போன்களின் விலையை அதிரடியாக குறைத்த பிளாக்பெர்ரி!

Posted By: Staff
போன்களின் விலையை அதிரடியாக குறைத்த பிளாக்பெர்ரி!

26 சதவிகிதம் வரை விலை குறைத்து புதிய சலுகையை வழங்குகிறது பிளாக்பெர்ரி. இந்தியாவில் 26 சதவிகிதம் வரை குறைந்த விலையில் பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போன்களை பெறலாம் என்று ஒரு இன்ப அதிர்ச்சியை அறிவித்து இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம்.

மொபைல் உலகில் தனகென்று ஒரு தனி முத்திரையை பதித்து இருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம். தனது சில ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு சலுகையை வழங்கி உள்ளது பிளாக்பெர்ரி. இது வாடிக்கையாளர்களுக்கு ஒரு குஷிகரமான தகவல்.

கடந்த டிசம்பர் மாதத்தில் பிளாக்பெர்ரி நிறுவனம் தனது ப்ளேபுக் டேப்லட்டுக்கு விலையை குறைத்தது. அதன் பிறகு மீண்டும் வாடிக்கையாளர்களுக்கு ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து ஓர் அற்புத வாய்ப்பை ஏற்படுத்தி உள்ளது பிளாக்பெர்ரி.

கர்வ்-8520 பிளாக்பெர்ரி ஸ்மார்ட்போனுக்கு 18 சதவிகிதம் விலை குறைத்துள்ளதால் ரூ.10,990 விலையில் கிடைத்து கொண்டிருந்த இந்த ஸ்மார்ட்போனை ரூ.8,990 விலையில் பெறலாம். அதே போல் டார்ச்-9860 ஸ்மார்ட்போனுக்கு 26 சதவிகிதம் விலையை குறைத்து உள்ளது. இதனால் ரூ.29,990 விலையில் இருந்த இந்த ஸ்மார்ட்போனை ரூ.21,990 விலையில் பெறலாம்.

கர்வ்-9380 மற்றும் கர்வ்-9360 ஸ்மார்ட்போன்கள், ரூ.16,990 மற்றும் ரூ.18,990 விலையில் கிடைக்கும். இதற்கு முன்பு இந்த ஸ்மார்ட்போன்கள் ரூ.20,990 மற்றும் ரூ.19,990 விலையில் கிடைத்து கொண்டு இருந்தன.

வருடா வருடம் 87 சதவிகிதம் லாபத்தினை அடைந்து வரும் பிளாக்பெர்ரி நிறுவனம் கடந்த 2011-ஆம் ஆண்டில் 1 கோடியே 12 லட்சம் யூனிட் ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளது.

குறிப்பிட்ட ஸ்மார்ட்போன்களின் விலையை பிளாக்பெர்ரி நிறுவனம் குறைத்து இருப்பதனால், இதன் மூலம் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை அதிகப்படு்த்த முடியும் என்று பிளாக்பெர்ரியின் உயர் அதிகாரி சுனில் தத் தெரிவித்து இருக்கிறார். இது போன்ற சிறந்த வாய்ப்பு அத்தி பூத்தது போல் சில முறை தான் கிடைக்கின்றன. இது நிச்சயம் பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களுக்கு இனிமையான செய்தி தான்.

Please Wait while comments are loading...

சமூக வலைதளம்

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot