Home
News

சும்மா இல்ல., ரூ.12,000 தள்ளுபடி- சிறந்த கேமிங் ஸ்மார்ட்போனான ஆசஸ் ஆர்ஓஜி போன்3 வாங்க சரியான நேரம்!

பிளிப்கார்ட்டில் பிக் சேவிங் தின விற்பனை தொடங்கியுள்ளது. இந்த விற்பனையானது டிசம்பர் 21 வரை நடைபெறுகிறது. இந்த விற்பனையில் ஸ்மார்ட்போன்கள், ஹெட்ஃபோன்கள் உள்ளிட்ட பிற கேட்ஜெட்கள் தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இந்த விற்பனையின் மிகப்பெரிய அம்சம் ஆசஸ் ஆர்ஓஜி போன்3-க்கு வழங்கப்படும் சலுகையாகும். பிளிப்கார்ட் பிக் சேமிப்பு தின விற்பனையில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.12000 வரை தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. சக்தி வாய்ந்த செயலி மற்றும் அதிக புதுப்பிப்பு வீதத்துடன் கூடிய டிஸ்ப்ளே போன்ற அம்சங்களுடன் இந்த ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது. சிறந்த கேமிங் ஸ்மார்ட்போன் வாங்க திட்டமிட்டிருந்தால் அதற்கு இது சரியான நேரமாகும். காரணம் பிளிப்கார்ட் பிக் சேவிங் தின விற்பனையில் ஆச் ஆர்ஓஜி போன் 3 மாடலுக்கு சிறந்த அதீத தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த சலுகை குறித்த முழு விவரங்களை பார்க்கலாம்.

ஆசஸ் ஆர்ஓஜி போன்3: சலுகை விலை

ஆசஸ் ஆர்ஓஜி போன்3: சலுகை விலை

ஆசஸ் ஆர்ஓஜி போன்3 ஸ்மார்ட்போனின் அடிப்படை மாறுபாடான 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் விலை ரூ.46999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.34,999 என்ற விலையில் கிடைக்கிறது. அதேபோல் 12 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி உள்சேமிப்பு வேரியண்ட் மாடலின் விலை ரூ.49,999 ஆக இருந்த நிலையில் தற்போது இந்த ஸ்மார்ட்போன் ரூ.38,999 என கிடைக்கிறது. எஸ்பிஐ வங்கி கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் இரண்டு மாடல்களுக்கும் 10% உடனடி தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த தள்ளுபடி மூலம் சாதனம் வாங்கும் போது இதை ரூ.33999 என்ற விலையில் வாங்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே

6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே

ஆசஸ் ஆர்ஓஜி போன் 3 மாடல் ஆனது 6.59-இன்ச் முழு எச்டி பிளஸ் AMOLED டிஸ்ப்ளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது, பின்பு 144Hz புதுப்பிப்பு வீதம், 270Hz தொடு மாதிரி விகிதம், HDR10 + சான்றிதழ், 391ppi பிக்சல் அடர்த்தி, 1000nits பிரைட்நஸ், கார்னிங் கொரில்லா கண்ணாடி 6 பாதுகாப்பு உள்ளிட்ட பலவேறு ஆதரவுகளை கொண்டுள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதி

குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதி

ஆசஸ் ரோக் போன் 3 சாதனத்தில் மிகவும் எதிர்பார்த்த குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 பிளஸ் பிராசஸர் வசதியுடன் அட்ரினோ 650ஜிபியு ஆதரவும் உள்ளது. மேலும் ஆண்ட்ராய்டு 10 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு இந்த ஸ்மார்ட்போன் வெளிவந்துள்ளதால் பயன்படுத்துவதற்கு மிகவும் அருமையாக இருக்கும்.

64 மெகாபிக்சல் பிரதான கேமரா

64 மெகாபிக்சல் பிரதான கேமரா

ஸ்மார்ட்போனின் பின்புறம் 64எம்பி சோனி சென்சார் + 13எம்பி அல்ட்ரா வைடு லென்ஸ் + 5எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும் 24எம்பி செல்பீ கேமரா, எல்இடி பிளாஸ், செயற்கை நுண்ணறிவு அம்சம் என பல்வேறு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். ஸ்மார்ட்போனில் 6000எம்ஏஎச் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது, கண்டிப்பாக சார்ஜ் பற்றிய கவலை இருக்காது,மேலும் 30வாட் பாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்ப வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவந்துள்ளது இந்த அட்டகாசமான ஸ்மார்ட்போன் மாடல்.

இணைப்பு ஆதரவுகள்

இணைப்பு ஆதரவுகள்

5 ஜி, 4 ஜி வோல்டிஇ, புளூடூத் 5.1, வைஃபை, டூயல் சிம் மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் உள்ளிட்ட பல்வேறு இணைப்பு ஆதரவுகள் இவற்றுள் அடக்கம். 6x பெரிய ஹீட்ஸிங்க், மறுவடிவமைப்பு செய்யப்பட்ட காப்பர் 3டி vapour chamber மற்றும் பெரிய கிராஃபைட் படம் ஆகியவற்றை வழங்கும் சமீபத்திய கேம்கூல் 3 வெப்ப-சிதறல் அமைப்புடன் இந்த ஸ்மார்ட்போன் வருகிறது. சுருக்கமாக கேமிங் வசதிக்கு என்றே இந்த ஸ்மார்ட்போன் உருவாக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
Right Time to Buy Best Gaming Smartphone: Asus ROG Phone 3 Gets Huge discount in India
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X