இந்தியா: 25 கோடி வாடிக்கையாளர்களுடன் ரிலையன்ஸ் ஜியோ முன்னனி.! இவ்வளவு வருமானமா?
அதன்படி ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் வருவாய் மட்டும் ரூ.131.7 என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது.
ஏர்டெல், வோடபோன், ஐடியா போன்ற நிறுவனங்களின் வாடிக்கையாளர்களை விட ரிலையன்ஸ் ஜியோ அதிக வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது என்று தான் சொல்ல வேண்டும், பின்பு ஜியோ நிறுவனம் குறைந்த விலையில் பல்வேறு புதிய சலுகைகளை அறிவித்த வண்ணம் உள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.

மேலும் ஜியோ காலாண்டு முடிவு அறிவிக்கப்பட்டுள்ளது, அதில் தெரிவிக்கப்பட்டது என்னவென்றால் 25 கோடியாக வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. மேலும் தொடர்ந்து பல்வேறு புதிய திட்டங்களை அறிமுகம் செய்ய ஜியோ நிறுவனம் தயார் நிலையில் உள்ளது.

ஜியோ காலாண்டு
குறிப்பாக ஜியோ காலாண்டு வருவாய் ரூ.9,240 கோடி என அறிவிக்கப்பட்ட நிலையில், இது முந்தைய காலாண்டை விட 14 சதவிகிதம் அதிகம் என தகவல் வெளிவந்துள்ளது. மேலும் இதில் மொத்த லாபம் மட்டும் ரூ.681 கோடி என்று அறிவிக்கப்பட்டள்ளது.

ஹேத்வே மற்றும் டேட்டாகாம்
பின்பு வருவாய் அறிவிக்கையோடு ஹேத்வே மற்றும் டேட்டாகாம் நிறுவனங்களில் பெருமளவு பங்குகளை வாங்கி இருப்பதாக ஜியோ நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது, மேலும் கடந்த செப்டம்பல் 30, 2018 வரையிலான காலக்கட்டத்தில் மட்டும் ஜியோ சேவையில் சுமார் 25.23 கோடி வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைந்துள்ளனர்.

ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் வருவாய்
அதன்படி ஒவ்வொரு வாடிக்கையாளர்களின் வருவாய் மட்டும் ரூ.131.7 என ஜியோ நிறுவனம் அறிவித்துள்ளது, பின்பு இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சமாக ஒவ்வொரு மாதமும் சுமார் 11ஜிபி டேட்டா பயன்படுத்தி வருகின்றனர்.

771கோடி ஜிபி டேட்டா
மேலும் சாரசரி வாய்ஸ் கால் பயன்பாட்டை பொறுத்தவரை வாடிக்கையாளர்கள் 761 நிமிடங்கள் பயன்படுத்துகின்றனர், ரிலையன்ஸ் ஜியோ வாடிக்கையாளர்கள் மொத்தம் 771கோடி ஜிபி டேட்டாவும், 53,379 கோடி நிமிடங்கள் வாய்ஸ் கால் பயன்படுத்தி இருக்கின்றனர். அதன்படி இது மாதம் 410 கோடி மணி நேரங்கள் ஆகும்.

ஜிகாஃபைபர் பிராட்பேன்ட்
இந்தியாவில் ஜிகாஃபைபர் பிராட்பேன்ட் சேவைகளை பொருத்த வரை இந்தியா முழுக்க 1,100-க்கும் அதிக நகரங்களில் இருந்து பலர் ஆர்வமுடன் முன்பதிவு செய்து வருகின்னறனர் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications