்நிறுவனத்தின் இணையதளம் முடங்கியதும் குறிப்பிடத்தக்கது.

05

05

பல்வேறு சர்ச்சைகளிலும் முதற்கட்ட விற்பனையில் 30,000 பேர் ஃப்ரீடம் 251 கருவியை வாங்க முன்பதிவு செய்துள்ளனர் என ரிங்கிங் பெல்ஸ் நிறுவனம் அறிவித்தது.

06

06

அரசு நிறுவனங்களின் நெருக்கடியை தொடர்ந்து கருவிக்காக பணம் செலுத்திய வாடிக்கையாளர்களுக்கு பணம் திரும்ப வழங்கப்பட்டது. 30,000 பேர் கருவிக்கான பணம் செலுத்தியதாகவும், சுமார் 7 கோடி பேர் கருவியை முன்பதிவு செய்ததாக அந்நிறுவனம் தெரிவித்தது.

07

07

ஃப்ரீடம் 251 கருவியின் தயாரிப்பு கட்டணம் ரூ.2500 என்றும், இதனினை விளம்பரம், அதிகளவு விற்பனை, வரிச்சலுகை போன்ற பல்வேறு வழிமுறைகளில் ஈடு செய்வோம் என ரிங்கிங் பெல்ஸ் தலைவர் அசோக் சந்தா தெரிவித்தார்.

08

08

ஃப்ரீடம் 251 கருவிகள் இந்தியாவிலேயே தயாரிக்கப்படுவதால் 13.8 சதவீதம் வரை வரியை குறைக்க முடியும் என்றும் இவைகளை ஆன்லைனில் விற்பனை செய்வதன் மூலம் அதிக பணம் மிச்சம் செய்ய முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

09

09

இந்த கருவியானது நொய்டா மற்றும் உத்ரான்ச்சல் போன்ற இடங்களில் தயாரிக்கப்படுவதோடு இதற்கென ரூ.250 கோடி செலவில் இரண்டு தயாரிப்பு ஆலைகள் கட்டமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

10

10

குறித்த தேதியில் சரியாக விநியோகம் செய்யப்பட்டால் உலகின் விலை குறைந்த ஸ்மார்ட்போன் ஃப்ரீடம் 251 என்ற பெருமையை பெரும்.

Best Mobiles in India

English summary
Ringing Bells Confirms Phone Deliveries From June 28 Tamil

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X