கர்வ்-8530 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு செய்யும் பிளாக்பெர்ரி!

By Super
|
கர்வ்-8530 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு செய்யும் பிளாக்பெர்ரி!

சிடிஎம்ஏ ஸ்மார்ட்போனான இந்த கர்வ்-8530 மாடலுக்கு 12% சதவிகிதம் விலை குறைப்பு செய்திருக்கிறது பிளாக்பெர்ரி நிறுவனம்.

இதற்கு முன்பு ரூ.13,500 விலையில் கிடைத்த இந்த ஸ்மார்ட்போன், இப்போது ரூ.11,990 விலையில் பெறலாம். அடுத்து அடுத்து விலை குறைப்பு செய்து, வாடிக்கையாளர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது பிளாக்பெர்ரி நிறுவனம்.

சிஸ்டமா ஷ்யாம் டெலிசர்வீசஸ், டாடா டெலிசர்வீசஸ், ரிலையன்ஸ் கம்யூனிக்கேஷன் போன்ற நிறுவனங்கள் சிடிஎம்ஏ வசதி கொண்ட ஸ்மார்ட்போன்களை வெளியிடுகின்றன. இதில் டாடா மற்றும் ரிலையன்ஸ் நிறுவனங்கள் சிடிஎம்ஏ மட்டும் அல்லாது ஜிஎஸ்எம் மொபைல்களையும் வெளியிடுகின்றன.

எத்தனை புதிய தொழில் நுட்பங்கள் இருப்பினும், ஜிஎஸ்எம் தொழில் நுட்பம் கொண்ட மொபைல்கள், ஸ்மார்ட்போன்கள்மக்களை அதிகம் கவர்ந்துவிடுவது உண்மை தான்.

ஆனால் இப்போது பிளாக்பெர்ரி நிறுவனம் சிடிஎம்ஏ ஸ்மார்ட்போனான கர்வ்-8530 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைத்து இருப்பது, வாடிக்கையாளர்களுக்கு சிடிஎம்ஏ ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தும் ஆர்வத்தினையும் அதிகப்படுத்தலாம்.

பிளாக்பெர்ரி நிறுவனத்தில் 3 மாதத்திற்கு 1 கோடியே 11 லட்சம் ஸ்மார்ட்போன்களும், 5 லட்சம் ப்ளேபுக்குகளும் விற்பனையாகின்றன என்று தகவல்கள் கூறுகின்றன.

இதற்கு முன்பு ஜிஎஸ்எம் மொபைல்களின் விலையை குறைத்த பிளாக்பெர்ரி நிறுவனம் இப்போது, சிடிஎம்ஏ ஸ்மார்ட்போனின் விலையை குறைத்து இருப்பது பிளாக்பெர்ரி வாடிக்கையாளர்களுக்கு ஒரு இன்பகரமான விஷயம் என்று தான் சொல்ல வேண்டும்.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X