Home
News

இந்தியாவில் பிரத்தியேக ஷோ ரூம்கள் அமைக்கும் பிளாக்பெர்ரி!

By Super
இந்தியாவில் பிரத்தியேக ஷோ ரூம்கள் அமைக்கும் பிளாக்பெர்ரி!

வாடிக்கையாளர்கள் அதிகமான ஆன்ட்ராய்டு, ஐஓஎஸ் போன்ற இயங்குதளத்தினை தான் பயன்படுத்த விரும்புவதாக ஒரு பேச்சு போய் கொண்டிருக்கிறது. சமீபத்தில் நோக்கியாவும், பிளாக்பெர்ரி நிறுவனமும் தனது விற்பனையை மக்கள் மத்தியில் அதிகப்படுத்த, இன்னும் சிறந்த படைப்புகளை கொடுக்க முன் வந்துள்ளனர்.

இதன் அடிப்படையில் 10-ல் இருந்து 15 வரையிலான பிரத்தியேக ஷோ ரூம்களை அமைக்க இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். இதனால் இந்த ஷோ ரூம்களில் பிளாக்பெர்ரி சம்மந்தமான எலக்ட்ரானிக் சாதனங்களை எளிதாக வாங்க முடியும்.

தற்பொழுது கூர்கானில் பிரத்தியேக ஷோ ரூமை திறந்து இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். அடுத்த மாதம் டெல்லியலும் ஒரு பிரத்தியேக ஷோ ரூம் அமைக்க உள்ளது. இதை தொடர்ந்து பெங்களூர், மும்பை, சென்னை, கொல்கத்தா, அகமதாபாத் போன்ற இடங்களிலும் ஷோ ரூம் அமைக்க உள்ளது பிளாக்பெர்ரி இந்திய நிறுவனத்தின் உயர் அதிகாரி சுனில் தத் கூறியுள்ளார்.

பிளாபெர்ரி மின்னணு சாதனங்கள் சம்மந்தமான சந்தேகங்களை நேரடியாக பிளாக்பெர்ரி ஸ்டோர்களிலேயே தீர்வு செய்து கொள்ள பிளாக்பெர்ரி ஒரு புதிய ஏற்பாடை செய்துள்ளது. இந்த ப்ரீமியம் ஸ்டோர் அமைக்கும் பிளாக்பெர்ரியின் திட்டம் உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம் தான்.

ஏனெனில் பொதுவாக பிளாக்பெர்ரி நிறுவனத்தின் எலக்ட்ரானிக் படைப்புகள் பற்றி சந்தேகங்களை மக்கள் நேரடியாக தீர்க்க அந்த அளவு அதிகமான பிளாக்பெர்ரி ஸ்டோர்கள் இல்லை என்பது தான்.

ஆனால் பிளாக்பெர்ரி நிறுவனம் இப்போது அதிக ஷோ ரூம்களை திறந்தால், வாடிக்கையாள்கள் இன்னும் எளிதாக பயனடையுவார்கள் வாடிக்கையாளர்கள் எளிதாக தாங்கள் விரும்பிய பிளாக்பெர்ரி சாதனங்களை ஒரே இடத்தில் வாங்க புதிய வாய்ப்பை ஏற்படுத்துகிறது பிளாக்பெர்ரி. அது மட்டும் அல்லாது இந்தியாவில் பிளாக்பெர்ரியின் விற்பனையை இன்னும் விரிவுபடுத்த முடியும்.

Best Mobiles in India

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X