அடேங்கப்பா...ரிலையன்ஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு ரூ.10 லட்சம் கோடியை தாண்டியது.!

|

ரிலையன்ஸ் நிறுவனம் தயாரிப்புகளுக்கு இந்தியா முழுவதும் நல்ல வரவேற்ப்பு உள்ளது என்றுதான் கூறவேண்டும். குறிப்பாக இந்நிறுவனத்தின் அதிபர் முகேஷ் அம்பானி உலக அளவில் முன்னணி பணக்காரராக திகழ்ந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஜியோ டெலிபோன்

ஜியோ டெலிபோன்

குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் எண்ணை சுத்திகரிப்பு ஆலை,கியாஸ் ஆலை, ஜியோ டெலிபோன் என பல்வேறுநிறுவனங்களை நடத்தி வரும் அவருடைய சொத்து மதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ரிலையன்ஸ்
நிறுவனத்தின் பங்கு சந்தை மதிப்பு படி 1பங்கின் விலை ரூ.1579,95 காசாக உயர்ந்தது. இந்த ஆண்டில் மட்டும் 41.1சதிவிகிதம் உயர்ந்துள்ளது.

ரூ.10லட்சத்து 1555கோடி

ரூ.10லட்சத்து 1555கோடி

எனவே ரிலையன்ஸ் நிறுவனத்தின் மொத்த பங்குகளின் அடிப்படையில் அவற்றின் சொத்து மதிப்பு ரூ.10லட்சத்து 1555கோடியாக உயர்ந்துள்ளது. அதாவது இந்தியாவில் வேறு எந்த தனிப்பட்ட நிறுவனதும் 10லட்சம் கோடி சொத்து மதிப்பை எட்டியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 எச்.டி.எப்.சி

இந்தியாவில் இரண்டாவது மிகப்பெரிய நிறுவனமாக செயல்படும் டி.சி.எஸ்.சின் சொத்து மதிப்பு ரூ.7லட்சத்து 75ஆயிரத்து 501 கோடியாக உள்ளது. 3-வது இடத்தில் உள்ள எச்.டி.எப்.சி வங்கியின் மதிப்பு ரூ.6லட்சத்து 92ஆயிரம் கோடியாக உள்ளது. 4-வது இடத்தில் பிடித்தது இந்துஸ்தான் லீவர் நிறுவனம், இதன் சொத்து மதிப்பு ரூ.4 லட்சத்து 51ஆயிரம் கோடியாக இருக்கிறது.

தனிப்பட்ட சொத்து

தனிப்பட்ட சொத்து

தற்போது அம்பானி அவர்களின் வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக இருப்பது அவருடைய ஜியோ போன் நிறுவனம் மிகப்பெரிய வளர்ச்சியை பெற்று ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு மதிப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. இந்த நிறுவனத்தின் பங்கு உயர்ந்திருப்பதால் முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்தும் அதிகளவில் உயர்ந்திருக்கிறது. குறிப்பிட்டு சொல்லவேண்டும் என்றால் அவருக்கு தனிப்பட்ட முறையில் ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் கோடி சொத்து இருக்கிறது.

பட்ஜெட் விலையில் இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5அறிமுகம்.!பட்ஜெட் விலையில் இதய துடிப்பு சென்சார் கொண்ட இன்ஃபினிக்ஸ் பேண்ட் 5அறிமுகம்.!

 டாப்-10 பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்

டாப்-10 பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்

ரிலையன்ஸ் நிறுவனத்தின் பங்கு உயர்ந்திருப்பதால் அவர் உலகின் டாப்-10 பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார். கடந்த தடவை போர்ப்ஸ் பத்திரக்கை வெளியிட்ட பட்டியலில் அவர் 13-வது இடத்தில் இருந்தார், இப்போது பங்கு மிதிப்பு
உயர்வால் பட்டியிலில் முந்தி இருக்கிறார்.

சார்லஸ் கோச், லேரிபேச்  உள்ளிட்டோரை முந்தி இருக்கிறார்

சார்லஸ் கோச், லேரிபேச் உள்ளிட்டோரை முந்தி இருக்கிறார்

இப்போது இருக்கும் ரிலையன்ஸ் நிறுவனத்தின் ரூ.10லட்சம் கோடி சொத்து என்பது குவைத்,உக்ரைன் உள்ளிட்ட 153நாடுகளில் உள்நாட்டு உற்பத்தியை விட அதிகமாகும். முகேஷ் அம்பானியின் தனிப்பட்ட சொத்தை ஒப்பிடும்போது இந்தியாவின் ஒரு ஆண்டு செலவில் 5-ல் 1பங்கு ஆகம். மேலும் பணக்காரர்கள் பட்டியலில் டேவிட்கோச்,சார்லஸ் கோச், லேரிபேச் உள்ளிட்டோரை முந்தி இருக்கிறார் முகேஷ் அம்பானி.

Most Read Articles
Best Mobiles in India

English summary
RIL becomes first Indian company to cross ₹10 trillion in market cap : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X